காய்கறி வியாபாரி வேஷம்: தீவிரவாதிகள் என்கவுன்டர்! ‘பயங்கர டிராக் ரெக்கார்டு’ யார் இந்த ஷகில் அக்தர்?
சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். திருட்டு விசிடிக்கு எதிராக அதிரடி ரெய்டு, கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை காய்கறி வியாபாரிகள் போல மாறுவேடமிட்டு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது என அதிரடியான டிராக் ரெக்கார்டுகளை கொண்டவர் ஷகில் அக்தர்.
தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள், அதிகாரிகள், அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பணி. இத்தகைய அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு ஆணையர் பொறுப்பிடங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தன.

இதற்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தேடுதல் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு பல முக்கியமான ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த ஷகில் அக்தர்?: 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஷகீல் அக்தர் கடந்த நவம்பர் மாதம் டிஜிபியாக பணி ஓய்வு பெற்றார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷகில் அக்தர் 1962ஆம் ஆண்டு பிறந்தவர், முதுநிலை இயற்பியல் படித்தவரான இவர் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு தர்மபுரி மாவட்டம் அரூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கியவர்.
தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டண்ட், சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்பி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை ஷகில் அக்தர் வகித்துள்ளார்.
திருட்டு விசிடி ரெய்டு: 2002 காலகட்டத்தில் ஷகில் அக்தர் சென்னை பூக்கடை துணை கமிஷனராக இருந்தபோது, விக்ரம் நடிப்பில் வெளியான 'ஜெமினி' திரைப்படத்தின் திருட்டு விசிடிக்களை பறிமுதல் செய்ய பர்மாபஜாரில் அதிரடி ரெய்டு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், அப்போது வடசென்னையை கலக்கிய ரவுடிகள் வெள்ளை ரவி, சேரா ஆகியோரை கைது செய்து அவர்களின் அட்டகாசத்தை அடக்கினார். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பியாக இருந்த போது ரேஷன் அரிசியை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்திய குற்றவாளிகளை கண்டறிந்து அதிரடி ஆக்ஷன் எடுத்தார்.
தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்: துரை துணை ஆணையராக ஷகில் அக்தர் இருந்தபோது கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த அல் உம்மா தீவிரவாதியான இமாம் அலி உட்பட 5 பேர் பெங்களூரில் தலைமறைவாக இருந்தனர். ஷகில் அக்தர் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் காய்கறி வியாபாரிகள் போல் மாறுவேடத்தில் கண்காணித்து, இமாம் அலி உள்ளிட்ட 5 தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்தனர்.
கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த என்கவுன்டருக்குப் பிறகு தீவிரவாதிகள் மிரட்டலால் ஷகில் அக்தருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3 முறை ஜனாதிபதி விருது: தனது அதிரடி நடவடிக்கைகளால் பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ள ஷகில் அக்தர் 3 முறை ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார். தனது பணி நிறைவு காலகட்டத்தில் சிபிசிஐடி டிஜிபியாக பணியாற்றிய ஷகில் அக்தர் தலைமையில் தான் ராமஜெயம் கொலை வழக்கு, கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு போன்ற முக்கிய வழக்குகளின் விசாரணைகள் நடந்தன.
ஷகில் அக்தர் திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெறும்போது சிபிசிஐடி டிஜிபியாக இருந்த நிலையில் தற்போது தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications