தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார்? சிவ்தாஸ் மீனாவுக்கு புது பொறுப்பு.. டாப்பில் இவர் தான்!
சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் சிவ்தாஸ் மீனா ஓய்வு பெற உள்ளது மற்றும் அவருக்கு புதிய பொறுப்பு வழங்கியது உள்ளிட்டவற்றின் மூலம் தமிழக அரசு அடுத்த தலைமை செயலாளர் நியமனத்துக்கு தயாராகி விட்டது. இந்நிலையில் தான் தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் பதவி யாருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் வெ இறையண்பு தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தமிழக தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா செயல்பட்டு வருகிறார். ஓராண்டுக்கும் மேலாக அவர் அந்த பொறுப்பில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் சிவ்தாஸ் மீனாவுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
பொதுவாக தலைமை செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிற துறைகளில் பொறுப்புகள் வழங்கப்படாது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக சிவ்தாஸ் மீனா தற்போது தலைமை செயலாளராக உள்ள நிலையில் அவர் தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு சிவ்தாஸ் மீனா விரைவில் பணி ஓய்வு பெற உள்ளது தான் முக்கிய காரணமாகும்.
இதனை கருத்தில் கொண்டு தான் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைவராக செயல்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைஆணையத்தின் தலைவராக அவரை நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சிவ்தாஸ் மீனா பணி ஓய்வு பெற்றாலும் கூட அந்த பொறுப்பில் தொடர வைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சரி இது இருக்கட்டும். சிவ்தாஸ் மீனாவுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் தமிழக அரசு புதிய தலைமை செயலாளர் நியமனத்துக்கும் தயாராகி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார்? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிவ்தாஸ் மீனா தமிழகத்தின் 49வது தலைமை செயலாளராக செயல்பட்டு வருகிறார். அடுத்து வருபவர் 50 வது தலைமை செயலாளராவார். இதனாலும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில் பார்த்தால் தமிழக தலைமை செயலாளர் பதவிக்கு என் முருகானந்தம் ஐஏஎஸ்ஸின் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தான் தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளராக நியமனம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தற்போது என் முருகானந்தம் ஐஏஎஸ் முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுடன் நெருக்கமாக உதயசந்திரன் ஐஏஎஸ் செயல்பட்டு வந்தார். அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் உதயசந்திரன் ஐஏஸ் இடத்தை நிரப்பியவர் தான் என் முருகானந்தம். இவர் நிதித்துறை செயலாளராக இருந்த நிலையில் கடந்த ஆண்டு முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
என் முருகானந்தம் 1991ம் ஆண்டு பேட்ஸை சேர்ந்த ஐஏஎஸ். தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் மற்றும் ஐஎம்எம்மில் எம்பிஏ படிப்பை முடித்தவர். முந்தைய அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளராக இவர் பொறுப்பு வகித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுன் முருகானந்தம் ஐஏஎஸ் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பொதுவாக நிதித்துறையில் அதிக அனுபவம் கொண்டவர்கள் தான் இந்த பொறுப்பில் நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால் என் நிதித்துறையில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத முருகானந்தம் ஐஏஎஸ்ஸை முதல்வர் ஸ்டாலின் அந்த பொறுப்பில் நியமனம் செய்தார். இது என் முருகானந்தம் மீது முதல்வர் ஸ்டாலின் வைத்த நம்பிக்கையை காட்டியது. அதனை என் முருகானந்தம் காப்பாற்றினார். அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் ராஜனின் பாராட்டை பெற்று அவருக்கு நெருக்கமானவராக மாறினார்.
அதன்பிறகு முருகானந்தம் ஐஏஎஸ் முதல்வர் ஸ்டாலின் முதன்மை செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் தற்போது அடுத்த தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் அடுத்த தலைமை செயலாளர் பொறுப்புக்கான ரேஸில் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications