ஸ்டாலினுக்கு போனை போட்ட "புள்ளி".. யார் அந்த "அமைச்சர்".. கோட்டை வரை பறந்த புகார்.. பரபரக்கும் திமுக
கோட்டை வரை திமுக அமைச்சர் மீது புகார் சென்றுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு நாலாபக்கமிருந்தும், எதிர்க்கட்சிகளால் விமர்சனங்கள் கூடி வரும் நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே தர்மசங்கடங்களும் அதிகரித்து வருகின்றன.
10 வருடம் கழித்து திமுக ஆட்சியை எட்டிப்பிடித்தது.. அமைச்சர்கள் பதவியேற்று கொண்ட அன்றே, முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம், வார்னிங் ஒன்றை பிறப்பித்திருந்தார்.
அமைச்சர்கள் யார் மீதெல்லாம் புகார்கள், சர்ச்சைகள் எழுகிறதோ, அவைகள் விசாரிக்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை தயவுதாட்சண்யம் இல்லாமல் எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்

வார்னிங் தந்த ஸ்டாலின்
முதல்வர் இப்படி அறிவுறுத்தியிருந்தும், வெகுசீக்கிரத்தில் சர்ச்சைகள் அமைச்சர்கள் மீது வெடித்தது.. அதுவும் சீனியர் அமைச்சர்கள் மீதே புகார்கள் அறிவாலயம் வந்து சேர்ந்தன.. இதனால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் என்ற செய்தி இந்த ஒரு வருட காலமாகவே அடிபட்டு வருகிறது.. ஆனால், ஸ்டாலினின் கரிசனம், கனிவு மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், குறிப்பிட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமலேயே உள்ளது.. தற்போதுவரை அமைச்சரவையும் மாற்றப்படவில்லை.

உதயநிதி
தற்போது, உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திமுகவில் பலர் விரும்புவதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது.. அதுவும், ஊரக உள்ளாட்சியையும், நகர்ப்புற உள்ளாட்சியையும் இணைத்து உள்ளாட்சி துறை அமைச்சராக்க வேண்டும் என திமுகவில் வலியுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இதற்காக, அமைச்சர் நேருவின் நகர்ப்புற வளர்ச்சித்துறையை உதயநிதிக்கு தந்துவிட்டு, நேருவுக்கு வேறு இலாகா ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.. இதற்கு நேருவும் ஓகே சொன்னதாக ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில், இப்போது நேரு மீது புது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

நேரு சர்ச்சை
திமுக அரசின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது... இதில் அமைச்சர்கள் கலந்துகொண்டு சாதனைகளை விவரித்துப் பேசி வருகின்றனர். அந்த வகையில், திருச்சியிலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.. இதில், அமைச்சர்கள் நேரு, பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் நேரு பேசும்போது, எம்எல்ஏக்களை அடிமைகள் என்று விமர்சித்து பேசியிருந்தார்..நேரு இப்படி பேசியது, மேடையில் இருந்த பொன்முடி உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூல் செய்த பொன்முடி
இருந்தாலும், நேருவின் பேச்சுக்கு, அதே மேடையில் பொன்முடி பதிலடி தந்தார்... பொன்முடியின் இந்த சமாளிப்பையும், சமாதானத்தையும் கண்டு, எம்எல்ஏக்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர்.. மேலும், பொன்முடிக்கே நேரடியாக போனை போட்டு நன்றியும் சொல்லி கொண்டனர்.. "நேருவுக்கு இன்னும் எஜமான புத்தி மாறவில்லை. 10, 15 வருடங்களுக்கு முன்பு இப்படி பேசுவது அவரது இயல்பாக இருக்கலாம். அப்படியே இப்பவும் இருப்பது சரிகிடையாது.. இதே இயல்பு தொடர்ந்தால் எம்எல்ஏக்கள் கோபப்பட்டுவிட்டால் ரசாபாசமாகிவிடும். தலைவர் காதுக்கு இதை நீங்கள் தான் கொண்டு போகனும்" என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்,

கோட்டைக்கு புகார்
பொன்முடியும் இது குறித்து ஸ்டாலினை தொடர்புகொண்டு எம்எல்ஏக்களின் கோபத்தை சொன்னதுடன், "நேருவின் இயல்பை மாத்திக்கச் சொல்லி அவரிடம் அறிவுறுத்துங்கள்" என சொல்லியுள்ளாராம் பொன்முடி... அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் பொறுமையாக கேட்டுக் கொண்டாராம்.. ஏற்கனவே அமைச்சரவை மாற்றம், இலாகா மாற்றம் என்ற பரபரப்பில் திமுக மேலிடம் உள்ளபோது, வாயை கொடுத்து சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார் நேரு.. இதுகுறித்து முதல்வர் என்ன நடவடிக்கை எடுப்பார்? தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications