Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூரின் காலா.. கோர்ட்டில் வாங்கிக் கட்டிய பூவை ஜெகன் மூர்த்தி! நல்லவரா? கெட்டவரா? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூரில் காதல் திருமணம் செய்து தலைமறைவான பெண்ணை மீட்க , காதலனின் தம்பியை கடத்திய புகாரின் பேரில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏவை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஒரே நேரத்தில் 500 பேரை திரட்டி நீதிமன்றம் செல்லும் அளவுக்கு பூவை ஜெகன் மூர்த்தியின் செல்வாக்கு என்ன? அவர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த கலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய்ஸ்ரீ என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் காதலனை தேடி வந்த விஜயஸ்ரீ மே மாதம் 21 ந்தேதி காதலன் தனுஷை பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகின்றது.

Poovai Jagan Moorthy politics Poovai Moorthy

காதல் தகராறு

இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இருவரும் எங்கிருக்கிறார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. இந்நிலையில் தேனியைச்ச் சேர்ந்த பெண் வீட்டார் அவர்களை தீவிரமாஅ தேடி வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏடிஜிபி ஒருவரது அலுவல் பணிக்கு பயன்படுத்தகூடிய வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற மர்மக்கும்பல் ஒன்று, காதலனின் வீட்டிற்கு சென்று காதல் ஜோடி எங்கே என்று கேட்டுள்ளனர்.

சிறுவன் கடத்தல்

அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்த நிலையில், தனுஷின் 17 வயது தம்பியை தாக்கி ஏடிஜிபியின் காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்றதாகவும், பெண்ணை கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு சிறுவனை அழைத்துச்செல்ல கூறியுள்ளனர். இது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு சிறுவனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். போலீஸ் வாகனத்தில் சிறுவன் கடத்தல் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது.

காவல்துறை பரபரப்பு

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து கடத்தப்பட்ட சிறுவனை சில கிலோ மீட்டர் தூரத்தில் கடத்தல் கும்பல் இறக்கி விட்டு தப்பியது. இந்த புகார் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் காவல் அதிகாரின் கார் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உத்தரவிட்டார்.

காதல் பிரச்சினை

இதனையடுத்து போலீசார் மகேஸ்வரி என்ற பெண் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, தேனியை சேர்ந்த இளம் பெண்ணின் உறவினர்கள் காவல்துறையில் ஏ.டி.ஜி.பி ரேங்கில் இருக்கும் காவல் உயர் அதிகாரியிடம் காதல் விவகாரத்தை எடுத்துக்கூறி தங்கள் பெண்ணை மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது.

புரட்சி பாரதம் கட்சி

அந்த காவல் அதிகாரியின் சிபாரிசின் பேரில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏவை பெண்ணின் குடும்பத்தினர் சந்தித்ததாகவும், அவரது தூண்டுதலின் பேரில் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது மகேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் ஜெகன்மூர்த்தியை விசாரிக்க சென்ற போது அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் குழுமி தான் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பூவை ஜெகன் மூர்த்தி

இடையே ஜெகன்மூர்த்தி தலைமறைவானதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கூறி முன் ஜாமீன் கோரி ஜெகன்மூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின் போது மிக கடுமையான கேள்விகளை கேட்டது நீதிமன்றம். ஆட்களை திரட்டி வந்தால் நீதிமன்றம் பயந்து விடுமா? 70 ஆயிரம் மக்கள் வாக்களித்தது இதற்குத்தானா என கடுமையாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

பின்னணி என்ன?

இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி யார்? அவரது பின்னணி என்ன? எப்படி தொடங்கியது அவரது அரசியல் வாழ்க்கை? என்பது குறித்து பார்க்கலாம்..

பூவை மூர்த்தி

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த பூவை மூர்த்தியின் அரசியல் வாரிசு தான் பூவை ஜெகன் மூர்த்தி. பூவை மூர்த்தி 1970 காலகட்டங்களில் சட்டப் படிப்பையும் டாக்டர் பட்டமும் பெற்றவர். தொடர்ந்து அம்பேத்கர் மன்றத்தை தொடங்கியவர். அதற்குப் பிறகு அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பை ஆரம்பித்து பிறகு அதனை புரட்சி பாரதம் என்ற பெயர் மாற்றினார். அதற்கு பிறகு தற்போது வரை அந்த கட்சி புரட்சி பாரதம் என அழைக்கப்பட்டு வருகிறது.

அரசியல் பயணம்

தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு பூவை மூர்த்தி மாரடைப்பால் காலமானார். பூவை ஜெகன் மூர்த்தி, பூவை மூர்த்தி இறந்து ஐந்தாவது நாள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 ஆம் ஆண்டும் அதற்குப் பிறகான தேர்தல்களிலும் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தற்போது வரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்.

வட சென்னை அரசியல்

வட மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் தான் பூவை ஜெகன் மூர்த்தி. சமூகம், அரசியல் சார்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்திருப்பவர். மேலும் அவருக்கு இளைஞர் பட்டாளத்தின் ஆதரவு பெருமளவில் இருக்கிறது. குறிப்பாக வழக்கறிஞர்கள் அரசியல்வாதிகள் இடையே செல்வாக்கு மிக்கவர் பூவை ஜெகன் மூர்த்தி. சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குக்கு நெருக்கமானவர்.

ஆம்ஸ்ட்ராங்

பூவை ஜெகன் மூர்த்தியும் ஆம்ஸ்ட்ராங்கும் வெளிப்படையாக நட்பு பாராட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் போல தான் செயல்பட்டு வந்தனர். வடசென்னை பகுதியில் பல்வேறு பிரச்சனைகளுக்காக இருவரும் சேர்ந்து குரல் கொடுத்து இருக்கிறார்கள். அதே நேரத்தில் சில சர்ச்சைகளிலும் ஜெகன் மூர்த்தி சிக்கி இருக்கிறார். அவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் இருக்கிறது. காதல் விவகாரங்களை தலையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி அவரை சுற்றி சில சர்ச்சைகள் இருந்தாலும், திருவள்ளூர் மற்றும் வடசென்னையில் அவருக்கு என தனி ஆதரவு வட்டம் இருப்பது என்னவோ உண்மைதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+