ஐபிஎஸ்சையே கொன்றவர்? பெரிய தாதா! ரவுடியை பவ்யமாக வணங்கிய ரஜினிகாந்த்.. யார் இந்த ராஜா பையா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த நேற்று தாதா ராஜா பையா என்பவருடன் பவ்வியமாக வணக்கம் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியாகி ஹிட் அடித்து உள்ளது. இந்த படம் தமிழ்நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. வெகு காலத்திற்கு பின் ரஜினிகாந்திற்கு ஒரு வெற்றிப்படம் அமைந்துள்ளது.

ரஜினிகாந்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில், அவரின் ரசிகர்களே விமர்சனம் வைக்கும் விதமாக ரஜினிகாந்த் உத்தர பிரதேசம் பயணம் செய்துள்ளார். முதலில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உடன் இணைந்து ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் பார்ப்பதாக இருந்தது.
ஆனால் ஜெயிலர் படம் பார்க்க ரஜினிகாந்த்திற்கு ஆதித்யாநாத் நேரம் ஒதுக்கவில்லை. இதையடுத்து ரஜினிகாந்த் முதல்வர் ஆதித்யநாத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அவர் வீட்டு வாசலுக்கு வந்த போதே ரஜினிகாந்த் அவரின் காலில் விழுந்து மரியாதையை செய்தார். நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது ஏன் என்று விவாதம் எழுந்துள்ளது. ஆதித்யநாத் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் இந்து மத துறவி, அவர் கோவில் பதவிகளிலும் இருக்கிறார், அவர் தலைமை பூஜாரியாகவும் இருக்கிறார். அதனால் அவரின் காலில் விழுந்தார் என்று ஒரு சாரார் கருத்து சொல்கின்றனர்.
இருந்தாலும் இஸ்லாமியர்களை தாக்குதவதாக குற்றச்சாட்டு வைக்கப்படும் நபரின் காலில் ரஜினி விழுந்தது மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஜினிகாந்த் நேற்று தாதா ராஜா பையா என்பவருடன் பவ்வியமாக வணக்கம் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவர்கள்: உத்தர பிரதேசத்தில் பாஜக தலைவர்களை சந்தித்து வந்த ரஜினிகாந்த் ரகுராஜ் பிரதாப் சிங் என்னும் ராஜாவை சந்தித்தார். அவர் தற்போது 18வது உத்தரபிரதேச சட்டமன்றத்தில் தனது சொந்த சட்டமன்ற தொகுதியான குண்டாவில் இருந்து ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) கட்சி சார்பில் எம்எல்ஏவாக உள்ளார், 1993 முதல் இந்த தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார்.
இவர் மீது ஐபிஎஸ் அதிகாரி கொலை வழக்கு முதல் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கனவே மாயாவதி ஆட்சியில் இருந்த போது பாஜக எம்எல்ஏ ஒருவரை கடத்தி, மாயாவதி மூலம் கைது செய்யப்பட்டார். தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.
முலாயம் சிங் ஆட்சிக்கு வந்த 25 நிமிடத்தில் இவர் மீதான குற்றங்கள் நீக்கப்பட்டு விடுதலையும் செய்யப்பட்டார். அதன்பின் இவரின் வீட்டில் முன்னதாக ரெய்டு நடத்தி இவரை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்எஸ் பாண்டே விபத்தில் மர்மமாக பலியானார். இவரை கொன்றது ராஜா பையாதான் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இப்போதும் இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. தீவிர ஜாதி வெறியரான இவர் பாஜகவை ஆதரித்து தலித் அமைப்புகளை எதிர்த்து வருகிறார். 2018 இல், அவர் பிஎஸ்பி வேட்பாளர் டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக ராஜ்யசபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்.
3 மார்ச் 2013 அன்று, குண்டாவில் கிராம மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலின் போது துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஜியா உல் ஹக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கும் கூட இவர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. பலரை.. முக்கியமாக பெண்கள் உட்பட பலரை இவர் கடத்தியதாகவும், கடுமையாக மிரட்டப்பட்டதாகவும் புகார்கள் உள்ளது.
ஆனால் இவரிடம்தான் நேற்று ரஜினிகாந்த் பவ்யமாக கை கூப்பி சிரித்தபடி வணக்கம் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications