நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம்.. அதிரடி தீர்ப்புகளுக்கு சொந்தக்காரர்!
சென்னை: நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் ஆவார்.
இவர் அனைத்து அரசு துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்க ஆணையிட்டவர் ஆவார். நடிகர் விஜய் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார்.
அந்த காருக்கு இறக்குமதி நுழைவு வரி ரூ 1.6 கோடியை அவர் செலுத்தவில்லை. இதனால் அவரது காரை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் பதிவு செய்யவில்லை.

ரோல்ஸ்ராய்ஸ் கார்
இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வருமான வரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும் வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி
இந்த மனுவை நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது அவர் வரி என்பது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. புகழ் பெற்ற நடிகர்கள் உரிய நேரத்தில் வரி செலுத்தி முன்னுதாரணமாக திகழ வேண்டும். எப்போதும் ரீல் நடிகராக இருக்க கூடாது, ரியல் நடிகராக இருக்க வேண்டும் என கூறி விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்ததுடன் அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

அபராதம்
அந்த அபராத தொகையை முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் யார் என்பதை பார்ப்போம். இவர் புதிய தலைமைச் செயலக முறைகேடு புகார் தொடர்பான விசாரணை ஆணையம் கண்துடைப்பு என விமர்சித்தவர்.
Recommended Video

சிசிடிவி கேமரா பொருத்தம்
அது போல் அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட்டவர். மேலும் தான் முன்னுதாரணமாக திகழ தனது அறையில் சிசிடிவி கேமராவை பொருத்திக் கொண்டவர். அது போல் அனைத்து அரசு துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்க ஆணையிட்டவர். இத்தகைய உத்தரவுகளை வழங்கிய நீதிபதிதான் தற்போது விஜய்க்கு அபராதம் விதித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications