Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐயா.. வந்துட்டேங்கய்யா.. கருணாநிதியுடனேயே சேர்ந்துவிட்ட நிழல்.. மறக்க முடியாத சண்முகநாதன்!

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறக்க முடியாத ஆளுமை ஆகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த கருணாநிதிக்கு ஒரு நிழல் கூடவே பயணித்து வந்தது.. அந்த நிழல் கருணாநிதி சிரித்தால் சிரிக்கும், அவர் துயருற்றால் பதைபதைக்கும்... படுக்கையில் சோர்வாக சாய்ந்தாலே துடிதுடிக்கும்... என்றைக்கு அந்த நிஜம், கனவாகி போனதோ அன்றே அந்த நிழலும் சுருண்டு விழுந்து விட்டது.. அவர்தான் திரு. சண்முகநாதன்.

யார் இந்த சண்முகநாதன்? கருணாநிதியை நினைத்து பார்த்தாலே, மற்றொரு உருவமும் நம் கண்களுக்கு வந்து நிற்கிறது என்றால் அது சண்முகநாதனை தவிர வேறு யாராக இருக்க முடியும்?

ஆரம்ப காலத்தில் கருணாநிதி ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று கூட்டம் நடத்துவார்.. அப்போதெல்லாம் கூட்டத்தை முந்தியடித்து கொண்டு, கையில் எதையோ வைத்து எழுதி கொண்டிருப்பார் சண்முகநாதன்.. இதை மெல்ல மெல்ல கருணாநிதி கவனிக்கிறார்..

ஒற்றை தோற்றம்

ஒற்றை தோற்றம்

எங்கெல்லாம் கூட்டம் நடத்த போகிறாரோ, அங்கெல்லாம் முன்வரிசையில் இந்த நபரை கருணாநிதியின் கண்கள் தானாகவே ஆழமாக துழாவ ஆரம்பித்து விடுகிறது. பிறகுதான் அழைத்து விசாரித்து தன்னுடனான பயணத்தில் சண்முகநாதனை இணைத்து கொள்கிறார். 50 ஆண்டுகளாக கருணாநிதியின் வலதுப்புறத்தில் உதவியாளராக நின்று கொண்டு, அவர் பேசுவதை குறித்து கொள்ளும் ஒரு உதவியாளராக மட்டுமே சண்முகநாதன் இருந்துவிடவில்லை.. கருணாநிதிக்கு ராம பக்த அனுமான் மாதிரி... கலைஞரின் மூளை... கலைஞரின் கை.. கலைஞரின் மனம்.. கலைஞரின் எண்ண ஓட்டம்.. இவை அத்தனையும் சண்முகநாதன் என்ற ஒற்றை தோற்றத்தில் வெளிப்பட்டு கொண்டே இருந்தது.

வாய்ஸ்

வாய்ஸ்

பொதுவாக, கருணாநிதி ஒருவர் மீது எந்த விதமான அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்பதை இவரது வாய்ஸ் மூலமே தெரிந்து கொள்ளலாம் என்பார்கள்...இன்று அவரின் தலைமடியில் அமர்ந்துக் கொண்டிருக்கிறார். கோபாலபுர இல்லம், முரசொலி அலுவலகம், அரசியல் மேடைகள் என கருணாநிதி செல்லும் அனைத்து இடங்களிலும் அவருடன் செல்லும் ஒரே நபர் உதவியாளர் சண்முகநாதன் தான்... கருணாநிதியை சந்திக்க வரும் முக்கிய தலைவர்கள், கழக நிர்வாகிகள் என எல்லாருமே குட்டிபிஏ என்று தான் சண்முகநாதனை கூப்பிடுவார்கள்.

மனஓட்டம்

மனஓட்டம்

ஆனால், கருணாநிதிக்கும் சண்முகநாதனுக்கும் அப்படி என்னதான் உறவு என்பது மட்டும் யாராலும் எளிதில் விளங்கி கொள்ள முடியவில்லை.. கருணாநிதியின் கண் அசைவை வைத்தே அவரது மனஓட்டத்தை துல்லியமாக எடைபோடுபவர் திராணி சண்முகநாதனுக்கு இருந்தது.. கருணாநிதியின் தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருக்கும் "மனவைத்தியர்" சண்முகநாதன் மட்டுமே.. கருணாநிதி அருகில் தயாளு அம்மாள் ராஜாத்தி அம்மாள், இருவர் இருந்தபோதிலும்சரி, சண்முகநாதனின் இருத்தலையும், அங்கீகாரத்தயும், அன்பையும் யாராலும் அசைக்க முடியவில்லை. இன்னும் சொல்லபோனால் கருணாநிதியின் சில கோப தாபங்களுக்கு "இடிதாங்கி"யாகவும் திகழ்ந்திருக்கிறார் சண்முகநாதன்.

மாறன்

மாறன்

எம்ஜிஆரின் பிரிவு, எமர்ஜென்சி காலகட்டம், முதலமைச்சர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி, சொந்த வாழ்க்கை, முரசொலி மாறனின் மரணம் என கருணாநிதியை உலுக்கிஎடுத்த அத்தனை தருணங்களையும் சண்முகநாதன் மட்டுமே அறிந்து வைத்துள்ளார்.. அரை நூற்றாண்டாக உதவியாளராக அதுவும் ஆளுமை உள்ள உதவியாளராக இருப்பது என்பது அரிதான விஷயம்.. கருணாநிதியின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண்அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர்.. அரசியல் வாழ்வின் ஆவணம் என்றுகூட சொல்லலாம்.

முடிவுகள்

முடிவுகள்

குறிப்பெடுக்கும் வேலை இல்லாத நேரத்திலும், சண்முகநாதன் மேற்கொண்ட பணி அபாரமானது.. கூட்டணி பேச்சுவார்த்தை, முக்கிய அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்பின்போதெல்லாம் கருணாநிதியுடன் இருந்தவர்.. எந்த முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் பிறர் கருத்தை மதித்து கேட்கும் பழக்கமுடையவர் கருணாநிதி.. அருகில் இருக்கும் துரைமுருகன், பேராசிரியரிடம் கேட்பது போலவே, "நீ என்னய்யா சொல்றே" என்று சண்முகநாதனிம் கேட்கும் பண்பை கருணாநிதி வைத்திருந்தார்.. அந்த பண்பை ஏற்று, "ஐயா.. இதை இப்படி செய்தால் நல்லா இருக்கும்ங்கய்யா" என்று பணிவான தன் கருத்தை மெல்ல உதிர்ப்பார் சண்முகநாதன்..

அபார நினைவாற்றல்

அபார நினைவாற்றல்

மற்றபடி ஒன்றாகவே 50 வருடங்கள் பயணித்து வந்தாலும் இவர்களுடனான பேச்சு வார்த்தைகள் மிக மிக குறைவுதான்.. பரஸ்பர புரிதல் மட்டுமே இவர்களின் 50 வருட கால இணைப்பை சாத்தியமாக்கியது.. கருணாநிதி போலவே அபாரமான நினைவாற்றல் கொண்டவர் சண்முகநாதன்.. கடினமான உழைப்பாளி.. முதலமைச்சராக இல்லாதபோது, தன் தலைமைகளை கண்டும் காணாமல் போய்விடும் சுயநல மனிதர்கள் மத்தியில் தனித்துவம் வாய்ந்த மனிதராக நடமாடியவர் சண்முகநாதன் மட்டுமே.. இந்த உதவியாளர் பணியில் தொடர்வதற்காகவே அரசு வேலையை துறந்த குணாளன்..!

மேடைகள்

மேடைகள்

ஒவ்வொரு மேடையிலும் கருணாநிதி பேசி முடித்து, அவர் உருவம் கொஞ்சமாக விலகி செல்லும்போதெல்லாம், சண்முகநாதன் மீதான நம் கவனம் அதிகமாக குவிவதை தவிர்க்க முடிவதில்லை என்பதே இவரது இருத்தலை நியாயப்படுத்திவிடுகிறது.. இனி வரலாற்றில் கருணாநிதி பற்றி எழுதும்போதெல்லாம், பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு யாராலுமே எழுத முடியாது.. அப்படி மீறி எழுதுவதற்கும் யாருக்கும் துணிவு வராது...

Recommended Video

    #BREAKING கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்!
    அந்நியோன்யம்

    அந்நியோன்யம்

    கருணாநிதி இறந்தபோதே சண்முகநாதனுக்கு பாதி உயிர் போய்விட்டது.. அன்றைய தினமெல்லாம், கண்களில் மீன்பிடிக்கும் அளவுக்கு நீர் ததும்ப ததும்ப நிரம்பி கிடந்தது ஒன்றே இவர்களின் அந்நியோன்ய பிணைப்பை நியாயப்படுத்தி கொண்டிருந்தது.. இன்று தன் மனம் கவர்ந்த ஐயாவுடனேயே ஐக்கியமாகிவிட்டார் சண்முகநாதன்.. இந்த திராவிட இயக்கம் வருங்காலத்திலும் மகத்துவம் பெறுகிறது என்றால், அது சண்முகநாதன் போன்ற விசுவாசிகளின் ரத்தத்தாலும், சதையாலும், நாடி நரம்பாலும் என்பதை மட்டும் மறுக்கவும் முடியாது.. மறுத்துவிடவும் முடியாது..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+