"கவர்ச்சியோ கவர்ச்சி".. ராகினியும் 3 நண்பர்களும்.. நடுவில் சிக்கி சீரழிந்த மாரிமுத்து.. என்னாச்சு
திருவள்ளூர் இளைஞர் கொலையில் ராகினி என்ற பெண்ணை தேடி வருகிறார்கள்
சென்னை: காதலிப்பது போல் ஏமாற்றி, அவரிடம் பணத்தையும் பறித்து, அவரை கடத்தியும் வந்து, அவரை கொலையும் செய்துள்ளார்.. யார் தெரியுமா? ஒரு இளம்பெண்..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியைச் சேர்ந்தவர் அந்த இளைஞர்.. பெயர் மாரிமுத்து... 27 வயதாகிறது. டிப்ளமோ படித்துள்ளார்.. ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு ஃபேஸ்புக்கில் ராகினி என்ற பெண் அறிமுகமாகி உள்ளார்.. ராகினி தூத்துக்குடியை சேர்ந்தவர்.. மாரிமுத்துவை கவர்ச்சி பேச்சால் மயக்கி உள்ளார் இந்த ராகினி..

கவர்ச்சி பேச்சு
பிறகு, பெரிய பணக்கார வீட்டு பெண் போல நடந்து கொண்டுள்ளார்.. இதையும் மாரிமுத்து நம்பியிருக்கிறார். ஒருகட்டத்தில், தன்னுடைய காதல் வலையிலும் மாரிமுத்துவை வீழ்த்தினார் ராகினி.. கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று மாரிமுத்துவை கேட்டுள்ளார் ராகினி.. கடைசியில், ராகினியின் கவர்ச்சி பேச்சு, காதல், திருமணம் போன்ற வார்த்தைகளால், மொத்தமாக சரண்டராகிவிட்டார் மாரிமுத்து.

துண்டிக்கப்பட்ட தலை
ஒருநாள், ராகினி தனக்கு ரூ.5 லட்சம் அவசரமாக தேவைப்படுவதாக சொல்லி, மாரிமுத்துவிடம் தனது வங்கி கணக்கு மூலம் பணம் பெற்றார்.. அதோடு சரி.. அதற்கு பிறகு ராகினியை காணோம்.. மாரிமுத்து போன் செய்து கொண்டே இருந்தார்.. ராகினியின் நம்பர் துண்டிக்கப்பட்டிருந்தது.. இறுதியில், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று மாரிமுத்து உணர்ந்துள்ளார்.. இதனிடையே இன்னொரு தகவல் மாரிமுத்துவுக்கு கிடைத்தது..

ராகினியின் காதல்
மாரிமுத்துவின் உறவினர் வில்வதுரை.. இவர் தென்காசி ஸ்டேஷனில் சிறப்பு போலீஸ் பட்டாலியன் 2-வது நிலை காவலராக வேலை பார்த்து வருபவர்.. இந்த போலீஸ்காரருக்கும், இதே ராகினி ஃபேஸ்புக்கில் பழக்கமானாராம்.. இதே போல காதல் வலையில் இவரையும் வீழ்த்தியுள்ளார்... இதேபோல, இவரிடமிருந்தும் பணம் பறித்துள்ளார்.. இவரிடம் 15 லட்சம் வரை ஏமாற்றிவிட்டாராம் ராகினி.. ஆனால், காலப்போக்கில் வில்வராஜா ராகினியுடன் நட்பாகிவிட்டாராம்.

ஆட்டைய போட்ட கும்பல்
வில்வதுரை, அவரது நண்பர் இசக்கிராஜா அவரது மனைவி இளவரசி, ரவிக்குமார் போன்றோர் ராகினியுடன் நெருகி பழகி, ஒரு மோசடி கும்பலாக உருவானார்கள்.. இவர்கள் அனைவரும் சேர்ந்து பிறரை ஏமாற்றி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளனர்.. இந்த மோசடி குழு, 50 லட்சம் வரை இப்படி ஆட்டைய போட்டுள்ளார்களாம்.. இந்நிலையில், தன்னிடம் இருந்து பறித்து கொண்ட பணம் வேண்டும் என்று ராகினியிடமும், வில்வதுரையிடமும், மாரிமுத்து கேட்டுள்ளார். இது இவர்களுக்கு கடுப்பை தந்துள்ளது..

பாறாங்கல்
அதனால், மாரிமுத்துவை கொலை செய்துவிடும்படி, போலீஸ்காரர் வில்வராஜிடம் ராகினி சொன்னாராம்.. அதன்படியே, கடந்த மாதம் 27ந்தேதி, பணம் தருவதாக சொல்லி மாரிமுத்துவை வெளியே வர சொல்லி உள்ளனர்.. மாரிமுத்துவை ஒருகாரில் வைத்து சங்கரன்கோவிலுக்கு காரில் கடத்தி வந்துள்ளனர்... அங்கே அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.. சடலத்தை பெரிய பாறாங்கல்லில் கட்டி, அங்குள்ள கண்மாயில் வீசிவிட்டு தப்பி உள்ளனர்.. மாரிமுத்துவின் சடலத்தை அழுகிய நிலையில்தான் போலீசார் மீட்டனர்..

இசக்கிராஜா
இதுகுறித்த விசாரணையை துரிதப்படுத்தி, இறுதியில், போலீஸ்காரர் வில்வதுரை, இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகியோரை கைது செய்துவிட்டனர்.. ஆனால், இது எல்லாவற்றிற்கும் காரணமான ராகினியை காணோம்.. அதேபோல, இதில் சம்பந்தப்பட்ட இளவரசி என்ற பெண்ணையும் காணோம்.. இருவரும் எஸ்கேப் ஆகி உள்ளனர்.. அந்த பெண்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. காதலும் இல்லாமல், காசும் திரும்ப கிடைக்காமல், பரிதாபமாக உயிரிழந்தார் மாரிமுத்து..!












Click it and Unblock the Notifications