Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லெட்டரை எடப்பாடி பேருக்கு அனுப்புங்க! குட்டையை குழப்பிய புள்ளி! யாருய்யா அது? துப்பு துலக்கிய ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், ஒரே நாடு ; ஒரே தேர்தல் நடத்துவது குறித்து எடப்பாடியின் கருத்தை அறியும் வகையில் அவருக்கு கடிதம் அனுப்பியது மத்திய அரசின் சட்ட ஆணையம். அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமியை, அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது எடப்பாடிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில்தான் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் என்று கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை அக்டோபர் 3-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் கொடுத்த ஒப்புகையை (அக்கனாலெட்ஜ்மெண்ட்) தேர்தல் ஆணையம் தங்கள் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்தல்

தேர்தல்

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி தரப்பை குஷியில் ஆழ்த்தியது, இது கிட்டத்தட்ட எடப்பாடியை தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ஆகிறது. உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு விசாரணை நடக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எடப்பாடிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ய மத்திய சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

அங்கீகாரம்

அங்கீகாரம்

இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு சென்றுள்ளது. அந்த வகையில் அதிமுகவிற்கும் அழைப்பு சென்றுள்ளது. இதில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் அழைப்பு சென்றுள்ளது. அதாவது அதிமுகவில் இருந்து வேறு யாருக்கும் அழைப்பு செல்லவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எடப்பாடிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதை உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி வாதம் வைக்கவும் வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. நாங்கள்தான் உண்மையான அதிமுக. எடப்பாடிதான் பொதுச்செயலாளர். அதனால் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு கோரிக்கை வைக்க வாய்ப்பு உள்ளது.

 எடப்பாடி ஆதரவு கொண்டாட்டம்

எடப்பாடி ஆதரவு கொண்டாட்டம்

இதனை எடப்பாடி ஆதரவாளர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இது ஓபிஎஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ்சும் டென்சனானார். அதிமுக பொதுக்குழு செல்லுமா? செல்லாதா? என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதும், எடப்பாடி தலைமையில் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் கிடப்பில் வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ பதவி குறித்து எடப்பாடியை அழைக்கக் கூடாது என்று ஏற்கனவே மத்திய அரசிடம் ஓபிஎஸ் கடிதம் மூலம் வலியுறுத்தியிருத்துயுள்ளார். இந்த நிலையில், மத்திய அரசின் சட்ட ஆணையமே எடப்பாடியை பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டதால் தான் ஓபிஎஸ்சின் அதிர்ச்சிக்கு காரணம்.

எப்படி

எப்படி

எப்படிங்க இப்படி அவருக்கு அனுமதி கொடுக்கலாம். அவர் மட்டும்தான் அதிமுகவா? நான் இருக்கிறேனா? இன்னும் பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லையே? அப்படி இருக்கும் போது எப்படிங்க பொதுச்செயலாளர் என்று கடிதம் எழுதலாம்? என்னங்க நியாயம் இது? யாரு இதுக்கு காரணம் என்று ஓபிஎஸ் புலம்பி இருக்கிறாராம். இந்த நிலையில், இது குறித்து விசாரித்து உண்மையை தெரிந்தகொண்ட பிறகே ஓபிஎஸ்சின் பதட்டம் குறைந்து கூலாகியிருக்கிறார். எடப்பாடி பக்கம் இருக்கும் முக்கியமான நபர் ஒருவர்தான் குட்டையை குழப்பி இருக்கிறார் என்பதை ஓ பன்னீர்செல்வம் கண்டுபிடித்து உள்ளார். அந்த உண்மை ஓ பன்னீர்செல்வத்தை கூலாக்கி இருக்கிறதாம். என்ன உண்மை அது?

உண்மை

உண்மை

இது கடிதம் குறித்து டெல்லி தொடர்பில் உள்ள சோர்ஸ் மூலம் அவர் விசாரிக்க, "ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கும் முடிவை 2019-ல் எடுத்திருந்தது மத்திய அரசு. தேசிய சட்ட ஆணையத்தின் மூலம் இத்தகைய கருத்தினைக் கேட்கவும் முடிவு செய்து அது குறித்த ஒரு கடிதத்தை தயாரிக்கவும் சொல்லியிருந்தது மத்திய அரசு. அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கும் அந்த கடிதமும் தயாரிக்கப்பட்டது. ஆனால், 2019-ல் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை. கிடப்பில் வைக்கச் சொன்னது மத்திய அரசு. தற்போது அந்த கடிதத்தை அரசியல் கட்சிகளுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளனர்.

 கடிதம்

கடிதம்

அந்த வகையில், அதிமுக கட்சிக்கு எந்த முகவரிக்கு அனுப்புவது என சட்ட ஆணையத்தின் பிரிவு அலுவலர்களுக்கு ( செக்சன் ஆஃபிசர்ஸ்) தெரியாததால், அதிமுக தம்பிதுரையிடம் கேட்டுள்ளனர். அவரும், 'எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச்செயலாளர்' என்று தெரிவித்து கட்சி அலுவலக முகவரியை சொல்லியிருக்கிறார். அதிமுகவில் நடக்கும் அரசியல் பிரச்சனைகள் செக்சன் அலுவலர்களுக்கு தெரியாததால் தம்பிதுரை சொன்னதை அப்படியே பிரிண்டு செய்து அனுப்பி வைத்து விட்டனர்" என்று கூறி உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது எல்லாம் இவர்களுக்கு தெரியாது. என்ன பிரச்சனை நடக்கிறது என்பதே தெரியாது. எம்பி தம்பிதுரை டெல்லியில் அதிகாரிகளுடன் தொடர்புள்ள இருப்பதால் அவரிடம் கேட்டு, அவர் சொன்னதை அப்படியே லெட்டராக் அடித்துள்ளனர். அவரும் எடப்பாடி பெயரை போட்டுக்கோங்க என்று சொல்லி ருக்கிறார். இந்த தகவலை ஓபிஎஸ்சிடம் அவரது சோர்ஸ் தெரிவிக்கவும் தான் அவரது டென்சன் குறைந்தது என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதற்கிடையே இப்படிப்பட்ட தவறுகள் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள் என டெல்லியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் ஓபிஎஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+