தூள் தூளாக சிதறுகிறதா எடப்பாடி "கோட்டை".. நேற்று "ஓபிஆர்".. நாளை "ஓபிஎஸ்".. அப்பாவு கையில் கிளைமாக்ஸ்

சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக உதயகுமார் பதவியை அப்பாவு ஏற்பாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமாரா? ஓ.பன்னீர்செல்வமா? என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு என்ன முடிவெடுக்க போகிறார் என்ற ஆர்வம் எகிறி வருகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கிய சமயம், சில அதிரடிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.. அதன்படி, ஓபிஎஸ் வகித்துவந்த கட்சியின் பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.

பிறகு, ஓபிஎஸ் வகித்து வந்த, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கும் வேட்டு வைத்த எடப்பாடி பழனிசாமி, அந்த பொறுப்புக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.

உதயகுமார்

உதயகுமார்

அதாவது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என எந்த பொறுப்பில் இருந்தும் தம்மை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஓபிஎஸ் சொல்லிக் கொண்டிருந்தபோதே, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்புக்கு உதயகுமார் நியமிக்கப்பட்டது மிகப்பெரிய அதிர்வலையை அரசியல் களத்தில் ஏற்படுத்தியது.. சட்டமன்ற அதிமுகவின் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ்சை நீக்கி விட்டு ஆர்.பி.உதயக்குமாரை நியமித்த நிலையில், அதனை ஏற்குமாறு சபாநாயகர் அப்பாவிடம் எடப்பாடி தரப்பில் கடிதம் தரப்பட்டிருந்தது..

 பறந்த லெட்டர்

பறந்த லெட்டர்

இந்த கடிதத்தை அதிமுகவின் கொறடா எஸ்.பி.வேலுமணி தந்திருந்தார். இதனை ஏற்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பில் கடிதம் தரப்பட்டது. இரண்டு கடிதங்களும் அப்பாவின் ஆய்வில் இருந்து வருகிறது... ஆனால், இதுகுறித்து அப்பாவு என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற ஆர்வம் கடிதம் தந்த அன்றே அனைவரிடமும் எழுந்தது.. உதயகுமார் குறித்த எடப்பாடியின் அறிவிப்பு குறித்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் அன்றைய தினம் பேசினார்.. அப்போது, "இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது... ஓபிஎஸ், வேலுமணி ஆகியோர் கொடுத்துள்ள கடிதங்களும் பரிசீலனையில் உள்ளன.

 சுபம் அப்பாவு?

சுபம் அப்பாவு?

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருந்து வருகின்றன. அவற்றின் முடிவை பொறுத்து, சட்ட விதிகளுக்கும், ஜனநாயக ரீதியாகவும் தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க இயலும்" என்று அப்பாவு கூறியிருந்தார்.. சபாநாயகர் இப்படி சொன்னதன் மூலம், ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் சபாநாயரும் முடிவெடுப்பார் என்று நம்பப்பட்டு வருகிறது..

 ஓபிஆர்

ஓபிஆர்

அதுமட்டுமல்ல, ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதை, சபாநாயகர் என்ற முறையில் அப்பாவு உடனடியாக அங்கீகரிக்கமாட்டார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.. அதேபோல, நாடாளுமன்ற வழிகாட்டுதலை அப்பாவு மேற்கொள்வார் என்று ஓபிஎஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது. நம்மிடம் இதுகுறித்து பேசிய அவர்கள், ஓபிஎஸ்சை நீக்கியதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பாவுக்கு கடிதம் கொடுத்தது போல, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியை அதிமுக கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், அவரை அதிமுகவின் எம்பியாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார் எடப்பாடி பழனிசாமி..

 கிளைமேக்ஸ்

கிளைமேக்ஸ்

இந்த பரிந்துரை கடிதத்தை ஏற்காமல் நிராகரித்திருக்கிறார் ஓம் பிர்லா. அதனால் அதன் வழியில், ஓபிஎஸ்சுக்கு எதிராக எடப்பாடி தரப்பில் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் அப்பாவு நிராகரிப்பார். அதனால் சட்டமன்ற அதிமுகவின் துணைத்தலைவராக ஓபிஎஸ் நீடிப்பார்'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பில் உள்ள சீனியர்கள்... ஒருவேளை அப்படி நடந்தால், இதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு சறுக்கலாகவே அமையும் என்கிறார்கள்.. ஏற்கனவே ஓபிஆர் விஷயத்தில் முட்டிமோதியும் அவரது பதவியை நீக்கம் செய்ய முடியாமல் போன நிலையில், ஓபிஎஸ் விஷயத்திலும் கோட்டைவிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.. 17-ம் தேதி என்னதான் நடக்க போகிறது.. பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+