யார் இந்த 'அருணை வெங்கட்'.. வேலுவுக்கு நிகராக ரெய்டு... அதிமுகவில் அசுர வளர்ச்சி, திமுகவிலும் டாப்
சென்னை : திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நிகராக நெடுஞ்சாலைத் துறையில் முன்னணி ஒப்பந்ததாரராக உள்ள 'அருணை வெங்கட்' என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளார்.
கடந்த 10 வருடங்களில் இவரது அசுர வளர்ச்சியை பார்த்து அதிமுக மற்றும் திமுகவினர் பிரமித்து போய் உள்ளார்கள்.. யார் அந்த அருணை வெங்கட் என்பதை பார்ப்போம்..

திருவண்ணாமலை அருகே உள்ளள தென் மாத்தூர் கிராமத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சொந்தமான வீடு மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அவருக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, கரண் கலைக் கல்லூரி, மகளிர் கம்பன் கலை கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினார்கள்.
அதேபோன்று அமைச்சர் எ.வ.வேலு வின் மனைவி ஜீவா வேலு, மகன்கள் எ.வ.குமரன், எ.வ.கம்பன் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகளுக்கு நடுவே, திருவண்ணாமலையைச் சேர்ந்த 'அருணை கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளார்கள்..
இந்த அருணை வெங்கட் பொதுப்பணித்துறையின் முக்கிமான ஒப்பந்ததாரர் ஆவார். திமுகவின் முக்கிய அமைச்சரான எவ வேலுவுக்கு நிகராக அருணை வெங்கட்டிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறு கட்டுமானம் மற்றும் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தவர் தான் அருணை வெங்கட். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய தலைவர்களின் தொடர்பு கிடைத்ததால் அசுர வளர்ச்சி அடைந்தார்.. அதிமுக ஆட்சியில் முக்கியப் பிரமுகர்களுக்கு நெருக்கமானவராக மாறிய அருணை வெங்கட் அதிமுக ஆட்சியில் மிகப் பெரிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக வளர்ந்தார்..
2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த உடன் நெடுஞ்சாலை துறை அமைச்சராக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த எவ வேலு பொறுப்பேற்றார். அதே ஊரைச் சேர்ந்த அருணை வெங்கட், ஒரு கட்டத்தில் எவ வேலுவுக்கு நெருக்கமானவராக மாறினாராம். அதிமுக ஆட்சியை போல், திமுக ஆட்சியிலும் பல கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வந்துள்ளார். அதிமுகவினரை தாண்டி திமுகவினரும் அருணை வெங்கட்டுக்கு நெருக்கமாகி உள்ளனர். இவரது சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்ததால், எவ வேலுவை சோதிக்க வந்த வருமான வரித்துறை, இவரையும் டார்க்கெட் செய்து சோதனை நடத்தி உள்ளது.

கடந்த 5 நாட்களாக அருணை வெங்கட்டை குறி வைத்து நடந்த சோதனையில், கம்ப்யூட்டர்களில் உள்ள முக்கிய டேட்டாக்கள், ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள், ரொக்கம் சிக்கியுள்ளதாகவும், பல வங்கிகளின் லாக்கர்களில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. அருணை வெங்கட்டிடம் நடத்திய சோதனை குறித்த விவரத்தை வருமான வரித்துறை வெளியிட்டால் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெரிய வரும்.
எவ வேலு விளக்கம்: இதனிடையே அமைச்சர் எவ வேலு ஐடி ரெய்டு குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறும் போது, ஐடி என்கிற பெயரில் எனது நேரடி நேர்முக உதவியாளர் சுப்பிரமணியை 5 நாட்களாக அவரைத் தனியே வைத்து என்னுடன் பேசவிடாமல் என்னை தொடர்புப்படுத்தி பல கேள்விகளைக் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்கள் என்று குற்றம்சாட்டினார்.. தான் எங்கெல்லாம் இடம் வாங்கியிருக்கிறேன் எனக் கேட்டு நேர்முக உதவியாளரை கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு நிர்பந்தப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் புகார் தெரிவித்தார். தனது ஓட்டுநரை அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள் என்றும் கல்லூரியில் கிளார்க்குகள், மருத்துவக் கல்லூரி எச்.ஆர் களை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்கள் என்றும் அமைச்சர் எவ வேலு கூறினார்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications