ஓவர் கவர்ச்சி.. குமட்டும் ஆபாசம்.. "கண்ணா என் சேலைக்குள்ளே".. 3 நாள்கூட ஆகல.. அதுக்குள்ள நாமக்கல்லில்
கோயில் திருவிழாவில் ஆபாச நடனம் ஆடியதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது
சென்னை: ஆபாச நடனங்களை நடத்தக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டு, முழுசா 3 நாள்கூட ஆகவில்லை.. அதற்குள் நாமக்கல்லில் கவர்ச்சி நடனங்களை ஆட ஆரம்பித்துவிட்டார்கள்..
தமிழக கிராமப்பகுதிகளில் நிகழும் கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தும் வழக்கம் பாரம்பர்யமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது... இந்த ஆடல்பாடல் நிகழ்ச்சிகளில், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவை இடம்பெற்றிருந்தன.
ஆனால், சமீபகாலமாக, பாரம்பரிய நடனங்கள் குறைந்து, கவர்ச்சி நடனங்கள் அதிகமாகிவிட்டன.. பல சமயங்களில் கட்டுப்பாடுகளின்றி ஆபாசம் நிறைந்ததாகவே இவை இருந்து வருகின்றன.

ஆபாச டான்ஸ்
இதுபோன்ற நடனங்களை ஒருதரப்பினர் ரசித்தாலும்கூட, பெரும்பாலான பொதுமக்களை முகம்சுளிக்க வைத்துவிடுகிறது.. அதனாலேயே, கோயில் விழாக்களில் எங்காவது ஆபாச நடனம் நடந்தால், அந்தந்த பகுதி பொதுமக்களே போலீசில் புகார்களை தர முன்வந்தனர்.. அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சிகளில், சாதி தொடர்பான பிரச்சனைகள் வெடித்து, அது மோதலாகவும் உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.. இதுபோன்ற நடனங்களை நடத்தக்கூடாது என்று கடிவாளங்கள் போட்டாலும் யாரும் கேட்பதில்லை.. கட்டுப்பாடுகளை மீறி, கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்கள் அரங்கேறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கிளாமர் டான்ஸ்
இதனிடையே, திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கோவில் திருவிழாக்களில் இரவு நேரத்தில் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு கோரி, மதுரை ஹைகோர்ட்டில் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், உயர்நீதிமன்ற நீதிபதி சக்திகுமார் முன்பு 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் திருவிழாக்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது.

டைம் லிமிட்
"கோவில் திருவிழாவின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி அல்லது மதத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களையோ, மதுபானங்களையோ உட்கொள்ளக்கூடாது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும், நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரீகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது.

நாமக்கல்லில்...
அரசியல், மதம், சமூகம், சாதி உள்ளிட்டவற்றை குறித்து பாடல்களோ, நடனமோ இருக்கக்கூடாது என கடுமையான உத்தரவுகளை கோர்ட் பிறப்பித்திருந்தது... இந்த தீர்ப்பினை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்று வருகின்றனர்.. ஆனால், இப்படி நீதிமன்றம் ஒரு உத்தரவு போட்டு 3 நாட்கள் கூட முடிவடையாத நிலையில், அதற்குள்ளாகவே, மறுபடியும் ஆபாச டான்ஸ் ஆடியுள்ளார்கள் நாமக்கல்லில்...!

ஆர்கெஸ்ட்ரா
குமாரபாளையம் அருகே உள்ள பழைய பள்ளிபாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.. இதையடுத்து, கோயில் கமிட்டி சார்பில் ஆர்கெஸ்ட்ரா மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சினிமா நடிகை அஷ்மிதா கலந்து கொண்டு பாடல்களுக்கு நடனம் ஆடினார்... இதில் பல பாடல்கள் அரைகுறை ஆடையுடன் மிக கவர்ச்சியாக இருந்ததால் பார்ப்போர் முகம் சுளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சேலைக்குள்ளே..
அதிலும், "கட்டிப்புடி கட்டிப்புடிடா, கண்ணா என் சேலைக்குள்ளே..." போன்ற பாடல்களுக்கும் மிக மோசமான நடன அசைவுகளுடன் ஆடியிருக்கிறார்கள்.. இந்த நிகழ்வினை அறிந்த பொதுமக்கள் கடுமையான அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. இதுபோன்ற கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..


Click it and Unblock the Notifications
