பொன்முடி பதவி உடனே பறிபோக காரணமான சூத்திரதாரி.. அரசியல்வாதிகளை அலற விட்ட லில்லி தாமஸ்.. யார் இவர்?
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழந்துள்ளார் பொன்முடி. இந்த உடனடி பதவி இழப்புக்கு காரணம் லில்லி தாமஸ் என்ற மறைந்த பெண் வழக்கறிஞர்.
2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றால், அவர்கள் 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்து விட்டால் பதவி இழக்க மாட்டார்கள் என்று ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8-ன் உள் பிரிவு 4 கூறுகிறது. இந்த பிரிவை பயன்படுத்தி, இந்தியா முழுவதும் ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றாலும் பதவியைத் தக்க வைத்துக்கொண்டனர்.

லில்லி தாமஸ் வழக்கு: இந்தியாவில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், குற்றவாளிகள் என்பது உறுதியானால், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்வதோடு, அவர்கள் அப்போது வகிக்கும் பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, 2005ஆம் ஆண்டு வழக்கறிஞர் லில்லி தாமஸ் மற்றும் லோக் பிரஹாரி நிறுவனம் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8-ன் உள்பிரிவு 4ஐ நீக்கி உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், ஊழல் குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அவர்கள் குறைந்த பட்சம் 6 ஆண்டுகள் தேர்தலிலும் போட்டியிட முடியாது.
முதல் ஆள்: அக்டோபர் 2013 அன்று, முன்னாள் மத்திய அமைச்சரான ரஷீத் மசூத்துக்கு மோசடி மற்றும் ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களின் கீழ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த முதல் எம்பி ஆனார் ரஷீத் மசூது. அதன் பிறகு லாலு பிரசாத் யாதவ், ஜெகதீஷ் சர்மா, ஜெயலலிதா, செல்வகணபதி, பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட பலர், நீதிமன்ற தீர்ப்பால் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர்.
இந்தச் சூழலில் தான், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளதால், அவரது பதவி பறிபோயுள்ளது. ஏற்கனவே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோரின் பதவிகளும் நீதிமன்ற தீர்ப்புகளால் பறிபோயின.

பொன்முடிக்கு சிறை தண்டனை: கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில், திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர். மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்று பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், இன்று பொன்முடிக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இந்தத் தண்டனை தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

யார் அந்த லில்லி தாமஸ்?: லாலு பிரசாத் யாதவ், ஜெயலலிதா தொடங்கி, இப்போது பொன்முடி வரை, தீர்ப்பு வந்ததுமே, பதவி பறிபோக காரணமான அந்த லில்லி தாமஸ் யார்? பெண் வழக்கறிஞரான லில்லி தாமஸ், பல்வேறு பொதுநல வழக்குகளை தொடுத்தவர். கடந்த 2013ஆம் ஆண்டில், தனது 85 வயதில், வழக்கு தொடர்ந்து தான், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் (1951) ஒரு விதியை நீக்கிய உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பை வென்றார். அந்த தீர்ப்பு தான் இன்று மக்கள் பிரதிநிதிகள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால் உடனடியாக அவர்களின் பதவி பறிபோக வழிவகுத்துள்ளது.
அதோடு, கிரிமினல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது அரசு பதவியை வகிக்கவோ தகுதியற்றவர் என்று தீர்ப்பளிக்கவும் காரணமாக இருந்தவர். அவர், கடந்த 2019ஆம் ஆண்டு தனது, 91 வயதில் மறைந்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications