லீவு பற்றி மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்.. கலெக்டர்கள் பார்த்துப்பாங்க.. அன்பில் மகேஷ் அட்வைஸ்
சென்னை: ஒவ்வொரு இடங்களிலும் அதி கனமழை பெய்யும் போதும் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படுமா அல்லது விடுமுறை விடப்படுமா என்று கேள்விகள் கேட்கப்படுகிறது. மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

மாணவர்கள் தொடர்ந்து படித்து வருமாறு நான் கூறியிருந்தேன். தடை எதுவும் இருந்தாலும் அதனை முதல்வர் ஸ்டாலின் பார்த்துக்கொள்வார் என்று அவரே சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட 573 கோடி ரூபாய் முதல்கட்டமாக நமக்கு வராமல் இருக்கிறது. இந்த தவணை தான் டீச்சிங் மற்றும் நான் டீச்சிங்கில் உள்ள 32,298 பேருக்கு சம்பளம் வர வேண்டிய விஷயம்.. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இந்த பணத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது .
மத்திய அரசு கொடுக்காமல் உள்ளதால் தமிழக அரசு சார்பில் இந்த தொகையை கொடுப்பது குறித்து முடிவெடுத்துள்ளோம். இந்த முதல் தவணையை மத்திய அரசு இன்னும் தராமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வர வேண்டிய நிதியை பல்வேறு காரணங்களை சொல்லி நிறுத்தி வைத்துவிடாமல் தொடர்ந்து வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதியும் தருகிறார். எனவே பள்ளிக்கல்வித்துறையை மாநில அரசு கைவிடாது. மும்மொழி கொள்கையினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மத்திய அரசின் கொள்கைகளை ஏற்றால் தான் இதற்கான நிதிகள் எல்லாம் வழங்கப்படும் என்று சொல்வது ஏற்க முடியாது.
மத்திய அரசு நிதி கொடுக்காத போது மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் செய்யப்படுகின்றன. மும்மொழி கொள்கை போன்ற திட்டங்கள் இல்லாமலே நம்மால் நன்றாக செயல்பட முடிகிறது என்பதை நம்மிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு இடங்களிலும் அதி கனமழை பெய்யும் போதும் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படுமா அல்லது விடுமுறை விடப்படுமா என்று கேள்விகள் கேட்கப்படுகிறது. எந்த மாவட்டத்தில் அதிக மழை பெய்கிறதோ, அதிக பாதிப்புகள் ஏற்படுகிறதோ, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறதோ அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அன்றைக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அவர்களே முடிவு எடுப்பார்கள்.
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுக்கலாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டும். எந்த பதற்றமும் இல்லாமல் ஆசிரியர்களிடம் தெளிவுபெற்று பொதுத்தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications