16 வயதினிலே.. மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. எகிறி தப்பி போலீஸுக்கு ஓடிய பெண்.. சென்னையில் பரபர
சென்னை: 16 வயது சிறுமி போலீசுக்கு சென்று புகார் அளித்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது? யார் இந்த சிறுமி?
சென்னையில் வட்டிக்கு வாங்கிய கடனுக்காக 16 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வியாசர்பாடி: சென்னை வியாசர்பாடி கணேசபுரத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது கணவர் நிஷாந்த்.... இவர்கள் 2 பேருமே சேர்ந்து வட்டிக்கு பணம் தரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.. ஆனால், இதைவிட விபச்சாரம்தான் இவர்களது பிரதான பிசினஸாக உள்ளதாம்.
இந்நிலையில், முத்துலட்சுமியிடம், பெண் ஒருவர் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.. ஆனால், பணத்திற்க்கான வட்டியை 2 மாதங்களாக அந்த பெண் தரவில்லை என்று கூறப்படுகிறது.. இதனால், வாங்கிய கடனுக்காக, அந்த பெண்ணின் 16 வயது மகளை விபச்சாரத்திற்காக முத்துலட்சுமியிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
விபச்சாரம்: விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்த சிறுமிக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அவரது வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.. எனினும், அவரது அம்மா, மகளை மறுபடியும் முத்துலட்சுமியிடமே விபச்சாரத்தில் கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டாராம்.
உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியோ கடும் அதிர்ச்சி அடைந்தார். பெற்ற தாயும் இப்படி தன்னை கொண்டுவந்து விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி தள்ளிவிட்டதால், பாதிக்கப்பட்ட சிறுமி எம்.கே.பி நகர் மகளிர் போலீசுக்கு சென்றுவிட்டார்.. தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீசில் முறையிட்டார் சிறுமி..
முறையீடு: "சார், என்னுடைய அம்மாவே என்னை பாலியல் தொழிலுக்கு தள்ளுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கண்ணீரோடு முறையிட்டதை கண்டு போலீசாரே அதிர்ந்து விட்டனர்.. இதையடுத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முத்துலட்சுமி, அவரது அம்மா என 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
அதுமட்டுமல்ல, இந்த சிறுமியிடம் பாலியலில் ஈடுபட்ட முத்துலட்சுமியின் கணவர் நிஷாந்த், புளியந்தோப்பை சேர்ந்த அஜித்குமார், புயல் காவாங்கறையை சேர்ந்த மகேஸ்வரன் உள்ளிட்ட 6 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளார்கள் நம் போலீசார்..
கடன் தொகை: இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "சிறுமியின் அம்மா சில ஆண்டுகளுக்கு முன்பு 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அந்த அம்மாவால், பணத்தை திருப்பி தர முடியவில்லை. அதனால் பணத்தை திரும்ப கேட்டு, முத்துலட்சுமி தகராறு செய்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், கடனுக்கு பதிலாக 16 வயது மகளை, 2021-ம் ஆண்டு தன்னோடு அழைத்து சென்றிருக்கிறார் முத்துலட்சுமி. அந்த சிறுமியை மிரட்டியே பாலியல் தொழிலுக்கு தள்ளியிருக்கிறார்...
இதெல்லாம் சிறுமியின் அம்மாவுக்கு தெரிந்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.. கடந்த வருடம் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் அம்மாவிடமே கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார் முத்துலட்சுமி. ஆனால், நிறைய பணத்துக்கு ஆசைப்பட்ட அம்மா, சிறுமிக்கு உடல் நலம் ஓரளவு தேறியதும் மறுபடியும், கொண்டுவந்து முத்துலட்சுமியிடம் விட்டுவிட முயன்றுள்ளார்.
மெடிக்கல் செக்கப்: பாலியல் தொழில்இதனால் நொந்துபோன சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய சொந்தக்காரர் வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறார். ஆனால், அங்கேயும் போனை போட்டு பாலியல் தொழிலுக்கு தள்ள முயற்சி செய்தாராம் சிறுமியின் அம்மா.. இதற்கு பிறகுதான், மனமுடைந்த சிறுமி, போலீஸில் புகார் தந்தார்.
இந்த பாலியல் தொழிலில் நடந்த கொடுமை போதாதென்று, சிறுமியை இளைஞர் ஒருவர் காதலிப்பது போல நடித்ததுடன், அவரும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.. அவரை இப்போது தேடி வருகிறோம். சிறுமிக்கு தற்போது கவுன்சிலிங் தரப்பட்டுள்ளது.. மெடிக்கல் செக்கப்புக்கும் அழைத்து சென்றிருக்கிறோம். இப்போது காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்திருக்கிறோம்" என்றனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications