"கறுப்பு ஆடு".. அந்த "மேட்டர்" எப்படி கசிந்தது.. டென்ஷனில் திமுக.. நாளைக்கு என்ன நடக்க போகிறது?

கருப்பு ஆடு யார் என்று கண்டுபிடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிலும் 2 விஷயங்கள் கசிந்து வருகின்றன.. இதனால் 2 கட்சிகளுமே பரபரப்பாக காணப்படுகின்றன.

அதிமுக - பாஜக இடையே நடந்து வரும் உரசலை பயன்படுத்தி, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன.. அதாவது வரும் எம்பி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறும் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று பாமக கணக்கு போடுகிறது.

ஆனால், எவ்வளவுதான் ஆதரவாக செயல்பட்டாலும், பாமகவை தங்களுடன் சேர்த்து கொள்ள திமுகவிடம் ஒருவித தயக்கம் இருந்து வருகிறது.

 பூசல்கள்

பூசல்கள்

அதனால்தான், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில், பாமக தலைவர் அன்புமணி இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. இப்படி எம்பி தேர்தலை முன்னிறுத்தி இப்போதே, கூட்டணி வேலைகள் துவங்கி உள்ள நிலையில், சொந்த கட்சிகளுக்குள் நிலவும் உட்கட்சி பூசலை மட்டும் யாராலும் தீர்த்து கொள்ள முடியவில்லை.. அந்த வகையில் அதிமுக, திமுக இரண்டு கட்சியிலுமே குழப்பமும், அதிருப்திகளும், வெடித்து வருகின்றன.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை பொறுத்தவரை, ராஜ்ய சபா எம்பி வேட்பாளர் விவகாரத்தில் நிறைய டைம் எடுத்து கொண்டது.. 2 சீட்டுக்கு, 2 மாதமாக யோசித்து வந்தார்கள்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் என ஆளுக்கு ஒருவர் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த, அதன்படியே வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர்.. ஆனால், இந்த பதவியை குறி வைத்து எத்தனையோ சீனியர்கள் வலை விரித்திருந்தனர்.. அத்தனை பேரும் அப்செட்டுக்கு ஆளாகி உள்ளனர்.. அதனால், அதிருப்தியாளர்கள் பெருகிவிட்டதால், இவர்கள் ஒருவேளை சசிகலா பக்கம் தாவுவார்களோ என்ற டென்ஷன் எடப்பாடி தரப்பை சூழ்ந்துள்ளது.

 சிக்கல் நீள்கிறது

சிக்கல் நீள்கிறது

ஆனால், அப்படியே சசிகலா பக்கம் தாவினாலும், அனைத்து அதிருப்தியாளர்களுமே ஒரேடியாக தாவிவிட முடியாது என்பதால், வரப்போகும் பொதுக்குழுவில் இந்த பிரச்சனையை கிளப்ப அவர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.. பதவியில் இருந்தவர்களுக்கு திரும்ப திரும்ப பொறுப்பை தந்தால் எப்படி? என்றும் கேள்விகளை முன்னெடுக்க போகிறார்களாம்.. கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு கணக்கு போட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு இத புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

 கறுப்பு ஆடு

கறுப்பு ஆடு

அதேபோல, திமுகவை பொறுத்தவரை, பாஜகவை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.. அதிலும் ஊழல் அமைச்சர்கள் லிஸ்ட்டை ஆதாரத்துடன் அண்ணாமலை சொல்லி வரும் நிலையில், இதுவும் திமுகவுக்கு கலக்கம் தந்துள்ளது.. ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என்று சவால் விடுகிறார் என்றால், அந்த ஆதாரங்கள் அவருக்கு எப்படி சிக்கின? யார் தந்தது? திமுகவுக்குள்ளேயே கறுப்பு ஆடுகள் உள்ளனரா? அவர்கள் யார்? என்பதே திமுக மேலிடத்தில் சுற்றி வரும் கேள்விகள்..!

 கருப்பு ஆடு

கருப்பு ஆடு

தாங்கள் மட்டும் ஊழலில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஒருசில புள்ளிகள், திமுகவின் ஊழல் லிஸ்ட்டை பாஜகவுக்கு தந்தார்களா? அல்லது அண்ணாமலையே தகவலை திரட்டி கொண்டாரா? அல்லது திமுகவுக்கு ஒரு பதற்றத்தை தருவதற்காக வேண்டுமென்றே இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டாரா? என்று தெரியவில்லை.. எனினும், அந்த கருப்பு ஆடு யார் என்று கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளதாம் மேலிடம்.. திமுகவின் ஊழல் அமைச்சர்கள் யார் என்று நாளைக்கு சொல்ல போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளதால், இந்த பதட்டமும் கட்சிக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+