தமிழக தகவல் தலைமை ஆணையர் யார்? பரபர ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின்..பதவி யாருக்கு கிடைக்கும்?
சென்னை: மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தகவல் ஆணையர் பதவிக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. மாநில தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால், தகவல் ஆணையர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோர் செயல்பட்டனர்.

தகவல் ஆணையராக பணியாற்றுவோருக்கு 3 ஆண்டுகள் பணிக்காலமாகும். அந்த வகையில், தலைமை தகவல் ஆணையர் ஆர்.ராஜகோபாலின் பதவிக்காலம் நவம்பர் 20ஆம் தேதி முடிவடைந்ததால், அவர் பணியில் இருந்து விலகினார். அதேபோல, தகவல் ஆணையர்கள் எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோரது பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிந்தது
இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் பதவிகளுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கான கால அவகாசம் முடிவடைந்து, விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணி தொடங்கப்பட்டது.
தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 15(6)ன் படி நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டசபை உறுப்பினரோ தகவல் ஆணையராக பொறுப்பு வகிக்க முடியாது. ஊதியமாக வரக்கூடிய பணிகளில் இருப்போர் அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்படுவோர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் போன்றோர் விண்ணப்பித்துக் கொள்ள முடியாது.
தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களுக்கான பதவிக்காலம் 3 வருடங்கள் ஆகும். . தலைமை தகவல் ஆணையரின் ஊதியம் ரூ. 2. 5 லட்சமாகவும், தகவல் ஆணையா்களின் ஊதியம் ரூ. 2.25 லட்சமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழு,. அதற்கான தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்துள்ளது.
அது தொடர்பான அறிக்கையை தலைமைச்செயலகத்தில், முதல்வர் மு.க ஸ்டாலினிடம் தேடுதல் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பித்தார். அந்தப் பட்டியலில் இருந்து, தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்களை முதல்வர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்யும்.
இதற்கிடையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு விண்ணப்பித்திருந்தார். அதனால், அவருக்கே தலைமை தேர்தல் ஆணையர் பதவி கிடைக்கும் வாய்ப்ப உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தலைமைச்செயலாளராக உள்ள இறையன்பு பணி நிறைவு பெறும் ஜூன் மாதம் முடிவடையும் நிலையில், அவர் தமிழக தகவல் தலைமை ஆணையராக நியமனம் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியானது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு , ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தர் உள்பட பலரும் விண்ணப்பித்திருந்தனர்.
தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டம் மார்ச் மாதம் நடைபெற்றது. அப்போது எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில்
மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநில தகவல் தலைமை ஆணையர் யார் என்பது பற்றிய தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
-
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி












Click it and Unblock the Notifications