"அவரா".. VJ சித்ராவின் மரணத்துக்கு காரணம் 8 பேரா?.. கடலூர் மாஜி? புதுக்கோட்டை புள்ளி? தீரா குழப்பம்
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் தொடர்புடைய 4 பேர் யார் என்று தெரியவில்லை
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் 2 விதமான கேள்விகள் தற்போது வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. அத்துடன் டிவி நடிகை சித்ரா இறந்து ஒரு வருடம் கடந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை உடனே தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் சித்ரா ரசிகர்கள் தரப்பில் வெடித்து வருகின்றன.
சித்ரா இறந்து ஒரு மாதத்துக்கு மட்டும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.. ஹேம்நாத்தை கோர்ட் விடுவித்தபிறகு, சித்ரா குடும்பத்தினர் தரப்பிலும் அமைதியே தென்பட்டது.
இப்போது ஒரு வருட காலம் முடிந்து மீண்டும் சூடுபிடித்துள்ளது சித்ராவின் வழக்கு.. இதற்கு காரணம் ஹேம்நாத்தான்.. அவர் சொன்ன 3 விஷயங்கள் இங்கு கவனிக்கத்தக்கது..

அரசியல் புள்ளிகள்
முதலாவதாக, தனக்கு கொலை மிரட்டல், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பாதுகாப்பு கேட்டு போலீசுக்கு சென்றுள்ளார்.. அடுத்ததாக, சித்ராவின் மரணத்துக்கு காரணமான அரசியல் புள்ளிகள் யார், சம்பந்தப்பட்ட 4 பேர் யார் என்று தெரியும், நள்ளிரவு சித்ரா சாவதற்கு முன்பு ஹோட்டலில் என்ன நடந்தது? என்பன போன்ற விவரங்களை விலாவரியாக சொல்லி உள்ளார்.. இந்த 3 விஷயங்களையும் ஹேம்நாத் ஏன் அன்றே போலீஸ் பிடியில் இருந்தபோது சொல்லவில்லை என்ற சந்தேகம் எழுகிறது.

அரசியல்வாதி
இப்போதுகூட போலீஸ் வரைக்கும் ஹேம்நாத் வருகிறார் என்றால், அது சித்ரா மரணத்துக்கான நியாயமாக தெரியவில்லை.. தன்னுடைய உயிரை பாதுகாத்து கொள்ளவே என்றும் சித்ரா ரசிகர்கள் கொந்தளித்து சொல்கிறார்கள்.. சித்ராவின் மரணத்தில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் என்றால், ஒருவர் மாஜி, மற்றொருவர் அரசியல்வாதி என்று பொதுவாக சொல்லப்படுகிறது. ஆனால் 2 பேருமே அமைச்சர்களாக இருந்தவர்கள்தானாம்.. அதில் ஒருவர் இன்று எம்எல்ஏவாக இருக்கிறார்..

கடலூர் , புதுக்கோட்டை
இவரை பற்றி ஒரு க்ளூவும் வெளியாகி உள்ளது.. இவர் ஏற்கனவே ஒரு கட்சியில் அமைச்சராக இருந்து, பிறகு வேறு கட்சிக்கு மாறிய பிறகுதான் சீட் தந்து எம்எல்ஏவாக தற்போது உள்ளாராம்.. ஆனால் எந்த கட்சியில் இருந்தாலும், இவர் செல்வாக்கு மிக்கவராகவே திகழ்ந்து வருகிறாராம்.. ஆனால், அவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் இருவேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. புதுக்கோட்டை மாஜியா? சமீபத்தில் கைதானவரா? அவரது மகனா? கடலூர் மாஜியா? இல்லை அவரது மகனா? போன்ற சந்தேகங்கள் வலுக்கின்றன.

ரேகா நாயர்
மற்றொரு பக்கம் சித்ராவின் தோழியும் சீரியல் நடிகையுமான ரேகா நாயர், ஒரு சேனலுக்கு ஹேம்நாத் பற்றி அளித்த தகவலையும் கடந்து விட்டு போக முடியாது.. "ஹேம்நாத் ஒரு நல்ல ஆம்பளையே இல்ல, ஊதாரித்தனமாக குடித்து கும்மாளமாய் இருக்கிறான். பொண்டாட்டி செத்தவன் மாதிரியா இருக்கான்? ஹேம்நாத் அப்பவே ஒரு பிரபலமான அரசியல் கட்சிகளுக்கு பெண்களை சப்ளை செய்வான்.

உல்லாசம்
அந்த வலையில் தான் சித்ரா மாட்டிக் கொண்டாள், இப்பவும் அவன் வெளியே வந்த பிறகு அதே வேலையைத் தான் பாக்கிறான், மற்றும் 11 பெண்களுடன் உல்லாசமாக இருக்கிறான்.. அவன் பல பெண்களின் வாழ்க்கையோடு விளையாண்டு கொண்டு இருக்கிறான். அந்த பெண்களோடு உல்லாசமாக இருக்கும் போட்டோக்கள் என்னிடம் உள்ளது. ஆகையால் சித்ராவின் மரணம் தற்கொலை இல்லை, கொலைதான்.அதுவும் ஹேம்நாத் மட்டும் செய்யவில்லை, அவன் பின்னாடி 4 பேர் இருக்கிறார்கள்" என்கிறார்.

4 பேர்
ஹேம்நாத் பற்றி ஆரம்பத்தில் இருந்து புட்டு புட்டு வைத்து வருபவர் ரேகா நாயர்... இப்போதும் அதே குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், இதையும் போலீசார் கவனிக்க வேண்டும் என்பதே சித்ரா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..ஹேம்நாத்தும் சித்ரா மரணத்துக்கு காரணம் 4 பேர் என்கிறார்.. ரேகா நாயரும் சித்ரா மரணத்துக்கு 4 பேர் காரணம் என்கிறார் என்பதால், இதில் 8 பேர் சம்பந்தப்பட்டுள்ளார்களா? ரேகா நாயர் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாக சொல்லும்போது, அதையும் பரிசீலிக்கலாமே? தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அரசாவது நிஜகுற்றவாளிகளை வெளியே கொண்டு வருமா என்பதே அவர்களின் ஆதங்கமாக கிளம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications