பச்சை பச்சையாய்.. 'ரேபிடோ பைக்'கிற்கு தடை?.. நைட் நேர "சில்மிஷம்".. போலீசுக்கு ஓடிய பெண்.. இது வேறயா
சென்னை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த டிரைவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. நள்ளிரவு நேரத்தில் இந்த பாலியல் தொல்லையை தந்துள்ளார் டிரைவர்... நாளுக்கு நாள் ரேபிடோ பைக் டிரைவர்கள் குறித்த புகார்கள் அதிகரித்து வருவது மிகப்பெரிய பரபரப்பை மறுபடியும் ஏற்படுத்தி உள்ளது.
உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி தற்போது மிகவும் பிரபலமாகி உள்ளது.

பஸ் ஸ்டாண்டுகள், ரெயில்வே ஸ்டேஷன்கள், ஏர்போர்ட்கள் போன்ற இடங்களில் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.. இப்போது ரேபிடோ பைக் வசதியும் தரப்பட்டு வருகிறது.
கஸ்டமர்கள்: அதன்படி, வாடிக்கையாளர்களை பைக்கில் வந்து அவர்கள் செல்லும் இடத்துக்கு அழைத்து செல்கிறார்கள்.. இதற்கும் குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது... ஆட்டோ, காரை விட இதற்கு கட்டணம் குறைவாக இருப்பதால், நிறைய பேர் இந்த 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த துவங்கி உள்ளனர். அதுவும் இல்லாமல், இதற்கு காலம் நேரம் எதுவும் கிடையாது.. அதிகாலை முதல் இரவு வரை எப்போது வேண்டுமானாலும் இந்த வசதி உள்ளதால், பலராலும் விரும்பப்பட்டு வருகிறது.
பெருத்த பாதிப்பு: சமீபத்தில் மெட்ரோ ரெயில் நிறுவனமும் ரெயில் நிலைய பெண் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இப்படி இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளதால், ஆட்டோ மற்றும் வாடகை கார் தொழிலாளர்களுக்கு இது பெருத்த பாதிப்பை உண்டுபண்ணி வருவதால், அவர்கள் நொந்துபோய் உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு குற்ற சம்பவம் நடந்துள்ளது.. அதுவும் பக்கத்து மாநிலமான கர்நாடகா மாநிலத்தில்.
கடந்த 21-ம் தேதி இரவு 11.10 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.. 30 வயது பெண் ஒருவர், பெங்களூரு புறநகர் பகுதியான ஏலகங்காவிலிருந்து இந்திராநகருக்கு செல்வதற்காக, இந்த பைக்கை புக் செய்துள்ளார். அதன்படியே, ரேபிடோ பைக்கில் இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.. பைக்கில் ஏறி உட்கார்ந்து கொஞ்ச தூரம் சென்றதுமே, அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்துள்ளார் அந்த பைக் டிரைவர்.. பிறகு, நடுவழியிலேயே அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், செய்வதறியாது திகைத்துள்ளார்.. நடுவழியில் இறங்கவும் முடியாமல், பைக்கிலேயே வேறு வழியில்லாமல் பயணம் செய்து வந்துள்ளார்.. ஒரு கட்டத்தில் அந்த டிரைவரின் அட்டகாசம் அத்துமீறியது.. இதனால் ஓடும் பைக்கில் இருந்தே அந்த இளம்பெண் கீழே குதித்து தப்பியிருக்கிறார்.. இதில் அவருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது...
உடம்பெல்லாம் காயம்: பிறகு, உடம்பெல்லாம் காயங்களுடனேயே அந்தப் பெண் போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராபிடோ பைக் டிரைவரை கைது செய்தனர்.. அவர் பெயர் தீபக்ராவ் என்பதும் தெரியவந்துள்ளது.. விசாரணையும் நடந்து வருகிறது.. இதனிடையே, நடுரோட்டில் பைக்கிலேயே அந்த பெண்ணுக்கு பாலியல் சேட்டை தந்த காட்சிகள் அத்தனையும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.. அந்த காட்சிகள் இணையத்திலும் வெளியாகி காண்போரை அதிர செய்துள்ளது.
இதற்கு முன்பேயே, பல குற்றச்சாட்டுகள் ரேபிடோ பைக் ஓட்டுநர்கள் மீது எழுந்துள்ளது.. அதுவும் தமிழகத்திலும் இந்த புகார் உள்ளது.. சவாரிக்கு அழைக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டல் விடுப்பது அதிகரித்து வருவதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்... அப்படி கேட்ட தொகையை வாடிக்கையாளர்கள் கொடுக்க மறுத்தால் தங்களது செல்போன் எண்ணுக்கு நண்பர்களை வைத்து போன் செய்து குடும்பத்தையே ஆபாசமாக திட்டுவதாகவும், ராபிடோ பயணிகள் ஏற்கனவே புகார்கள் சொல்லி உள்ளனர்.
நிர்வாண வீடியோ: இவர்களிடம் சிக்கி தூக்கத்தையும் மன நிம்மதியையும் இழந்த ராபிடோ பயணியான கெவின் என்பவர் துரைப்பாக்கம் போலீசில் கடந்த வருடம் புகார் ஒன்றை தந்திருந்தார்.. இப்படித்தான் ஒருமுறை, பைக் டாக்ஸி புக் செய்த இளைஞரை காரில் கடத்திச்சென்று, கத்திமுனையில் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்த நிலையில், அதேபோல, சில நேரங்களில் ராபிடோ பைக் டாக்சியை நம்பி பெண்கள் பயணம் செய்வதால் அவர்களது பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் அந்தந்த மாநில போலீசார்கள் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த ரேபிடோ பைக்குகளால், தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால், அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, தொழிற்சங்கங்கள் விடுத்து வரும்நிலையில், இதுபோன்ற புகார்களும் கிளம்பி பகீரை கிளப்பி கொண்டிருக்கின்றன.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications