ஓய்வூதியதார்களுக்கு சூப்பர் திட்டம்.. பென்ஷன்தாரர்களுக்கான மத்திய அரசின் மாஸ் பிளான்.. இனி நிம்மதி
சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கான மாதந்தோறும் 1000 ரூபாய் பெறும் திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா? மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.
பொதுமக்களின் நன்மைக்காக எத்தனையோ நன்மைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.. இதற்காக பல்வேறு திட்டங்களையும் அமல்படுத்தி, அவைகள் மூலம் மக்கள் பயன்பெறவும் வழிவகை செய்து வருகிறது.
அந்தவகையில், மூத்த குடிமக்களுக்கான பிரதமர் வயா வந்தனா யோஜனா (பி.எம்.வி.வி) ஓய்வூதிய திட்டத்தை நிதி அமைச்சகம் சமீபத்தில் மாற்றியிருந்தது..

திட்டங்கள்: இதற்கு பிறகு, எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், மத்திய அரசின் மானியத்துடன் இணைக்கப்படாத, மத்தியஅரசு பங்கேற்காத நிலையில், பிரதமர் வயா வந்தனா யோஜனா ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.. இந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2023 மார்ச் 31 வரையும் நீட்டித்திருந்தது..
இப்படி இன்னும் ஏராளமான ஓய்வூதிய திட்டங்கள் வயதானோருக்காக செயல்படுத்தப்பட்டுள்ளதால், முதியோர்கள் மாதந்தோறும் நல்ல வருமானத்தை பெற முடிகிறது.. இதனால் இந்த திட்டங்கள் எல்லாமே பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது. குறிப்பாக "சாரல் யோஜனா பென்ஷன்" திட்டத்துக்கு ஏக வரவேற்பு உள்ளது.
சாத்தியமில்லை: இதற்கு காரணம், பென்ஷன் என்றாலே, வேலைக்கு போகிறவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலைமை உள்ளது.. அதுவும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பென்ஷன் என்பதே சாத்தியமில்லாத விஷயம்.. அப்படியிருக்கும், சுயதொழில் புரியும் நபர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பென்ஷன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021 ஏப்ரல் 1 முதல் அறிமுகமான திட்டமாகும்.
"சாரல் யோஜனா பென்ஷன்" திட்டத்தில் குறைந்தபட்ச திட்ட தொகையாக மாதம் 1,000 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த தொகையை மாதாந்தர தவணைகளிலோ, 3 மாதத்திற்கு ஒரு முறையோ, 6 மாதத்திற்கு ஒரு முறையோ, அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செலுத்தி வரலாம். ஒருமுறை மட்டும் பிரீமியம் செலுத்தும் திட்டமும் இதில் அடக்கம். குறைந்தபட்சம் 1000 என்றால், அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் ஒருவர் செலுத்தலாம்.
பிரீமியம்: எவ்வளவு அதிகமாக பிரீமியம் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு ஓய்வு காலத்துக்குப் பிறகு, பென்ஷன் பணம் ஒருவருக்குக் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் ஒருவர் சேர்ந்த 6 மாத காலத்தில் தமது திட்டத்தை சரண்டர் செய்து பென்ஷன் தொகையைப் பெற முடியும். உதாரணமாக, ஒருவர் ஒருமுறை ரூ.10 லட்சம் ப்ரீமியமாக செலுத்திவிட்டால் மாதம் 5,000 ரூபாய் வரை பென்ஷன் தொகை வழங்கப்படும்.
முதலீடு செலுத்தும் பணத்துக்கும் பாதுகாப்பு கிடைக்கும். ஓய்வூதியம் கிடைப்பதால் நிம்மதியாகவும் இருக்கலாம். "சாரல் யோஜனா பென்ஷன்" திட்டம் பங்கு சந்தையில் முதலீடு செய்யாது என்பதால் ரிஸ்க் குறைவாக உள்ள திட்டமாகும்.
பாலிசிதாரர்கள்: இந்த திட்டத்தில் இணையும்போது பாலிசிதாரர் ஒருமுறை மட்டும் பிரீமியம் தொகையை செலுத்தினால் போதும்.. பிறகு ஒவ்வொரு மாதமும் மாதாந்திர ஓய்வூதியமாக ரூபாய் 1000 முதல் பெற்றுக்கொள்ள முடியும். மாதாந்திர அடிப்படையில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை என விருப்பத்தின் பேரில் பென்ஷன் தொகையை பெற்றுக் கொள்ள முடிகிறது என்பதால், மூத்த குடிமக்களிடம் மிகுந்த வரவேற்பை இந்த திட்டம் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications