"பச்சை கொடி".. செம ட்விஸ்ட்.. "அவர்" என் நண்பர்.. ஓபனாக போட்டுடைத்த டிடிவி தினகரன்.. அப்போ "அதே"தானா
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இதில் யாருக்கு ஆதரவு என்று டிடிவி பேட்டி தந்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவா? ஓபிஎஸ்ஸுக்கு தன்னுடைய ஆதரவா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெளிவுபடுத்தி உள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம் உச்சக்கட்டத்துக்கு சென்றுவிட்டது.. வரும் 23ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், ஓபிஎஸ் பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது.

ஆயுதம்
இதனால், ஒற்றை தலைமை கோரிக்கையை கைவிடுவதா, அல்லது ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதா என்ற குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி தவித்து வருகிறார்... இன்னொரு பக்கம், ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சிகளிலும் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், ஓபிஎஸ் எதற்கும் பிடிகொடுக்காமல் உள்ளார்.. தனக்கு எதிராக கட்சிக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டால், பாஜக அல்லது சசிகலா என்ற ஆயுதத்தை கையில் எடுக்கவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

கறார் தன்மை
அதற்கேற்றபடி, சசிகலா விஷயத்தில் தொடர்ந்து பூடகமாகவே பதிலளித்து வருகிறார்.. ஏற்கனவே சசிகலா விஷயத்தில் கறார்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லாத நிலையில், ஓபிஎஸ்ஸின் மவுனம், எடப்பாடி தரப்புக்கு கலக்கத்தை தந்து வருகிறது.. ஒற்றை தலைமை செயல்படுத்தப்படுமானால், சசிகலாவை நேரில் சென்று ஓபிஎஸ் சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ராமநாதபுரத்தில், ஓபிஎஸ், சசிகலா போட்டோவை போட்டு போஸ்டர்களும் அடித்து ஒட்ட ஆரம்பித்து விட்டனர்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால், சசிகலாவும் சரி, டிடிவி தினகரனும் சரி, அமைதியாக இருக்கிறார்கள்.. அதிமுகவில் நடப்பதை கூர்ந்து கவனித்து வந்தாலும், இந்த ஒரு வாரமாகவே அதைபற்றி பேச்சு எடுக்காமல் உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில், டிடிவி தினகரன் இதை பற்றி பேசியுள்ளார்.. ஒரு தனியார் டிவியில் டிடிவி தினகரனிடம், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, இவர்கள் இருவரில் யாருக்கு உங்கள் ஆதரவு? ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கான ஆதரவு அங்கே இல்லாமல் போனால், நீங்கள் ஆதரவு தருவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது..

டக் டக் பதில்
எதற்குமே டக்டக்குன்னு பதில் சொல்லும், தினகரன் இந்த கேள்விக்கு உடனே பதில் சொல்லவில்லை. ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.. பிறகு அவர் பாணியில் சிரித்து கொண்டே, "யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.. ஆனால், என் நண்பர் பன்னீர்செல்வம்.. அவர் வருத்தப்படக்கூடிய அளவுக்கு அங்கே ஏன் அப்படியெல்லாம் நிகழ்வுகள் நடக்கணும்? நான் தனிப்பட்ட முறையில், நண்பர் என்ற முறையில்தான் இந்த கருத்தை சொல்கிறேன்.. அரசியல் கிடையாது..

மகிழ்ச்சி - சிரிப்பு
அவர் வருத்தப்படாமல் இருக்கணும்.. மகிழ்ச்சியாக சிரிக்கக்கூடிய அளவுக்கு நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.. மற்றபடி, இன்னொரு இடத்தில் எப்போ எழவு விழுமோன்னு காத்திருக்க கூடியவன் நான் கிடையாது.. ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான முடிவு வந்தால் பார்க்கலாம்.. வெயிட் பண்ணுங்க.. அதெல்லாம் இப்பவே சொல்ல முடியாது.. அப்படி ஒரு விஷயமே இங்கு எழவில்லை.. என்னால் அதிமுகவில் குழப்பம் வந்துவிடக்கூடாது.. எங்கள் உதவியை கேட்கும் அளவுக்கு ஓபிஎஸ் வரவில்லை..

பச்சை கொடி
அன்றைக்கு ஓபிஎஸ் பேசியது வேறு.. இன்று பேசுவது வேறு.. இன்று, ஒரே குடும்பத்தின் பிடியில் இருக்கக்கூடாது என்கிறார்.. அதனால், அவர் ஒரு சரியான முடிவு எடுத்து, எங்களிடம் வரும்போது, அதை பற்றி யோசிப்போம்.. ஏன்னா, அவங்க இப்பவே சொல்லுவாங்க, தினகரன் பார்த்தீங்களா, பச்சை கொடி காட்டுகிறார் என்று.. அதனால், இப்போது அதை பற்றி நாங்களே கருத்து சொன்னால் அது சரியா இருக்காது.. ஆனால், இன்னைக்கும் ஓபிஎஸ் என் நண்பர்.. என் மனசில் அவர் மீதான நட்பு உள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும்" என்றார் டிடிவி தினகரன்.
Recommended Video

வெயிட் பண்ணுங்க
சசிகலாவை பற்றி செய்தியாளர்கள் கேட்டால், ஓபிஎஸ் எப்படி பதில் சொல்வாரோ, அதுபோலவே டிடிவி தினகரனும் பதில் சொல்லி உள்ளார்.. "சசிகலாவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை, ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, ஆதரவும் இல்லை, கட்சிக்குள் இடமும் இல்லை" இப்படியெல்லாம் ஓபிஎஸ் இதுவரை சொன்னதே இல்லை.. அதுபோலவேதான், தினகரனும் நாசூக்காக பதில் சொல்லி உள்ளார்.. நட்பு என்ற ரீதியில் அக்கறையிலும், அன்பிலும் பதில் அளித்தாலும், ஓபிஎஸ் ஆதரவுக்கு ஆதரவு கிடையவே கிடையாது என்று சொல்லவில்லை.. இது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம்..!

டிடிவி தினகரன்
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. சசிகலா - தினகரன் இடையே அதிருப்தியும் விரிசலும் நிலவி வரு நிலையில், இவர்கள் எப்போது ஒன்று சேருவார்களோ தெரியாது.. அதேசமயம், எடப்பாடி ஓபிஎஸ்ஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வந்தால், ஓபிஎஸ் யாருக்கு ஆதரவு தருவார்? தினகரனுக்கா? சசிகலாவுக்கா? என்பது அதைவிட குழப்பமாக இருக்கிறது.. எப்படி பார்த்தாலும், அமமுகவும்சரி, சசிகலாவும் சரி, அதிமுக கூடாரத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டு வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications