ஸ்டாலின் அருகே இருந்த அந்த நபர் யார்? வெள்ளை சட்டையில் சிஎஸ்கே மேட்ச் பார்த்த "இளைஞர்"! அடடா அவரா? ஓ
சென்னை: சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னையில் நடைபெற்றது. இதனால் முதல்வர் ஸ்டாலின் இந்த போட்டியை நேரில் கண்டுகளித்தார்.
2023 ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து வந்த சிஎஸ்கே அணி தற்போது தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்க தொடங்கி உள்ளது.
2023 ஐபிஎல் சீசன் எதிர்பார்ப்பை விஞ்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. சிஎஸ்கே கேப்டன் தோனியின் கடைசி சீசனாக இது பார்க்கப்படுகிறது தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 4ம் இடத்தில உள்ளது.

இதுவரை 9 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.
அதை தவிர மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே என்று டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே எளிதாக வென்றுவிட்டது.
இந்த நிலையில் நேற்று பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி.

சிஎஸ்கே: நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 200/4 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் கான்வே அதிரடியாக ஆடி 52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடக்கம்.
இன்னொரு பக்கம் ருத்துராஜ் 31 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். 17 பந்துகள் மட்டுமே பிடித்த சிவம் துபே 28 ரன்கள் எடுத்தார்.
கடைசியில் வந்த தோனி 4 பந்துகள் பிடித்து 2 சிக்ஸர் உட்பட 13 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கே அணி அதிக ரன்களை வெற்றி இலக்காக கொடுத்து இருந்தாலும் இன்னொரு பக்கம் பஞ்சாப் அணி மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடி 201-6 ரன்களை எடுத்து வென்றது.
பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 42 ரன்களை 24 பந்தில் அடித்தார். அதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடக்கம்.

இன்னொரு பக்கம் தவான் 15 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். லியாம் லிவிங்ஸ்டன் இன்னொரு பக்கம் அதிரடியாக மிடில் ஓவர்களில் 40 ரன்களை 24 பந்துகளில் எடுத்தார். அதேபோல் சாம் குரன் 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கே அணியில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள், ஜடேஜா 2 விக்கெட்டுகள், பத்திரனா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
முதல்வர் ஸ்டாலின்: நேற்று இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது. இதனால் முதல்வர் ஸ்டாலின் இந்த போட்டியை நேரில் கண்டுகளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று நீல நிற உடை அணிந்து இருக்க அவருடன் வெள்ளை நிற உடையில் இளைஞர் ஒருவர் உடன் அமர்ந்து இருந்தார். அவர் யார் என்று நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலினுடன் மஞ்சள் நிற உடை அணிந்து உடன் இருந்தவர் பட்டாபி சுந்தர் ராமன் என்ற வழக்கறிஞர் ஆவார். இவர் ஒரு மூத்த வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட்-ஜெனரல் ஆவார். இவர் முன்னாள் அட்வகேட் ஜெனரலும் திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதியுமான வி.பி.ராமனின் இளைய மகன் ஆவார்
இவரின் சகோதரர் மோகன் வி ராமன் பிரபல சினிமா நடிகர் ஆவார்.
இன்னொரு பக்கம் வெள்ளை நிற உடை அணிந்து இருந்தவர் நடிகர் தீரஜ் என்பவர் ஆவார். போதை ஏறிப்போச்சு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ஆவார் இவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications