இந்தாங்க "புது அசைன்மென்ட்".. அடுத்த பாஜக தலைவர் "இவர்"தானாமே.. அப்ப முருகன்? பரபரக்கும் டெல்லி!
தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார் என்ற பேச்சு எழுந்து வருகிறது
சென்னை: எல்.முருகன் மத்திய அமைச்சரானதையடுத்து, தமிழக பாஜகவுக்கு யார் தலைவர் என்ற பேச்சு பரபரப்பாக பேச்சு பாஜக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
Recommended Video
இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.. அந்த வகையில், 2 பேரின் பெயர்கள் நம்ம ஊரில் இருந்து அடிபட்டது.. ஒன்று ஓபி ரவீந்திரநாத்குமார், மற்றொரு பெயர் எல்.முருகன்.
தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தே ஆக வேண்டும் என்று ஒரு முடிவோடு டெல்லியில் தங்கியிருந்தார் முருகன்.. பாஜக தலைமை இவர் மீது நிறைய நன்மதிப்பை வைத்திருக்கிறது.. அதற்கேற்றார்போல் இந்த ஒரு வருடம் முருகனின் செயல்பாடுகள் தமிழக பாஜகவில் சிறப்பாகவே உள்ளது.

தக்காளி
அதனால்தான் இவரை நம்பி, இந்த முறை சீட் தந்தது பாஜக தலைமை.. முருகனும் தமிழ் மட்டுமல்லாமல், தொகுதி மக்களிடம் தெலுங்கிலும் பேசி வாக்கு சேகரித்தார்.. மார்க்கெட்டில் தக்காளி வாங்கி கொண்டே வாக்கு கேட்டார்.. 20-க்கு 20-லும் பாஜக நிச்சயம் வெற்றி பெற்றார்.. ஆனால், 4 இடங்களில் பாஜக வென்ற நிலையில், முருகன் தோற்றுவிட்டார்.. இப்போது கேபினெட் கேட்டு உட்கார்ந்திருந்தார்.

2 பேர் போட்டி
ஒருவேளை முருகனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டால், மாநில தலைவர் யார் என்ற விவாதமும் கடந்த 2 நாட்களாகவே இங்கு எழுந்து வருகிறது.. அதன்படி நேற்று முருகனுக்கு அமைச்சர் பொறுப்பு உறுதியாகிவிட்டது.. அந்த பொறுப்பில் அநேகமாக நயினார் நாகேந்திரன் அல்லது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்படலாம் என்ற ஒரு பேச்சு எழுகிறது..

நயினார் நாகேந்திரன்
இதில் அண்ணாமலை இப்போதுதான் கட்சிக்கு வந்தவர் என்றாலும், சீனியர் நயினாருக்கு இருக்கும் செல்வாக்கு இவருக்கு இல்லை.. நயினாருக்கு இருக்கும் திறமையும், ஆளுமையும் அண்ணாமலையிடம் இல்லை. அந்த வகையில், நயினாருக்கே சான்ஸ் அதிகம் என்று ஒருபேச்சு உள்ளது. ஏனெனில் வரப்போகும் தேர்தல்களை கணக்கில் கொண்டு, நயினாரிடம் சில அசைன்மென்ட்களையும் பாஜக மேலிடம் தந்துள்ளது.. எனவே, தலைமை பொறுப்பை தந்தால், அந்த வேலைகளை கனகச்சிதமாக முடித்துவிடுவார்.

யார் அவர்?
அதாவது வரப்போகும் தேர்தல்களுக்குள் பாஜகவின் பலத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டும், மற்றும் அதிமுக, அமமுகவில் உள்ள அதிருப்திகளை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்பதுதான அந்த அசைன்மெண்ட்.. அதுமட்டுமல்ல, மாஜிக்கள் முதான ஊழல் புகார்கள் தூசி தட்டி எடுக்கப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட முன்னாள்கள், பாஜகவிடம்தான் உதவிக்கு ஓடிவருவார்கள்.. அப்படி வருபவர்களையும் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்பதே நயினாருக்கு கடந்த மாதம் பாஜக மேலிடம் தந்திருக்கும் அசைன்மென்ட் என்கிறார்கள்.

தலைமை
எனவே, இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்துதான், நயினாருக்கு, தமிழக தலைமை பதவி தேடி வரலாம் என்றும் ஒரு பேச்சு உள்ளது.. ஆனால், முருகனுக்கு கேபினெட் பதவி என்றதும் ஏற்கனவே கட்சிக்குள் பொருமல்கள் எழ ஆரம்பித்துள்ளன.. இதில் நயினாருக்கு தமிழக தலைமை என்றால், இதற்கும் அதிருப்திகள் வெடிக்க கிளம்பி உள்ளனவாம்.. என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications