2 மணி நேரத்தில் யார் கசியவிடுறது? தவெக தகவல்களை உளவுத்துறைக்கு லீக் செய்த புள்ளி! கோபம் அடைந்த விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: த.வெ.க.வின் தலைமையில் எடுக்கும் முடிவுகள், அரங்கக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விபரங்கள் திமுக தலைமைக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. மாநில உளவுத்துறைதான் இந்த ரிப்போர்ட்டை முதல்வருக்கு அனுப்பி வைக்கிறது.

ஆக, கட்சியின் ரகசிய முடிவுகள், விவாதிக்கப்படும் தகவல்கள் உளவுத்துறைக்கு எப்படி செல்கிறது? என்கிற சந்தேகம் விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறதாம். ஏனெனில், சமீபத்தில், விஜய் மற்றும் முக்கிய நபர்கள் 3 பேர் மட்டுமே இருக்கும் ஒரு சந்திப்பில் பேசப்பட்ட தகவல் குறித்து, அந்த சந்திப்பு முடிந்த அடுத்த 2 மணி நேரத்தில் திமுகவில் இருக்கும் விஜய்யின் நண்பர் ஒருவர், விஜய்யிடம் கேட்டபோதுதான் விஜய் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

seeman naam tamilar katchi vijay

அதனால்தான், ரகசிய தகவல்கள் லீக் ஆகிறது என்கிற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டதாம். அந்த சந்திப்பில் அப்படியொன்றும் வெளியே தெரியக் கூடாத விசயங்கள் இல்லை. ஆனால், இந்த விசயங்களே வெளியே போகிறதென்றால், மிக சீக்ரெட்டான விசயங்களும் வெளியே போகத்தானே செய்யும் ? என்கிற கேள்வி விஜய்க்கு ஏற்பட்டுள்ளதாம்.

இது பற்றி ஆய்வு செய்த போது, நீண்ட வருடங்களாக ரசிகர் மன்றத்தையும் விஜய்யையும் ஆக்ரமித்துக்கொண்டு, தற்போது கட்சியின் பெரிய பொறுப்பில் இருக்கும் புஸ்சி ஆனந்த் தான் உளவுத்துறையிடம் நெருக்கமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டார் விஜய். இதனை அடுத்து அவரிடம் கோபம் காட்டாமல், அமைதியாக இருந்த விஜய், தற்போது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் பணி செய்யட்டும் என்கிற முடிவை எடுத்துள்ளாராம். புஸ்சி ஆனந்த்தின் பதவி, பாண்டிச்சேரி என்கிற அளவில் சுருக்கப்படும் போது தமிழ்நாட்டு அரசியலை கவனிக்க மற்றொரு பொதுச் செயலாளரை நியமிக்கவும் ஆலோசித்துள்ளார் விஜய். ஆக, த.வெ.க. விரைவில் இரண்டு பொதுச்செயலாளர்களை பார்க்கப்போகிறது.

விஜய் தீர்மானம்: தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழுவை இரண்டு நாட்களுக்கு முன் கூட்டியிருந்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். 26 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானங்கள்: நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு. இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு. ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது, என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விஜய் வார்னிங்: இந்த கூட்டத்தில் சில நிர்வாகிகளை விஜய் கண்டித்து உள்ளாராம். அதன்படி கட்சியில் கருப்பு ஆடுகள் உள்ளன. சில கட்சி முடிவுகளை சிலர் அடிக்கடி லீக் செய்கின்றனர். முக்கியமாக நமக்கு எதிராக இருக்கும் கட்சியில் முன்னாள் நிர்வாகிகளாக அவர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் தகவலை லீக் செய்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+