தமிழ்நாட்டின் புதிய டிஜிபி அவரா? லிஸ்ட்டில் யார் பாருங்க.. இன்று நடக்கிறது DGP தேர்வுக்குழு கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 30ம் தேதியோடு ஓய்வு பெற்ற நிலையில், அந்த பொறுப்புக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியல், நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், அது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான உயர்நிலைக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2023 ஜூன் மாதம் பொறுப்பேற்றிருந்தார்.. ஆகஸ்ட் 30ம் தேதி, இவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்..

New DGP Tamil Nadu central government

புதிய டிஜிபி யார்

இதனால், புதிய டிஜிபியை நியமனம் செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் தேர்தல் வரஉள்ளதால், சங்கர் ஜிவாலுக்கு மேலும் 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அந்த தகவல் உண்மை இல்லை என்று மறுப்பு வெளியானது.

வழக்கமாக, புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியல், 3 மாதங்களுக்கு முன், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த மே மாதமே இந்த பட்டியல் யுபிஎஸ்சிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், இந்த லிஸ்ட்டை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டதால், தமிழக அரசு அந்த லிஸ்ட்டை அனுப்பவில்லை என்று தெரிகிறது.

குளறுபடி - தாமதம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய டிஜிபி தேர்வு பட்டியலிலுள்ள , மூத்த ஐபிஎஸ், அதிகாரியின் ஆதரவாளர் தரப்பில், மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.. இதை விசாரித்த நீதிமன்றமும், புதிய டிஜிபி நியமனத்தில் குளறுபடி ஏற்பட்டால் தலையிடும் நிலை ஏற்படும் என்று கூறியது.

ஆனால், குளறுபடிக்கு எந்த வாய்ப்புமில்லை, புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை துவங்கிவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

அதேபோல, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தன்னுடைய பெயரையும் தகுதிப்பட்டியலில் இடம்பெறக்கோரி சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.. இதன் காரணமாகவும், டிஜிபி நியமன நடைமுறைகள் மேலும் தாமதமாகின.

11 பேர் லிஸ்ட்

பிறகு, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், 11 பேர் அடங்கிய பட்டியல், டிஜிபி அலுவலகத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், அதில் 8 பேர் அடங்கிய லிஸ்ட்டை மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்பி வைத்திருப்பதாகவும், அதிலிருந்து 3 பேரை இறுதி செய்து, ஒருவரை டிஜிபியாக நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது..

எனினும், புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடமிருந்து கடந்த ஆகஸ்ட் 22 ம்தேதி வரவில்லை என்று மத்திய பணியாளர் தேர்வாணயம் தரப்பில் கூறப்பட்டிருந்தது.


இன்று டிஜிபி தேர்வுக்குழு கூட்டம்

இந்நிலையில், டிஜிபி தேர்வுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் யுபிஎஸ்சி சார்பில் அதன் தலைவர் அல்லது அவரால் முன்மொழியப்படும் ஆணையத்தின் உறுப்பினர், மத்திய உள்துறை செயலாளர் சார்பில் அத்துறையின் சிறப்பு செயலர், மத்திய காவல் படைகளில் ஒன்றின் டிஜிபி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்..

இந்த குழுவானது, 3 டிஜிபி நிலையிலான உயரதிகாரிகள் லிஸ்ட்டை இறுதி செய்து, மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும்.. அதில் ஒருவரை மாநில அரசு முதல்வரின் ஒப்புதலை பெற்று நியமிக்கும்.. இப்படி நியமிக்கப்படும் ஐபிஎஸ் உயரதிகாரி, டிஜிபி மற்றும் காவல் படைத்தலைவராக நியமிக்கப்படும்போது, குறைந்தபட்சம் 6 மாத பதவிக்காலத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.

லிஸ்ட் நீளுதே

அந்தவகையில், சீனியாரிட்டி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், கே.வன்னியபெருமாள், மகேஷ் குமார் அகர்வால், ஜி.,வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோரின் பெயர்கள் டாப்பில் உள்ளதாக தெரிகிறது.

டிஜிபிக்கள் நிலையில் பிரமோத் குமார், அபய் குமார் சிங் ஆகியோர் இருந்தாலும் அவர்கள் 6 மாதங்களுக்கும் குறைவான பணிக்காலத்தை கொண்டிருக்கிறார்களாம்.

புதிய டிஜிபி யார்?

அந்தவகையில், நீண்ட இழுபறிக்குபிறகு, பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு பிறகு, புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான நகர்கள் இன்று ஆரம்பமாகியிருப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல, விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூன்று பேரில் யாரை அரசு தேர்ந்தெடுக்கப்போகிறது என்ற ஆர்வமும் எழுந்துள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+