நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை!
சென்னை: 1952 முதல் 2021 வரை தமிழ்நாட்டை அதிக நாட்கள் ஆட்சி செய்த முதல்வர் யார்? எவ்வளவு ஆண்டுகள் பதவியில் இருந்தனர்? நாடு விடுதலை பெற்றதிலிருந்து மக்களவைக்கும் சட்டமன்றத்திற்கும் சேர்ந்தே தேர்தல் நடைபெற்றுவந்தது. மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகத்தால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில ஆட்சியை திடீர் திடீரென்று கலைக்கும் கலாச்சாரம் தலைவிரித்தாடியதால், பின்னாளில் மக்களவை, மாநிலத் தேர்தலைத் தனித்தனியே நடத்த வேண்டிய சூழல் உண்டானது.
நாடு குடியரசு ஆன பிறகு 1952இல் பொதுத் தேர்தலுடன் இனைந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சி.ராஜகோபாலாச்சாரியார் முதல்வரானார். அப்போது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. மேல் சபை மூலம் முதல்வரானார். அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த முக்கியக்காரணமாக இருந்தவர் காமராஜர். இவரது அரசியல் குரு சத்தியமூர்த்தி. அவர் 43லேயே மறைந்துவிட்டார். அவர் சென்னை மேயராக இருந்த காலத்தில் தான் பூண்டி நீர்த்தேக்க திட்டம் செயல்வடிவம் பெற்றது. இன்றைக்குச் சென்னை தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பதற்கு இதுவும் ஒரு காரணியாகத் திகழ்கிறது.

திடீர் ராஜினாமா
பின் 1954 முதல் 1962 வரை காமராஜர் முதல்வராக இருந்தார். அதாவது ராஜாஜி ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்பாகவே அவர் 54இல் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உண்டானது. பின் பதவியேற்ற காமராஜ், அடுத்து வந்த 1962 தேர்தலில் வென்று காங்கிரஸ் கொடியைச் சட்டசபையில் நாட்டினார். அவர் மொத்தம் 9 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தார். பின் 1963இல் காமராஜர் தன் பதவியை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு கட்சி சேவைக்குச் சென்றார். அதை எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தனர். ஆயினும் பக்தவத்சலம் மீதமிருந்த 3 ஆண்டுகள் 5 மாதங்களைப் பூர்த்தி செய்தார்.
1967க்கு முன் திமுக மெல்ல வளர்ந்துவந்தது. பின் எதிர்க்கட்சியானது. 67இல் நடத்தச் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக அண்ணா முதல் அமைச்சராகப் பதவியேற்றார். இவர் கூட்டணியில் ராஜாஜி இருந்தார். அண்ணாதுரை ஆட்சியேற்ற ஒரே ஆண்டில் அவருக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த அண்ணாதுரை மறைந்தார். இவர் 1 ஆண்டு 11 மாதங்கள் வரை ஆட்சி செய்தார்.
இடைக்கால முதல்வராகப் பதவியேற்ற நெடுஞ்செழியனுக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பலம் இல்லை. மு.கருணாநிதியைச் சட்டமன்றத் தலைவராகத் தேர்வு செய்யவே அவர் 1969இல் முதல்வராக முறைப்படி பதவியேற்றார். அதன்பின் போட்டியிட்ட சட்டமன்றத் தேர்தல்கள் எதிலும் அவர் தோல்வியைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. அவர் 2018இல் மறைந்தார். தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக 18 ஆண்டுகள் 11மாதங்கள் வரை அதிகாரத்தை தன் கையில் வைத்திருந்தார் இவர். தமிழ்நாட்டிலேயே அதிக காலம் முதல்வராக இருந்தவர்களின் பட்டியலில் மு.க.தான் முதல் இடத்தில் உள்ளார்.
அதிர்ஷ்டத்தில் முதல்வர்
1990இல் அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா இடையிடையே சில தோல்விகள், சிறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் எனப் பல நெருக்கடிகளைத் தாண்டி14 ஆண்டுகள் 4 மாதங்கள் வரை அவர் வாழ்நாளில் ஆட்சி நாற்காலியில் முதல்வராக வீற்றிருந்தார். ஒரு பெண் முதல்வர் என்ற கணக்கில் வைத்துப் பார்த்தால் ஜெயலலிதாதான் அதிக காலம் முதல்வராக இருவராகிறார். மிகக் குறைந்த நாட்களே முதல்வராக இருந்தவரும் ஒரு பெண் தான். எம்.ஜி,ஆர் மறைவைத் தொடர்ந்து 'காபந்து' முதல்வராகப் பதவியேற்ற ஜானகி ராமச்சந்திரன் வெறும் 24 நாட்கள் முதல்வராக இருந்தார்.
ஜெயலலிதாவின் உபயத்தால் அவர் சிறைக்குச் சென்ற இடைவெளி காலங்களில் திடீர் முதல்வர் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக ஓ.பன்னீர்செல்வத்திற்குக் கிடைத்தது. ஆகவே அவர் 1 ஆண்டு 13 மாதங்கள் போராடாமல் மிக எளிதாக இந்த வாய்ப்பை பெற்றார்.
அண்ணாதுரை காங்கிரஸ் ஆட்சியைத் தமிழ்நாட்டை விட்டு அகற்றிய பின்னர் திராவிடக் கட்சிகளின் கையே இதுவரை ஓங்கியுள்ளது. அந்த வரிசையில் 1973இல் தனிக் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் 10 ஆண்டுகள் 6 மாதங்கள் அவரை முதல்வராக இருந்து பதவியை விட்டு இறங்காமல் அதே மரியாதையுடன் மரணத்தைத் தழுவினார். இதே மரியாதை ஜெயலலிதாவுக்கும் கிடைத்தது. கருணாநிதி மறையும் போது அவர் ஆட்சியில் இல்லை.
கூவத்தூர் குதிரை பேர அரசியல் மூலம் முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. அவர் 3 ஆண்டுகள் 5 மாதங்கள் வரை ஆட்சியில் முதல்வராக இருந்தார்.
எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்கள் அல்ல. பக்தவத்சலமும் ராஜாஜியும் அவ்வாறே. சட்டமன்ற உறுப்பினர், மேயர், அமைச்சர், துணை முதல் அமைச்சர் எனத் தந்தையின் ஆட்சிக்காலத்தில் முன்னேறி வந்த மு.க.ஸ்டாலின், முறைப்படி மக்களைச் சந்தித்து 2021இல் தனிப்பெரும்பான்மையுடன் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 4 ஆண்டுகள் 10 மாதங்களை எந்தவிட இடர்பாடுகளும் இன்றி முதல்வராக பணியாற்றி முடித்துள்ளார்.
இதன்படி பார்த்தால் அதிக காலம் ஆண்ட முதல்வர் பட்டியலில் முதலிடம் கருணாநிதிக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. இரண்டாம் இடம் ஜெயலலிதா. மூன்றாவது எம்.ஜி.ஆர், 4ஆவது காமராஜர். 5ஆவது ஸ்டாலின். டாப் 5 பட்டியலுக்குள் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளார் ஸ்டாலின். மு.க.ஸ்டாலினுக்கு முன்னதாகவே முதல்வரான ஓபிஎஸ் இப்போது திமுகவில் உள்ளார். ஆக, இனி ரெக்கார்டை பிரேக் பண்ணவே முடியாது. அந்த வாய்ப்பு ஒருவேளை எடப்பாடிக்கு கிடைக்கலாம். அதற்காக அறிகுறி இன்னும் புலப்படவில்லை.
இதை எல்லாம் கடந்து கணக்குப் படி குறைந்த காலமே அரியணையில் அண்ணா உட்கார்ந்திருந்தாலும் இத்தனை முதல்வர்களும் அந்த ஆட்சி பீடத்திற்கு வர அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் அவர்தான். ஆகவே, பட்டியலைத் தாண்டி பவர் ஃபுல் லீடர் என்றால் அது அண்ணா தான். அவர் ஆரம்பித்த கட்சிதான் 75 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக இருக்கிறது.
எழுதியவர் : கடற்கரய்
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications