"மாஜி அமைச்சர்".. சித்ராவுடன் 4 புள்ளிகளுக்கு தொடர்பாமே.. நடிகைகளை சீரழிக்கும் "விஐபி".. பரபர தகவல்
நடிகை சித்ராவின் மரணத்தில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் யார் என்று தெரியவில்லை
சென்னை: சித்ரா மரணம் தொடர்பாக 2 விஷயங்கள் தற்போது கசிந்து வருகின்றன.. இதனால் சித்ரா தற்கொலை வழக்கு சூடுபிடித்து வருகிறது.
சித்ரா இறந்தபோதே, விசாரணை சமயத்தில் ஏராளமான யூகங்களும், தகவல்களும், வெளியாகின.. கடைத்திறப்பு விழாக்களுக்கு அதிகம் செல்வதால், அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் சித்ராவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்தது.
அதிலும், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் வரிசையில் ஒரு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயரும் அப்போது அடிபட்டது..

ஹேம்நாத்
இந்த அரசியல் பிரமுகர் சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்து வந்ததாக, அவர் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் தெரியவந்தது. இவர் சித்ராவை டேட்டிங் அழைத்து சென்று, அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்தன.. அதாவது, ஆடம்பர பிரியரான ஹேம்நாத்தோ, டிப்டாப் டிரஸ் போட்டுக் கொண்டு, பெரிய வீட்டு பிள்ளை போலவே வலம் வந்துள்ளார்.. விஐபி மகன்கள், விவிஐபி அரசியல்வாதிகளின் மகன்கள் என சிலருடன் தொடர்பு வைத்து கொண்டு, பார்ட்டி, பப்பு என்று சுற்றி வந்தாராம்..

டாக்டர் சீட்
அதுமட்டுமல்ல, பிரபலங்களின் மகன்களுடன் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டு, பெரிய இடத்து பழக்கம் தனக்கு இருப்பதாக தனக்கு தெரிந்தவர்களிடம் காட்டிக் கொண்டு, அரசு வேலை, டாக்டர் சீட் வாங்கி தருகிறேன் என்று உதார் விட்டு, கோடிக்கணக்கில் மோசடி செய்ய ஆரம்பித்துள்ளதாகவும், அது தொடர்பாக புகாரும் பதிவான கூறப்பட்டது.

அரசியல்வாதி மகன்
முக்கியமான அரசியல்வாதி ஒருவரின் மகன் தனக்கு நெருக்கம் என்று சொல்லி, மெடிக்கல் சீட்டுக்காக கோடி கணக்கில் ஏமாற்றினாராம் ஹேமந்த்.. அதனால் பணத்தை இழந்தவர்கள் ஹேமந்த்தை நெருக்கவும், ஹேமந்த் சித்ராவிடம் பணத்தை கறக்க ஆரம்பித்ததாக சொல்லப்பட்டதே தவிர அந்த அரசியல்வாதி மகன் யார் என்று தெரியவில்லை.. அதேபோல, மேலும், ஹேந்த்தின் நண்பரான இன்னொரு அரசியல்வாதி மகனுக்கும் சித்ரா மீது ஈர்ப்பு இருந்ததாக சொன்னார்கள்.. அவரும் யார் என்று தெரியவில்லை.

தொழிலதிபர்
இந்த யூகங்களுக்கு பதில் கிடைக்காத நிலையில்தான், ஹேம்நாத் புது குண்டை ஒன்றை தூக்கி போட்டுள்ளார்.. தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு போலீசில் புகார் மனு தந்துள்ளார்.. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேம்நாத், "சித்ராவுக்கு 4 பேருக்கு தொடர்பு இருந்தது.. ஒருவர் அரசியல் தலைவர், இன்னொருவர் தொழிலதிபர், இன்னொருவர் போதை பொருள் கும்பலை சேர்ந்தநபர், இன்னொருவர் அரசியல்வாதி மகன் என 4 பேரையும் குறிப்பிட்டுள்ளார்.

விஐபி மகன்
இதில் அந்த அரசியல்வாதிதான் சித்ராவுக்கு அதிக டார்ச்சர் தந்தார் என்றும், அவர் ஒரு முன்னாள் அமைச்சர் என்றும் ஹேம்நாத் சொல்கிறார்.. சித்ரா அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி பகீர் தகவலையும் ஹேம்நாத் செய்தியாளர்களிடம் ஓபனாகவே சொல்லி உள்ளார்.. ஆனால், சம்பந்தப்பட்ட 4 பேரின் பெயர்களையும் ஹேம்நாத் சொல்லவில்லை.. மேலோட்டமாக 4 பேரையும் குறிப்பிட்டுள்ளாரே தவிர, ஏன் பெயர்களை சொல்லாமல் மறைத்துள்ளார் என்பது அடுத்த சந்தேகமாக எழுகிறது.

சிவநாகேஷ்
இதனிடையே, ஹேம்நாத்தின் வழக்கறிஞர் சிவ நாகேஷ் இன்னொரு பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது, வளர்ந்து வரும் நடிகைகளை சின்னத்திரையுலகை சேர்ந்த ஒருவர் மெயின்டெய்ன் செய்து, போதை பழக்கத்தை ஏற்படுத்தி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.. இவரும் அந்த நபர் யார் என்று ஓபனாக சொல்லவில்லை..

போதைப்பழக்கம்
சித்ராவுக்கு போதை பழக்கம் இருந்ததாக அப்போதே சொல்லப்பட்ட நிலையில், தற்போது சிவநாகேஷ் சொல்லி உள்ள இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்து போய்விட முடியாது.. அதேசமயம், ஹேம்நாத்தும்சரி, வழக்கறிஞரும் சரி, யார் பெயரையும் குறிப்பிடாமல் பூடகமாகவே பேட் தந்துள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.. எனவே எப்படி பார்த்தாலும், நம் போலீசார்தான் என்ன நடந்தது என்பதை வெளியே கொண்டு வர வேண்டும்.. சைக்காலாஜி படித்த தைரியமான பெண்ணான, சித்ராவின் மரணத்துக்கும் நீதி கிடைத்தாக வேண்டும்..!

வேண்டுகோள்
அதுமட்டுமல்ல, மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களின் பெயரை வெளியே சொன்னால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அந்த அரசியல் தலைவர் மிரட்டி வருவதாக ஹேம்நாத் வெளிப்படையாகவே அச்சம் தெரிவித்துள்ளதால், இதுகுறித்த விசாரணையை போலீசாரும் உடனடியாக துவங்க வேண்டும் என்று சித்ராவின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர்.. சித்ரா இறந்து ஒரு வருடம் மேல் ஆன நிலையில், இன்னும் அது தொடர்பாக ஒருவரும் கைதாக இருப்பதும் பலவித சந்தேகங்களை ஏற்படுத்தி வருவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications