ரத யாத்திரையில் செத்தவர்கள் யார்? மணிப்பூரில் கலவரம் செய்தது யார்? அது அரசியல் படுகொலை இல்லையா?
சென்னை: ஜூன் 25 ஆம் தேதியை அரசியல் சாசன படுகொலை நாளாக பாஜக மத்திய அரசு அனுசரிக்க உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு என்ன மாதிரியான நெருக்கடிகள் எழும்?
ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை செய்யப்பட்ட நாள் என இனிமேல் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது எக்ஸ் தளத்தில் அந்த அரசாணை நகலைப் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர், "ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் வெட்கக்கேட்டின் வெளிப்பாடாக, தேசத்தின் மீது எமர்ஜென்சியை விதித்து நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாத லட்சக்கணக்கான மக்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.

இனி இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதியை 'சம்விதான் ஹத்யா திவாஸ்' நாளாக கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைச் சகித்த அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும்" என்று கூறியுள்ளார்.
அவசரநிலை பிரகடனம் செய்தபோது நாடு முழுவதும் அதற்கு எதிரான கொந்தளிப்பு இருந்தது. பலர் கட்டாய குடும்ப கட்டுப்பாட்டுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். மாநில அரசு முடக்கப்பட்டது. நாடு முழுவதும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால், இதுவரை பாஜக இந்த அவசரநிலைக்கு எதிராக ஒரு கருத்தையும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் முன்வைக்கவில்லை. இப்போது இந்திரா இதை அமல்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
அதனையொட்டி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இப்போது சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. பாஜகவின் இந்த மூவ் எதை நோக்கி நகர்கிறது? அது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பல்வேறு விசயங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். அய்யநாதன் பேசுகையில், "இந்த விவாகரத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆண்டு தோறும் இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலையை நினைவுகூர்ந்து கொண்டுதான் உள்ளன. ஆனால், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பாஜக இந்திரா காந்தியின் எமெர்ஜன்சியை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அதற்கு முன்பாக வாஜ்பாய் ஆட்சி இருந்தபோதுகூட பாஜகவினர் எமர்ஜென்சியை பற்றி எந்தக் கருத்தையும் கூறியதில்லை.
இவ்வளவு ஏன் பாஜக சார்பாக எமர்ஜென்சி தினத்தன்று ஏதாவது பொதுக்கூட்டமோ, கட்டணக் கூட்டமோ இதுவரை நடத்தப்பட்டுள்ளதா? அதற்கு எதாவது உதாரணம் இருக்கிறதா? வாஜ்பாய் சிறையிலடைக்கப்பட்டார். அத்வானி, ஜார்ஜ் பெர்னாடஸ் போன்ற பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூட உடல்நிலை பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையிலிருந்தார். ஆனாலும், அவர் கைது செய்யப்பட்டார்.

இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது ஜூன் 25 ஆம் தேதி இந்திய அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் என்று அமித்ஷா அரசாணை வெளியிடுவதற்கு என்ன காரணம்? பாஜக இந்திய அரசியல் சாசனத்திற்குச் செயல்படுகிறது. ஆகவே அதைக் காப்பாற்ற வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது. ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது எனப் பல குற்றச்சாட்டுகளை இந்தியாவில் உள்ள கட்சிகள் சொல்லவில்லை. உலகில் உள்ள பல்வேறு நபர்கள் சொல்கிறார்கள். ஆகவே, அதை மூடி மறைக்க இப்படி ஒரு அரசாணையை மோடி அரசு வெளியிடுகிறது.
இதைத்தான் குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதத்தின் போது மோடி பேசினார். சபாநாயகர் ஓம் பிர்லா தீர்மானமே கொண்டுவந்தார். பாஜக ஆட்சியில் 124ஏ ராஜத்துரோக வழக்குகள் அதிகமாகப் பதியப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றமே இனிமேல் இந்த வழக்கைப் போடக்கூடாது என்று சொன்ன பிறகு அதை மாற்ற உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இப்போது இவர்கள் அதைவிடக் கடுமையாகச் சட்டத்தை மாற்றி இருக்கிறார்கள். அதற்காக இந்திரா காந்தி செய்ததை நான் ஆதரிக்கவில்லை. அது ஒரு சர்வாதிகாரம்தான். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் அவ்வாறு செய்தார். அதை ஏற்கவே முடியாது என்பது உண்மை.
ஆனால், குற்றவியல் சட்டங்களை மாற்றினார்களே அவை எங்கே விவாதிக்கப்பட்டன? மக்களவையில் அதைக் குறித்து விவாதம் செய்யப்பட்டதா? வெறுமனே அரசியல் சாசன படுகொலை என்பது 1975 ஜூன் 25 அன்று மட்டும் நடக்கவில்லை. பாஜக பலமுறை மக்களவையில் அதைச் செய்துள்ளது. இவர்கள் நடத்திய ரதயாத்திரையின் போது படுகொலை செய்யப்பட்டவர்கள் எத்தனைப் பேர்? குஜராத்தில் படுகொலை செய்தார்களே? இப்போது மணிப்பூரில் 60 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வெளியே கொண்டுவர பாஜக அரசு எதையாவது இதுவரை செய்துள்ளதா? இது அரசியல் சாசன படுகொலை இல்லையா?
ஆகவே இதை வைத்து மக்களைக் காங்கிரசுக்கு எதிராகத் திருப்ப முடியுமா? என பாஜக கனவு காண்கிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றார் மோடி. தேர்தலுக்கு முன்பாக பார்வையாளர்கள் மாடத்தில்தான் காங்கிரசுக்கு இடம் கிடைக்கும் என்றார். இன்று 99 பேர் உள்ளே காங்கிரஸ் சார்பாக உள்ளனர். இவர்கள் போக 143 பேர் எதிர்க்கட்சியாக ஒரே அணியில் உள்ளனர். அதை மோடி எதிர்பார்க்கவில்லை. அதை உணர்ந்துதான் பட்ஜெட் கூட்டத் தொடரில் மோடி வந்து அவையில் உட்கார்ந்தார். கடந்த 10 ஆண்டுகளில் மோடி இப்படி அவைக்கு வந்து உட்கார்ந்த ஒரு நாளை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?" என்கிறார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications