களமிறங்கிய 3வது கண்.. கலகம் தொடங்கியது.. அப்படியே ஸ்டன் ஆன எடப்பாடி.. இதை யோசித்து இருக்க மாட்டாரே
சென்னை: அதிமுக உள்ளேயும்.. வெளியேயும் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களால் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான அப்செட் ஆகி உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக அதிமுகவில் நடக்கும் மோதல்களுக்கு பின் "3வது கண்" ஒன்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவில் கடுமையான உட்கட்சி மோதல் ஏற்பட்டு உள்ளது. அதோடு அதிமுகவை எதிர்த்து அமமுக போன்ற கட்சிகளும் கடுமையாக களம் கண்டுள்ளது.

செங்கோட்டையன் கோபம்
கடந்த சில நாட்களுக்கு முன் செங்கோட்டையன் திடீரென கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில், அதிமுக தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும்... பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன், என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார்.
அதன்பின் டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் எதிரி என்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர். துரோகத்தை வீழ்த்தவே நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம் என்று கூறிய டிடிவி தினகரன், சசிகலா வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்தார்.
டிடிவி தினகரன் பாய்ச்சல்
ஊடகங்களிடம் பேசிய டிடிவி தினகரன், எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமே பழனிசாமிதான். துரோகத்தை வீழ்த்தவே அமமுக தொடங்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது. துரோகத்தை வீழ்த்தி ஜெயலலிதா ஆட்சியை உருவாக்கவும், ஜெயலலிதாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம், என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
இதையடுத்து அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.ஏ.செங்கோட்டையனை அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
செங்கோட்டையன் மூவ் - எடப்பாடி ஷாக்
செங்கோட்டையன் அதன்பின் செய்தியாளர்களை சந்திக்கையில், தவெக கொடியை பார்த்ததும் கூட்டணிக்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டது என்று கூறினார். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி எதையோ நினைத்து பேசினார். அதற்கு பின் நடந்ததை பாருங்கள். ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் காலிலே நடந்து செல்ல வேண்டும். பிறரின் முதுகில் ஏறி பயணம் செய்யக் கூடாது.
இபிஎஸ் மகன், மருமகன், மைத்துனர்தான் அதிமுகவை நடத்துகின்றனர். நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இபிஎஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது . தொகுதி மேம்பாட்டுக்காக நான் செய்ததை விட எடப்பாடியில் அவர் செய்யவில்லை. இபிஎஸ் முதலமைச்சராக வாய்ப்பு தந்தவர் சசிகலா. ஆனால் அவரையே கொச்சையாக பேசினார். கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியவர் இபிஎஸ். அதிமுகவை பாதுகாத்த பாஜகவை 2024 தேர்தலின்போது கழட்டி விட்டார். தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியது இல்லை. 2009ல் இவரை நீக்கினார், என்று செங்கோட்டையன் கூறி உள்ளார். செங்கோட்டையனின் இந்த தொடர் எதிர்ப்பு எடப்பாடி பழனிசாமியை கடுப்பாக்கி உள்ளது.
யார் இயக்குவது?
இவர்களை எல்லாம் இயக்குவது ஒரு 3வது கண் என்று கூறப்படுகிறது. அதாவது ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் போன்றவர்கள் அவ்வளவு எளிதாக பாஜகவை எதிர்த்துவிட்டு, அதிமுக கூட்டணியை முறித்து செல்ல மாட்டார்கள். ஆனால் அதை இவர்கள் செயல்படுகிறார்கள் என்றால்.. இவர்களுக்கு பின் பெரிய கை ஒன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவர்களுக்கு பின் 3வது கண் ஒன்று இவர்களை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. அது பாஜகவை சேர்ந்ததாக இருக்கலாம்.. எடப்பாடிக்கு எதிராக அந்த கண் காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடிக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க அந்த நபர் தீவிரமாக முயன்று வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications