யாருங்க அந்த மகேஸ்வரி? அந்த ஒரு போன்கால்.. கொடைக்கானல் பெண்ணால் மாட்டிய ஜெயராம், பூவை ஜெகன்மூர்த்தி!
சென்னை: புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் கொடைக்கானலைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணுடன் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அவர்களுக்கு எதிரான இளைஞர் கடத்தல் வழக்கு மேலும் வலுப்பெற்றுள்ளது.

வழக்கின் பின்னணி
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறையினர் ஜெகன்மூர்த்தியை விசாரிக்க சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரை உள்ளே அனுமதிக்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவானார்.
இந்த கடத்தல் வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், "இந்த கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், "வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அவரின் பங்கு உறுதியாகி உள்ளது. கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி ஜெயராமனின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறான்.. அவருக்கும் இதில் தொடர்பு உள்ளது" என்று தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய தமிழக கூடுதல் காவல் துறைத் தலைவர் (ஆயுதப்படை) எச்.எம். ஜெயராம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தியும் சந்தேக நபராக உள்ளார். இவர் வழக்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் சிக்கியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த வனராஜா, பலரிடம் உதவி கேட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் மணிகண்டனிடம் தனது கஷ்டங்களை கூறியுள்ளார். மணிகண்டன், கொடைக்கானலைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை வனராஜாவுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
இந்த மகேஸ்வரிதான் பூவை ஜெகன்மூர்த்தியிடமும், ஏடிஜிபி ஜெயராமிடமும் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த காதல் திருமணம் பற்றியும்.. மகளை கடத்தி மீட்க வேண்டும் என்றும் பேசி உள்ளார். மகேஸ்வரி கூறியதன் அடிப்படையில், வனராஜாவுக்கு உதவ ஜெகன்மூர்த்தியும், ஜெயராமும் முடிவு செய்துள்ளனர்.
இவர்களின் ஏற்பாட்டின் பெயரில் கூலிப்படையினர் மூலம் அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று காதல் ஜோடியை கடத்த முயன்று உள்ளனர். ஆனால் காதல் ஜோடி வீட்டில் இல்லாத காரணத்தால்.. அந்த இளைஞரின் சகோதரரை வனராஜா குடும்பம் கடத்தியுள்ளது. அந்த இளைஞரின் சகோதரர் TN 06 G 0606 என்ற எண் கொண்ட போலீஸ் வாகனத்தில் கடத்தப்பட்டார்.
மகேஸ்வரியின் தொலைபேசி உரையாடல்
இதையடுத்து அந்த இளைஞரின் குடும்பம் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் வனராஜா கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மகேஸ்வரி சிக்கினார். மகேஸ்வரியிடம் விசாரிக்க விசாரிக்க போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. அவரிடம் போலீஸ் வாகனம் எப்படி வந்தது என்று விசாரித்தபோது, ஏ.டி.ஜி.பி ஜெயராமுக்கு இதில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஏ.டி.ஜி.பி ஜெயராமன், பூவை ஜெகன் மூர்த்தி இந்த கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
காவல்துறையினர் மகேஸ்வரியின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ததில், ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம், மகேஸ்வரி ஆகியோர் பேசியதற்கான பதிவுகள் இருந்தன.அடிக்கடி இவர்கள் போனில் பேசி உள்ளனர்.
மகேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில், "ஏடிஜிபி ஜெயராம் எனக்கு உறவினர். அவர்தான் போலீஸ் வாகனத்தை என்னிடம் கொடுத்தார்" என்று கூறியிருந்தார். இது ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட முக்கிய காரணமாக அமைந்தது. ஏடிஜிபி ஜெயராம், பூவை ஜெகன்மூர்த்தி இருவரும் மகேஸ்வரியுடன் தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள் இருப்பதால் இந்த வழக்கும் வலிமை அடைந்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications