ஆ.. கைல அதென்ன.. "எடப்பாடிய" தூக்கிட்டு நேரா கிளம்பி வந்துட்டாரே இந்த ராஜமுத்து.. "வாவ்" சட்டசபை
சென்னை: பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக சட்டசபை வரை வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. அந்தவகையில், இன்று ஒரு சம்பவம் நடந்து, ஒட்டுமொத்த பேரவையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். கடந்த 28-ம் தேதி இதற்கான தீர்ப்பு வந்தது. தீர்ப்பு என்பதைவிட, இடைக்கால ஆணை என்றே சொல்லலாம்..
இந்த உத்தரவு வந்த உடனேயே, சூட்டோடு சூடாக அதாவது ஒரு மணி நேரத்தில் பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது..

அப்பீல்
பொதுவாக அதிமுக தலைவர்கள், முக்கியமாக ஜெயலலிதா போன்றோர் நேரம் காலம் பார்த்து, அதற்கு பிறகுதான், எந்த பதவிகளையுமே ஏற்றுக்கொள்வார்கள்.. இதற்காக பிரத்யேகமான நாட்களையே ஒதுக்கி, நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்வார்கள்.. ஆனால், நீதிமன்ற அவசரம் கருதி, பதவியேற்றதாக தெரிகிறது.. அந்த பக்கம் ஓபிஎஸ் அப்பீலுக்கு சென்ற நேரத்தில், இந்த பக்கம் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. எனினும், இது தொடர்பாக ஓபிஎஸ் அப்பீல் சென்றுள்ளார்.. அதன் முடிவு என்னாகும் என்று தெரியவில்லை.. அதைவிட முக்கியமாக, தேர்தல் ஆணையம் என்ன செய்ய போகிறது என்று இறுதி முடிவு எடுக்க போகிறது என்று தெரியவில்லை..

பூரிப்பு ஹேப்பி
திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், திருத்தப்பட்ட விதிகளுக்கு, இதுவரை தேர்தல் ஆணையம் ஒப்புதல் தந்ததில்லை.. அப்படிஇருக்கும்போது, திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் இந்த முறையும் ஒப்புதல் தரும்? என்று சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது.. இப்படியான சட்டசிக்கல்கள் ஒருபக்கம் இருந்தாலும், மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றி உள்ளார்.. மிகுந்த பூரிப்பிலும் உள்ளார்.. பதவியேற்றபோது, எம்ஜிஆர் தொப்பி, கண்ணாடி சகிதம் காட்சியளித்த எடப்பாடி, நிர்வாகிகளின் விருப்பத்துக்காக சிறிதுநேரம் அதே கெட்டப்பிலும் காட்சி அளித்து கொண்டிருந்தார்.

மேஜை தட்டி தட்டி
நிர்வாகிகள் தங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் சட்டசபையிலும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.. பதவியேற்றபிறகு சட்டசபைக்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் எழுந்து நின்று மேஜையை தட்டி எடப்பாடிக்கு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்தனர்.. அதுமட்டுமல்ல, கேள்வி நேரத்தின்போது, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருமே, "பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்த பிறகே, தங்களுடைய கேள்வியை தொடங்கினர்.. இன்றும்கூட, எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் சட்டசபையில் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.

கமெண்ட்ஸ்
வீரபாண்டி தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் ராஜமுத்து.. இவர் இன்று சட்டசபைக்கு வரும்போது, கையில் ஒரு பெயர்ப்பலகையுடன் வந்திருந்தார்.. அந்த பெயர்ப்பலகையில், எடப்பாடி கே பழனிசாமி, கழகப் பொதுச்செயலாளர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்" என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன... இது வீடியோவாகவும் சோஷியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கிறது.. இதை பார்த்ததுமே பலரும் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.. அதேசமயம், நிறைய "கிண்டல்" கமெண்ட்கள் குவிய ஆரம்பித்துவிட்டன.. அதிலும் அதிமுகவினரின் கமெண்ட்களே அதிகம் பதிவாகி இருப்பதாக தெரிகிறது.

போடலயா மாஜி
அவைகளில், "அஇஅதிமுக வின் பொது செயலாளர் என்ற பதவிக்கு என்றென்றும் பொருத்தமானவர் புரட்சித் தலைவி அம்மா மட்டுமே, அந்த பதவி அவருக்கு மட்டும்தான்" என்றும், "ஆளாளுக்கு ஒவ்வொரு போர்டை கொண்டுவந்து தலைமை செயலகத்தை சுற்றி சுவற்றில் வைக்கலாமே... 65 எம்எல்ஏக்களும், 65 போர்டுகள் என பார்க்கவே அமர்க்களமாக இருக்குமே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.. மேலும் சிலரோ, "ஏன், அந்த போர்டுல கழக நிரந்தர பொது செயலாளர்னு போடலையா? அப்படின்னா அம்மா, "மாஜி பொதுச்செயலாளர்" ஆகிவிட்டாரா? இன்னைக்கு கொண்டு வந்து, மறுபடியும், பெயர் மாற்றப்போகிறாரா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.

போர்டுல பேர்
இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் அதிகமாக ஷேர் ஆகிக் கொண்டிருக்கிறது. எனினும், "அதிமுக பொதுச்செயலாளர்" என்று பொறிக்கப்பட்டிருந்த இந்த பெயர்பலகையை எதற்காக சட்டசபைக்கு இன்று ராஜமுத்து கொண்டு வந்தார் என்று தெரியவில்லை.. ராஜமுத்து எம்எல்ஏ, எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசி ஆவார்.. கடந்த வருடம், இவரது அப்பா, முத்துசாமி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.. அப்போது, காட்டூரில் உள்ள எம்எல்ஏவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த முத்துசாமியின் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது..!!
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications