அப்போ பாஜகவின் பரம எதிரி! இப்போ கூட்டணி! யாரிந்த திருத்துறைப்பூண்டி திருவேங்கடம் விவேகானந்த தினகரன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

திருத்துறைப்பூண்டி திருவேங்கடம் விவேகானந்தர் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆவார். கடந்த காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராகவும், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

Who is AMMK TTV Dinakaran All you need to know about the Theni canidate

அதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்கு பின் ஓ பன்னீர்செல்வம் - சசிகலா அணி என்று இரண்டாக பிரிந்தது. அப்போது சசிகலாவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். இடையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.

இதனால் மோதல் டிடிவி தினகரன் vs ஓ பன்னீர்செல்வம் என்று மாறியது. டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக கடுமையாக போர்க்கொடி தூக்கிய நிலையில் பாஜக டிடிவி தினகரனை கடுமையாக தாக்கி வந்தது.

முக்கியமாக இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக திகார் சிறைக்கு கூட டிடிவி தினகரன் அனுப்பப்பட்டார் . அப்போதெல்லாம் டிடிவி தினகரன் பாஜகவின் பரம எதிரியாக இருந்தார். இந்த விவகாரத்தில்தான் ஆகஸ்ட் 2017ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (2017-2021) 15வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

அதிமுகவை எதிர்த்து இங்கே போட்டியிட்டு வென்றார். இவர் வி.கே.சசிகலாவின் அண்ணன் மகன். 15 மார்ச் 2018 அன்று தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே களமிறக்கப்பட்டு உள்ளார்..

அரசியல் பின்னணி: ஏற்கனவே தினகரன் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 1999 முதல் 2004 வரை பெரியகுளத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார், 2004 பொதுத் தேர்தலில் ஜே.எம். ஆரோன் ரஷீத்திடம் இதே தொகுதியில் தோல்வி அடைந்தார். 2017 ஆம் ஆண்டு ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனனை சுயேட்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 29 டிசம்பர் 2017ல் எம்எல்ஏவாக பதவியேற்றார்.

வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்க பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, 2017 பிப்ரவரி 15 அன்று தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் ஆகஸ்ட் 2017 இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

15 மார்ச் 2018 அன்று தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் கடுமையாக எதிர்த்த பாஜகவுடன் இப்போது எடப்பாடி எதிர்ப்பு நிலை காரணமாக கூட்டணி அமைத்துள்ளார்.

அதன்படி பாஜக கூட்டணியில் தமிழகத்தில் தேனி, திருச்சி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தார் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். திருச்சியில் செந்தில் நாதன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தேனியில் திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே களமிறக்கப்பட்டு உள்ளார் இவரும் முன்னாள் அமமுக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+