ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட விமர்சனங்கள் மூலமாக சமீபகாலமாக இணையதளங்களில் பரவலாக அறியப்பட்ட மூத்த நடிகர் சத்யேந்திராவின் திரையுலகப் பயணம், அசாத்திய திறமை குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு விரிவாக பேசியிருக்கிறார். இறுதிவரை வறுமையிலும், ரூம் வாடகைக்காக போராடிய நிலையிலும், சினிமா மீதான மாளாத காதலோடு தன் வாழ்நாளை நிறைவு செய்துள்ளார் சத்யேந்திரா என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "சத்யேந்திரா இந்தியாவின் உள்ளூர் மொழிகள் 8 மற்றும் சர்வதேச மொழிகள் என மொத்தம் 16 மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். கூகுள் ட்ரான்ஸ்லேட் போன்ற நவீன வசதிகள் இல்லாத 1997-98 காலகட்டங்களிலேயே, சென்னை ரஷ்ய மற்றும் ஜெர்மன் தூதரகங்களில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்குத் தவறாமல் செல்லும் வழக்கம் கொண்டவர் சத்யேந்திரா.

Raghuvaran

அங்கு வரும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளில் மொழிபெயர்ப்பாளராக இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்காக அவருக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்ட போதும், தன் திறமை அங்குப் பயன்பட்டதை எண்ணிப் பெருமிதம் கொண்டவர்.

டபுள் டிகிரி, தங்கப்பதக்கம்

இப்போதுமே போலவேதான் அப்போது இருந்தார்.. இதே பேச்சு, மாடுலேஷன் அன்றும் இருந்தது. இவரது பேச்சுக்கும், அவரது உருவத்துக்கும் சம்பந்தமே இல்லையே என்பார்கள்..

தெலுங்கு தாய்மொழி.. ஆனால் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவருடைய அப்பா, சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் முதல் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகப் பணியாற்றியவர். இவருடைய முன்னோர்கள் மைசூர் மகாராஜாவிற்கு பாதுகாவலர்களாக இருந்த பெருமைக்குரியவர்கள்.

சத்யேந்திரா 2 முதுகலைப் பட்டங்களைப் பெற்று (Double MA), தங்கப் பதக்கம் (Gold Medalist) வென்ற சிறந்தப் படிப்பாளியாவார். இருந்தாலும் தமிழ் சினிமா இயக்குநர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு, திரையுலகக் கனவோடு தன் வீட்டிலிருந்த ஒரு மிதிவண்டி மற்றும் சமையல் பாத்திரங்களுடன் 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

கமலஹாசனின் சத்யா படம் உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், இறுதிவரை அவர் சினிமா வாய்ப்புகளுக்காகப் போராடிக்கொண்டே இருந்தார்.

அக்குவேறு ஆணி வேர் விமர்சனங்கள்

பல மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்தின் டெக்னிக்கல் குறைபாடுகளை சத்யேந்திரா அக்குவேர் ஆணிவேராகப் பிரித்து மேய்ந்து விமர்சித்தார்.. உடனே அந்த பட நாயகனின் ஆட்களால் அவருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

ஆனால் அதற்கு சத்யேந்திரா பயப்படவேயில்லை.. "நான் தினமும் சாயங்காலம் 5.30 மணிக்கு வடபழனி கமலா தியேட்டர் வாசலில்தான் நிற்பேன், உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று துணிச்சலுடன் சவால் விடுத்தார்.

அதற்கு சத்யேந்திரா சொன்ன காரணம், "நான் அந்த படம் பார்க்க கொடுத்த 230 ரூபாய் என்பது என்னுடைய 3 நாள் சாப்பாட்டு செலவு, என் உழைப்பை அந்த படம் வீணடித்ததால் தான் என் ஆதங்கத்தைக் கொட்டினேன்" என்றார்.

துணிச்சலான நபர் சத்யேந்திரா

கல்யாணமாகாமல் தனி ஆளாக வாழறீங்களே? என்று நிருபர்கள் கேட்டபோது, "என் உடல் தேவைக்காக நான் பம்பாய் ரெட் லைட் ஏரியாவுக்குச் சென்று காசு கொடுத்துவிட்டு வந்துவிடுவேன்" என்று எவ்வித ஒளிவுமறைவுமின்றி சொன்னார். எந்தவித பவுடர் பூச்சு வார்த்தைகள் அவரிடம் எப்போதுமே கிடையாது. ஒரு மனிதன் எப்போது வெளிப்படையாக இருக்கிறானோ, அப்போதே அவன் ஆகச்சிறந்த கலைஞன் ஆகிறான்.

ரகுவரனின் மேனரிசம்

மறைந்த பிரபல நடிகர் ரகுவரனின் நெருங்கிய நண்பரான சத்யேந்திராவின் நிஜ வாழ்க்கை மேனரிசமான "ஐ நோ... ஐ நோ..." (I know... I know...) என்ற வார்த்தைதான், ரகுவரனால் பல படங்களில் பயன்படுத்தப்பட்டது. எடிட்டர் லெனின் இயக்கிய ஒரு படத்தில், படம் முழுக்க பிணமாக நடிக்கும் சவாலான வாய்ப்பையும் சினிமா மீதான காதலால் ஏற்று நடித்தார். எந்தவொரு போலி முகமூடியும் இல்லாமல், தன் தனிப்பட்ட வாழ்க்கை முறையைக் கூட ஊடகங்களில் வெளிப்படையாகப் பேசும் அசாத்திய துணிச்சல் அவரிடம் இருந்தது.

டீ வாங்கி தந்திருக்காங்களா

கணித மேதை ராமானுஜத்தை ஆரம்பத்தில் உலகம் அங்கீகரிக்கத் தவறியதைப் போல, சினிமா உலகிற்கான ஒரு ராமானுஜராகவே சத்யேந்திரா வாழ்ந்து மறைந்துள்ளார்.

அவர் உயிருடன் இருந்தபோது ஒரு சின்ன சான்ஸ் அல்லது டீ கூட வழங்க முன்வராத திரையுலக பிரபலங்கள் பலர், அவர் மறைந்த பின்பு சோஷியல் மீடியாவில் கவிதைகள் எழுதிப் போலி இரக்கம் காட்டுவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவருக்கு நான் ஒரு டீ வாங்கி தந்திருக்கிறேன். அதனால் தைரியமாக இதை பேசுகிறேன்.

இறுதிவரை வறுமையிலும், ரூம் வாடகைக்காக போராடிய நிலையிலும், சினிமா மீதான மாளாத காதலோடு தன் வாழ்நாளை நிறைவு செய்துள்ளார் சத்யேந்திரா.

16 மொழியும் இறந்துவிட்டது

சத்யேந்திரா மறைவு என்பது வெறும் ஒரு மனிதனின் மரணம் மட்டுமல்ல. அவர் கற்று வைத்திருந்த சர்வதேச அளவிலான மொழிகள் மற்றும் இந்தியாவில் பேசப்படக்கூடிய 8 மொழிகள் என மொத்தம் 16 மொழிகளின் அறிவு அவருடன் மடிந்துவிட்டது. அத்துடன் அவருடைய அசாத்திய சினிமா ஞானமும், யாருக்கும் அஞ்சாத நேர்மையான திரைப்பட விமர்சன முறையும் அவருடனேயே மறைந்துவிட்டன.

இந்த ஈவிரக்கமற்ற சினிமா உலகையும் தாண்டி, அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், சத்யேந்திரா, இந்த இந்திய திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த கலைஞனாக மிளிரட்டும்.. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+