Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜீவ் குண்டுவெடிப்பில் அப்பாவை இழந்தவர்! சீமான் வீட்டில் துணிச்சலாக புகுந்த போலீஸ் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் சீமான் வீட்டிற்குள் துணிச்சலாக புகுந்து அவரின் காவலாளியை கைது செய்துள்ளார். காவலாளி கையில் துப்பாக்கி இருக்கும் போதே.. துப்பாக்கியின் ட்ரிக்கர் அருகே காவலாளி கை இருக்கும் போதே துணிச்சலாக உள்ளே புகுந்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் அவரை கைது செய்துள்ளார்.

தற்போது நீலாங்கரை காவல் ஆய்வாளராக உள்ளார் பிரவீன் ராஜேஷ். இவர் முன்னாள் ஆய்வாளர் ராஜகுருவின் மகன் ஆவார். ராஜகுரு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர். அப்பா மரணத்தை பார்த்தும்.. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று போலீஸ் பணிக்கு இவர் வந்தார்.

seeman naam tamilar katchi

சட்ட ஒழுங்கில் முக்கியமான போலீஸ் அதிகாரியாக, மிகவும் நேர்மையான, துணிச்சலான அதிகாரியாக பார்க்கப்படுகிறார். முக்கியமாக நீலாங்கரை பாதுகாப்பு வழங்குவதிலோ சிக்கலான இடம் என்றாலும் அதை துணிச்சலாக திறம்பட செய்து வருகிறார்.

இவருக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர்தான் சீமான் வீட்டில் கிழிக்கப்பட்ட சம்மன் குறித்து விசாரிக்க சென்றார். அப்போது சீமான் காவலாளி அவரை துப்பாக்கி காட்டி மிரட்டி உள்ளார். இதை பற்றி கேட்டதும் உடனே ஜீப்பை எடுத்துக்கொண்டு சீமான் வீட்டிற்கே சென்று கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றுள்ளார் காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ்.

தனக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கேட்டதும்.. உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார்.

சீமான் வீட்டில் என்ன நடந்தது?

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழித்து போலீசாருடன் தகராறு ஏற்பட்டதால் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். சீமான் வீட்டில் இன்று நடந்த களேபரத்தை அடுத்து அங்கு நாதகவினர் வருகை புரிந்து வருவதால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது.

சீமானின் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். முன்னதாக என்னை அசிங்கப்படுத்துவதற்காக இப்படி செய்யப்படுகிறது. நான் ஆஜராவேன் என உறுதி செய்யப்பட்ட பிறகும் என் வீட்டில் ஏன் சம்மன் ஒட்ட வேண்டும், நான் இனி ஆஜராக மாட்டேன்.. நீங்கள் என்ன செய்வீர்கள்.. உங்களால் என்ன செய்ய முடியும் என்று சீமான் சவால் விடுத்துள்ளார். அவர் ஓசூரில் இருந்து பேட்டி அளித்த நிலையில் சென்னை நீலாங்கரை சீமான் வீட்டு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால் அதை மீறி நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது போலீஸ்.

சீமான் காவலாளி மிரட்டல்

விசாரணைக்கு வந்த போலீசாரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கே வந்து காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். அதோடு அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமானின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், நடிகை அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.


சீமான் துப்பாக்கி

சீமான் வீட்டு காவலாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்து 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். நாதகவில் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சீமான் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்

2010ம் ஆண்டு முதல் லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். எனினும், தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கியை, சட்ட விரோதமாக தொழில் ரீதியாக அவர் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+