கொரோனா: உயிர்காக்கும் பிளாஸ்மா தானம்- இந்த நோயாளிகள் அவசியம் தரக்கூடாது
உயர் ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம்
சென்னை: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது பிளாஸ்மா சிகிச்சை. தமிழ்நாட்டில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம், யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யக்கூடாது என்ற விதி முறைகள் உள்ளன. உயர் ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் கொடுக்க முடியாது.
பாம்பின் விஷமே சில நேரங்களில் மிகக்கொடிய நோய்களுக்கு மருந்தாகும். வைரத்தை வைரத்தால் அறுப்பது போலத்தான் பிளாஸ்மா சிகிச்சை. வெளிநாடுகளில் மட்டுமே இருந்த பிளாஸ்மா தெரபியானது இந்தியாவிலும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும் அனுமதித்துள்ளது. கேரளா, குஜராத்,பஞ்சாப், டெல்லி போல தமிழ்நாட்டிலும் பிளாஸ்மா வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்னும் தொற்று இல்லை என பரிசோதனை முடிவு பெறப்பட்டு நாளிலிருந்து 14வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். பிளாஸ்மா என்பது ரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம். பிளாஸ்மா சிகிச்சை முறையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட பிளாஸ்மா கொரோனா வைரஸ் நோயாளிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா சிகிச்சை
கொரோனாவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உரிய மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்களும் ஆய்வாளர்களும் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதுவரை சில சிகிச்சை முறைகளைக் கையாண்டு நோயாளிகளை குணமாக்கி வருகின்றனர். பிளாஸ்மா சிகிச்சை கொரோனா தொற்று நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி
பிளாஸ்மா தெரபியில் கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்ட நோயாளியின் இரத்தத்திலிருந்து ஆன்டிபாடிகளைப் பயன்படுத்தி கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இரத்த அணுக்களும் அதிகரிக்கிறது. இதனால் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடல் தயாராகிறது. நோயில் இருந்து மீண்டவர்கள் உடலில் எந்த அளவுக்கு எதிரணுக்கள் உள்ளன என்பதைத் தீர்மானிக்க எலிசா சோதனை நடத்தப்படும்.

தானம் கொடுப்பது எப்படி
ரத்த தானம் செய்வது போன்றுதான் செய்யப்படுகிறது. ரத்த தானத்திற்கு ஆகும் நேரமே இதற்கும் ஆகும். இதற்கும் ஒரு டியூப் போல் இருவரின் நரம்புகளிலும் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர் உடலில் பிளாஸ்மா நீக்கப்பட்டு பின் இரத்த அணுக்கள் செலுத்தப்படுகிறது. இது இரத்த தானம் போல் ஒரு முறை அல்லாமல் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த பிளாஸ்மா தெரப்பி செய்யப்படுகிறது. இதற்கு கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டு பேர் பாதிக்கப்பட்டவருக்கு உதவ வேண்டியிருக்கும்.

பிளாஸ்மா தானம் யார் தரலாம்
பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 - 65 வயது வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் அவர்கள் உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்படும். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்னும் தொற்று இல்லை என பரிசோதனை முடிவு பெறப்பட்டு நாளிலிருந்து 14வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.

பிளாஸ்மா தானம் எப்படி
பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்புசக்தி அளவிடப்பட்டு தகுதியான நபர்களிடம் இருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படுகிறது. இதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 28 நாட்கள் இடைவெளி விட்டு 2வது முறை தானம் அளிக்கலாம். ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பிளாஸ்மா தானம் கொடுக்கலாம்.

யாரெல்லாம் பிளாஸ்மா தானம் தர முடியாது
தானமாக பெறப்பட்டு பிளாஸ்மா மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். உயர் ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் கொடுக்க முடியாது.

வரப்பிரசாதமான பிளாஸ்மா தெரபி
கோவிட்-19 நோய் தொற்று உள்ளவர்களுக்கு ஸ்டெராய்டு மற்றும் இதர மருந்துகள் பலனளிக்காத போதும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் பொழுது, பிளாஸ்மா தெரபி அளிப்பதன் மூலம் நோயிலிருந்து குணமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உடலில் செலுத்தப்பட்ட பிளாஸ்மா நோயாளிகளின் உடலில் இருக்கும் கொரோனா வைரஸின் செயல்பாட்டை நிறுத்தி கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கையும் குறைத்து கோவிட்-19 நோயாளிகள் செயற்கை சுவாசத் தேவையை குறைக்க உதவுகிறது. கொரோனா நோயாளிகளின் உயிரைக்காக்க துணிந்து பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வாருங்கள் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications