Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிரட்டறாங்க.. யாருங்க அந்த "கரூர் கம்பெனி".. ஓபனா "பேர்" சொன்ன நாராயணன் திருப்பதி

கரூர் கம்பெனி யார் என்று கேட்டு, பாஜக நாராயணன் திருப்பதி எழுப்பிய கேள்வி திமுகவை கடுப்பாக்கி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கம்பெனியிலிருந்து வருகிறோம்' பணம் கொடு என்று சில ரௌடிகள் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டுவதாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்கம்போல் திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறது பாஜக அரசு.. ஆளும் கட்சியின் குறைபாடுகளையும், புகார்களையும், வெளிப்படையாக கூறி, தன்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறது.

அந்தவகையில், பாஜக செய்தி தொடர்பாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான நாராயணன் திருப்பதி, திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்.

 நறுக் திருப்பதி நாராயணன்

நறுக் திருப்பதி நாராயணன்

நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், அதிமுக பல கட்சிகளுக்கு உதவியாக இருக்கிறதே தவிர, பல கட்சிகளை தாங்கி பிடித்து உதவி கொண்டிருக்கிறதே தவிர, அதிமுகவுக்கு யாரும் உதவியது இல்லை" என்றார்.. எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் உள்ள பாஜகவைதான் இவ்வாறு சொல்கிறார் என்றாலும், இதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு, வரவேற்றிருந்தார் நாராயணன் திருப்பதி.. அத்துடன், திமுக தரப்பில் உள்ள கூட்டணியை லிஸ்ட் போட்டு விமர்சிக்கவும் துவங்கிவிட்டார்.

 ஹோப் எடப்பாடி

ஹோப் எடப்பாடி

"ஆமா.. இது உண்மைதான்.. எடப்பாடி சொன்னதில் தவறில்லையே.. எங்கள் கூட்டணியை நீங்கள் பார்த்திருந்தால், ஒன்று தெரியும்.. எங்கள் அனைவரின் ஒரே இலக்கு திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான்.. ஏனென்றால் இந்த அரசாங்கம் ஒரு தோல்வியுற்ற அரசாங்கம். இந்த அரசாங்கம் ஊழல் அரசாங்கம், இந்து விரோத அரசாங்கம்.. இதுக்காகவே, வலுவான ஒரு வேட்பாளர் களம் இறக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால்தான், எடப்பாடியையும் ஓபிஎஸ்சையும் சந்தித்தோம். ரகசிய கூட்டம் எதையும் போடவில்லையே.. நேரடியாக சந்தித்து எங்கள் விருப்பத்தை சொன்னோம்.. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்குகிற கட்சி அதிமுகதான். இதை தொடர்ந்து நாங்கள் எப்போதுமே சொல்வது இதுதான்.

 கம்யூனிஸ்ட் 10 கோடி

கம்யூனிஸ்ட் 10 கோடி

எடப்பாடி பழனிசாமி நாங்கள் தாங்குகிறோம் என்று சொன்னால் சொல்லட்டும். அதில் ஒன்றும் தவறில்லையே.. அங்கே, திமுகவிற்கு அடிமையாக திருமாவளவன் இருக்கிறாரே.. இறையூர் விவகாரத்தில் இன்னும் ஒருத்தரும் கைதாகலயே? சிபிசிஐடிகூட கண்டுபிடிக்க முடியவில்லையே? இதுக்காக திமுக அரசை கண்டிக்கிறதைவிட்டுட்டு, பாஜக மீது பாய்வது ஏன்? கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் என்ன? 2 சீட்டுக்காக 10 கோடி, 15 கோடிக்காக, கட்சியை கொண்டு போய் அடமானம் வைக்கலயா? காங்கிரஸ் கட்சி மட்டும் என்ன? அந்த கட்சியெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்? பேசாமல் திமுகவுடன் இணைத்துவிடலாம்.. அந்தவகையில் எடப்பாடி பழனிசாமி சொன்னது மிக மிக சரிதான்" என்று கூறியிருந்தார்.

 கரூர் கம்பெனி யார்?

கரூர் கம்பெனி யார்?

நாராயணன் திருப்பதி கூறியிருந்த இந்த கருத்து திமுக மற்றும் கூட்டணியை கடுப்பாக்கி வந்த நிலையில், மீண்டும் இப்போது திமுக அரசு மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.. அது தொடர்பாக பதிவிட்டுள்ள ட்வீட்டில், "கரூர் கம்பெனியிலிருந்து வருகிறோம், பணம் கொடு" என்று சில ரௌடிகள் டாஸ்மாக் ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும், டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் டாஸ்மாக் தொழிலாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். காவல் துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சாராய விற்பனையில் கடும் மோசடி நடப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

 டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

இது குறித்து புகார் தெரிவிப்பவர்களை, பணம் கொடுக்க மறுப்பவர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். கோவையில் அனுமதி வாங்கி போராட்டம் நடத்திய ஊழியர்களை காவல் துறை மேலிடத்தின் உத்தரவின் பேரில் கைது செய்துள்ளது. யார் இந்த கரூர் கம்பெனி? இந்த நிறுவனத்தின் பின்னணியில் யார்? கொலை மிரட்டல் விடும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள் யார்? குடி குடியை கெடுக்கும் என்று சொல்கிறது அரசு. அந்த குடியை கொடுக்கும் அரசு துறை ஊழியர்களின் குடியை கெடுக்கும் தீய சக்திகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

 கரூர் கம்பெனி

கரூர் கம்பெனி

துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் இதன் பின்னணியில் உள்ளதாக நேரடியாக குற்றம் சாட்டுகிறார்கள் டாஸ்மாக் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள். திமுக அரசின் ஊழல் முறைகேடுகள் தொடர்கின்றன. இளம் விதவைகளை அதிகமாக்கும் மது விற்பனையிலும் ஊழல், முறைகேடுகளை செய்வது தான் திராவிட மாடல் அரசா? கரூர் கம்பெனியை கண்டுபிடித்து ரௌடிகளை கைது செய்ய வேண்டியது காவல் துறையின் கடமை. இல்லையேல் 'குடி' மக்கள் பார்த்து கொள்வார்கள் என நாராயணன் திருப்பதி காட்டமாக கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+