அசைந்தது அயனாவரம்.. பர்தா போடாமல் போன பாத்திமா.. பிரியாணி கரண்டியுடன் உமர்.. சென்னையில் இப்படியுமா?
சென்னை: பிரியாணி கரண்டியாலேயே பாத்திமாவை அடித்து தாக்கி உள்ளார் உமர்.. இப்ப பார்த்தீங்களா என்னாச்சுன்னு? சென்னையே அரண்டு போய் கிடக்கிறது.
சென்னை அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் வசித்து வருகிறார் சையத் அலி பாத்திமா.. 36 வயதாகிறது.. இவருக்கு 6 மாதத்திற்கு முன்னாடிதான் கல்யாணம் ஆனது.

திருமணம்: அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.. ரவிக்குமாருக்கு 37 வயதாகிறது.. இவருக்கு உமர் என்று இன்னொரு பெயரும் உண்டு.. கல்யாணம் ஆன 6 மாதத்திலிருந்தே பாத்திமா, தன்னுடைய மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்...
கீழ் கட்டளை பகுதியில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.. ஆனால், சமீபகாலமாகவே, உமர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது..
கருத்து வேறுபாடு: இதை காரணமாக வைத்தே மாமியாருக்கும் - மருமகளுக்கும் சண்டை வந்துவிட்டது.. இவர்கள் 2 பேரின் கருத்து வேறுபாடு காரணமாக, வீடே தினம் தினம் சண்டையால் வெடித்தது. எனவே, கடந்த 9-ம் தேதி பாத்திமாவின் அம்மா, பல்கீஸ் அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் ஒரு வாடகை வீடு பார்த்து தங்களது மகளையும், அவரது கணவரையும் அனுப்பி வைத்துள்ளார்..
அந்த புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய பாத்திமா வீட்டருகே உள்ள நண்பர்களுக்கு, காய்ச்சிய பால் கொடுக்க சென்றுள்ளனர்.. அப்போது பாத்திமா பர்தா அணியாமல் சென்றதை பார்த்த உமர், தகராறில் ஈடுபட்டுள்ளார்..
பிரியாணி கரண்டி: இதுவே அவர்களுக்குள் வாக்குவாதமாக முற்றியிருக்கிறது. பிரியாணி கரண்டியால் பாத்திமா தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் பாத்திமாவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.. பலத்த காயமடைந்து மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
ஆனாலும், உமர் எதையும் கண்டுகொள்ளாமல், வீட்டில் இருந்த 2500 ரூபாய் பணத்தையும் எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதனிடையே பாத்திமாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு முதலில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், பிறகு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் பாத்திமா அனுமதிக்கப்பட்ட நிலையில், டாக்டர்கள் எவ்வளவோ போராடியும், சிகிச்சை பலனின்றி பாத்திமா இன்று உயிரிழந்தார்..
பர்தா : இதனால் ஏற்கனவே பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உமரை கைது செய்து, சிறையிலும் அடைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
பர்தா அணியாமல் சென்ற மனைவியை பிரியாணி கரண்டியால் கணவனே அடித்துக் கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஆனால், உயிர் பிரியும்வரை பாத்திமாவுக்கு சுயநினைவே இல்லையாம்..!!!
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications