உங்க கிட்டதான் பவர் இருக்கு! ஓபிஎஸ்ஸுக்கு கொம்பு சீவிவிட்ட அரசியல் புள்ளி.. ஓ இவர்தான் மாஸ்டர் மைண்டா
சென்னை: சென்னையை சேர்ந்த முக்கிய அரசியல் "புள்ளி" ஒருவரை ரகசியமாக சந்தித்திருக்கிறார் ஓபிஎஸ். இந்த சந்திப்பில் பல முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் அவருக்கு சட்ட ரீதியாக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஓபிஎஸ்ஸுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
அதேபோல் அதிமுகவின் வங்கி கணக்குகளை பராமரிக்க அனுமதி கேட்டு எடப்பாடி அனுப்பிய கடிதத்தை வங்கிகள் ஏற்றுக்கொண்டது. இப்படி ஓபிஎஸ்சுக்கு ஏற்பட்ட சறுக்கல்கள் அவருக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஓபிஎஸ்
இதனால் ஓபிஎஸ்சும் அப்செட்டானார். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த முக்கிய அரசியல் "புள்ளி" ஒருவரை ரகசியமாக சந்தித்திருக்கிறார் ஓபிஎஸ் ! அந்த சந்திப்பில், தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை "புள்ளியிடம்" சோகமாக பகிர்ந்து கொண்ட ஓபிஎஸ், அதிமுகவின் வங்கி கணக்கு வழக்குகளை பராமரிக்கும் அனுமதியையும் எடப்பாடிக்கே சென்றிருப்பது குறித்து ஏகத்துக்கும் புலம்பியுள்ளார்.

அரசியல் புள்ளி
அவரை சமாதானப்படுத்திய அரசியல் புள்ளி, ' ரிசர்வ் வங்கியிடம் நீங்கள் முறையிடலாமே ' என்கிற யோசனையை சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல, அதிமுக கட்சி யாருக்கு சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, நீதிமன்றங்கள் கிடையாது. தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரையில் நீங்கள் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அதனால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நீங்கள் இயங்குங்கள்.. உங்க கிட்டதான் அந்த பவர் இருக்கு என்ற அட்வைசையும் கொடுத்துள்ளார் அந்த புள்ளி.

அரசியல் புள்ளி யார்?
அந்த அரசியல் புள்ளி ஏற்கனவே தமிழ்நாடு அரசியலில் இது போன்ற சில சமரச பணிகளை, தூது பணிகளை மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அந்த அரசியல் புள்ளி சொன்ன யோசனைகள் ஓபிஎஸ்சுக்கு தெம்பை கொடுத்ததாம். அதனால் சந்திப்பு முடிந்து வந்ததுமே, ' எடப்பாடியின் கடிதத்தை வங்கிகள் ஏற்றது முறை அல்ல ' என்று ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதினார் ஓபிஎஸ் ! அதனையடுத்து, கட்சியில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த, மா.செ.க்களை புதிதாக நியமித்து அறிவித்து வருகிறார்.
Recommended Video

14 மாவட்டங்கள்
தற்போது 14 மாவட்டங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. இந்த லிஸ்ட் இன்னும் தொடரும். ஓபிஎஸ்சின் சமீபகால நடவடிக்கைகளுக்கு அந்த புள்ளியின் யோசனை தான் காரணம் " என்கிறார்கள் ஓபிஎஸ்சுக்கு நெருக்கமானவர்கள். பாஜக அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் எதிரான அரசியலை செய்வதற்காகவே ஓபிஎஸ்சுக்கு அந்த அரசியல் புள்ளி உதவி வருவதாகவும், தேவைப்படுகிற போதெல்லாம் ஓபிஎஸ்சுக்கு அந்த புள்ளி கொம்பு சீவி விடுகிறார் என்றும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications