"பச்சோந்தி".. வெண்ணிற ஆடை நிர்மலாவா?.. நடிகைக்கு ஓபிஎஸ் சப்போர்ட்டா.. பாயிண்ட்டை பிடித்த எடப்பாடி
வெண்ணிற ஆடை நிர்மலா குறித்து எடப்பாடி பேசிய பேச்சின் பின்னணி அரசியல் என்ன
சென்னை: வெண்ணிற ஆடை நிர்மலாவை வெற்றி பெற வைக்க ஓபிஎஸ் பணியாற்றியதாக, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. இதன் பின்னணி என்ன?
அதிமுகவில் புயல் அடித்து கொண்டிருக்கிறது.. கோர்ட் வரை சென்று, பொதுக்குழுவுக்கான அனுமதியை பெற்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
பொதுக்குழுவையும் நடத்திவிட்டார்.. புதிய சட்டதிருத்த விதிகளும் இயற்றப்பட்டுள்ளன.. எனினும், இத்தனை காலமும் ஒன்றாக இருந்த எடப்பாடி & ஓபிஎஸ் தற்போது மாறி மாறி புகார்களை அள்ளி வீசி வருகிறார்கள்..

எடப்பாடி டீம்
இதில் சற்று ஓவராக சென்று கொண்டிருப்பது ஓபிஎஸ் டீம்தான்.. தங்களுக்கு கோர்ட்டில் சாதகமான முடிவு வரவில்லை என்பதை அறிந்ததில் இருந்தே, எடப்பாடி பழனிசாமி டீம் மீதான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி கொண்டிருக்கிறது.. ஜெயலலிதா மரணம் முதல் கொடநாடு விவகாரம்வரை எடப்பாடியை சிக்க வைக்க, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். 20 நாட்களுக்கு முன்பு வரை எடப்பாடியுடனேயே பயணித்தவர்கள் திடீரென கொடநாடு மேட்டரை கையில் எடுப்பது கடைந்தெடுத்த பச்சோந்தித்தனமாகவே பார்க்கப்படுகிறது.

சந்தர்ப்பவாதம்
அதேபோல, இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமிய பேசிய பேச்சும் சந்தர்ப்பவாத அரசியலாகவே பார்க்கப்படுகிறது.. அவர் பேசும்போது, இரட்டை தலைமையால் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று இங்கே இருப்பவர்களுக்குத் தெரியும். அதற்காக ஓபிஎஸ்ஸிடம் பலமுறை பேசினார்கள். ஆனால் அவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை. எதற்கெடுத்தாலும் நான் விட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்வார்.. நாங்கதான் விட்டுக் கொடுத்தோம். அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்.

ஜெ.அணி - ஜா அணி
1989-ல் பொதுச் தேர்தலில் ஜெயலலிதா போடிநாயக்கனூரில் பொதுத் தேர்தலை சந்தித்தார். அப்போது, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு தலைமை ஏஜென்டாக இருந்தார். ஜெயலலிதா வெற்றிபெறக் கூடாது என்பதற்காகச் செயல்பட்ட நீங்கள் எப்படி அவருக்கு விசுவாசமாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இவ்வளவு நாளும் ஓபிஎஸ்ஸை அண்ணன், அண்ணன் என்று உரிமையாய் கூப்பிட்டு பேசி கொண்டிருந்தவர் எடப்பாடி பழனிசாமி..

குட்டி பிளாஷ்பேக்
கட்சியின் ஒவ்வொரு முடிவையும் ஒன்றாகவே சேர்ந்து எடுத்துவிட்டு, ஒவ்வொரு அறிவிப்பிலும் ஒன்றாகவே சேர்ந்து கையெழுத்து போட்டுவிட்டு, இன்று திடீரென வெண்ணிற ஆடை நிர்மலா கதையை எடுப்பது ஏன்? என்ற கேள்வி பரவலாக எழுகிறது. ஜெ.வை மறந்து அன்று வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஓபிஎஸ் பணிபுரிந்தாரா? என்ன நடந்தது? இதோ ஒரு குட்டி பிளாஷ்பேக்..

நடராஜன்
1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்.. ஜெ.அணி-ஜா.அணி என இரண்டும் வாழ்வா? சாவா? போராட்டதில் இருந்தன.. ஜெ.பக்கம் உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் சசிகலாவின் கணவர் நடராஜன்தான்.. ஜெயலலிதா போட்டியிடுவதற்கு ஏதுவான தொகுதிகளை தமிழகம் முழுவதும் தேடினார். அப்போது 2 விஷயங்களில் உறுதியாக இருந்தார்.. ஒன்று, வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக இருக்க வேண்டும், மற்றொன்று இரண்டே நாட்களில் பிரச்சாரத்தை முடிக்கக்கூடிய அளவுக்கு சிறிய தொகுதியாக இருக்க வேண்டும் என்பதே அது.. அந்த வகையில், போடி தொகுதியை தேர்ந்தெடுத்தார்.

வெண்ணிற ஆடை நிர்மலா
இப்போது ஜெ.வை எதிர்த்து, ஒரு பிரபலமான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று ஜானகி அணி யோசித்தது.. அதற்காக பலபேரை சிந்தித்து, கடைசியில் வெண்ணிற ஆடை நிர்மலாவை தேர்ந்தெடுத்தது.. அப்போது, தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர்தான் ஓபிஎஸ்.. வெண்ணிற ஆடை நிர்மலா வேட்புமனு தாக்கல் செய்யும்வரை, அவரை பத்திரமாக பாதுகாக்கும் பொறுப்பை கம்பம் செல்வந்திரனிடம் ஒப்படைத்தபோது, ஓபிஎஸ் துணையுடன் நிர்மலாவை பத்திரமாகப் பாதுகாத்தார்.. வேட்புமனுத்தாக்கலும் நடந்தது.

வெண்ணிற ஆடை நிர்மலா
போடி தொகுதியில் கடும்போட்டி உருவானது.. ஜெயலலிதாவை வீழ்த்த வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக ஓபிஎஸ் அப்போது கடுமையாக வேலை பார்த்தார் என்றாலும் ஜெ.வே வெற்றி பெற்றார்.. தேர்தலுக்குப் பிறகு, ஜெ.-ஜா.அணிகள் ஒன்றிணைந்தபோது, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றார் ஓபிஎஸ்.. அதற்கு பிறகு, ஓபிஎஸ்ஸின் அணுகுமுறை அவரை தற்காலிக முதல்வராக ஜெ.நியமிக்கும்வரை சென்றதை தமிழகம் நேரடியாகவே பார்த்தது.. இதைதான் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி நினைவூட்டி உள்ளார்.. இவ்வளவு காலம் இல்லாமல், ஜெ.வுக்கு எதிராக வேலை பார்த்தார் என்ற விஷயத்தையும் மீண்டும் நினைவுபடுத்திவிட்டு சென்றுள்ளது ஓபிஎஸ் தரப்பை மேலும் எரிச்சலூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications