குமட்டும் கண்றாவி.. "துப்பட்டா" அணியாத பெண்களை கண்டால்.. யார் இந்த "விநோத சபலிஸ்ட்".. அதிர்ந்த போலீஸ்
சென்னை: வினோதமான சபலிஸ்ட் ஒருவர் போலீசில் சிக்கி உள்ளார்.. அவர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே மிரண்டு போய்விட்டனர்.. யார் அவர்?
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த இளைஞர் பெயர் தினேஷ்குமார்.. 20 வயதாகிறது.. எழும்பூரில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் வேலைசெய்து கொண்டே, ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி பெற்று வந்தார்.
தினமும் சாயங்காலம் வேலை முடிந்துவிட்டால், பெண்களை சீண்டுவதுதான் தினேஷின் ஹாபியாக இருந்துள்ளது.. அந்தவகையில், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதுடன் அத்துமீறலிலும் ஈடுபட்டு வருவார்..

அட்டகாசம்:
இதற்காகவே தினமும் காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொள்வாராம்.. வில்லிவாக்கத்தில் இருந்து எழும்பூர் வரை பைக்கிலேயே செல்வாராம். எதிரே எந்த பெண் வந்தாலும், அவர்களை சீண்டி, சேட்டையும் செய்து விடுவார்.. அதிலும், வாக்கிங், ஜாக்கிங் செல்லும் பெண்கள் தனியாக வந்தால், பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த பெண்ணின் அருகில் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு, பிறகு மறுபடியும் வேகமாக ஓடிவந்து பைக் எடுத்து கொண்டு பறந்து விடுவாராம்.
சில்மிஷம்:
இப்படித்தான், வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை சீண்டி உள்ளார்.. அவர் ஒரு ராணுவ வீரரின் மகள் ஆவார்.. தினேஷ்குமார் அந்த பெண்ணை சில்மிஷம் செய்ததை, பின்னாடியே வாக்கிங் செய்து நடந்து வந்த, ராணுவ வீரரும் பார்த்துவிட்டார்.. அப்பறமென்ன? போலீசுக்கு விஷயம் பறந்ததும், தினேஷ்குமாரை தட்டி தூக்கி கொண்டு சென்றனர். அப்போது ஒரு வாக்குமூலம்தந்தார்..
அதில், "எனக்கு சின்ன வயதில் இருந்தே இப்படி ஒரு ஆசை உண்டு.. எந்த பெண் தனியாக நடந்து சென்றாலும், சீண்டி பார்த்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.. இதுபோல், இதுவரை 150-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளேன்" என்று சொல்லி போலீஸையே அதிர வைத்தார்..

அலாரம்:
இதே மாதிரி ஒரு சபலிஸ்ட்தான் மறுபடியும் சிக்கி உள்ளார்.. சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 22 வயதாகிறது. இவருக்கு யாரோ ஒரு இளைஞர் பாலியல் தொல்லை தந்துள்ளார்.. இதனால், திருமங்கலம் மகளிர் போலீசில் அளித்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.. அப்போதுதான், சரவணன் என்பவர் சிக்கினார்.. இவருக்கு 31 வயதாகிறது. முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர்.
இவரிடம் விசாரணையும் துவங்கியது.. அப்போது சரவணன் தந்த வாக்குமூலத்தை கேட்டு, இந்த போலீசாரும் விக்கித்து போய்விட்டனர்..
டூ வீலர்:
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "2021ம் ஆண்டு திருமங்கலம் பகுதியில், ஒரு சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார்.. அந்த சிறுமிக்கு சரவணன் பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு, பைக்கில் தப்பி சென்றார். ஆனாலும், பொதுமக்கள் அவரை விரட்டி, பிடித்து மகளிர் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர்.. பிறகு, போக்சோவில் வழக்குபதிவு செய்து அவரை ஜெயிலில் அடைத்தனர்.
கடந்த மார்ச் மாதம்தான், இவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார்.. ஆனால், மறுபடியும் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே அண்ணா நகர், ஜெஜெ நகர், திருமங்கலம், பெரவள்ளூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் பாலியல் கேஸ்கள் உள்ளன..

துப்பட்டா:
எந்த பெண் ரோட்டில் தனியாக சென்றாலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விடுவார்.. அதிலும் அழகான பெண்கள் + மார்டன் டிரஸ் அணிந்த பெண்கள் என்றால், விரட்டி விரட்டி பாலியல் தொல்லை தருவர்.. அதிலும், சுடிதார் அணிந்து துப்பட்டா அணியாத பெண்கள் என்றால், அவர்களை விடவே மாட்டார்.. அதனால், துப்பட்டா அணியாத பெண்கள் என்றால், கூடுதலாக குறி வைத்து, பின்னாடியே சென்று டார்ச்சர் தருவார்.
ஒருநாளைக்கு தினமும் 5 பெண்களிடமாவது சில்மிஷத்தில் ஈடுபடுவது இவரது வழக்கமாக இருந்துள்ளது.. இப்படி இதுவரை 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார்.. இதை வாக்குமூலமாகவே அவர் எங்களிடம் தெரிவித்துள்ளார்" என்றனர்..
சபலிஸ்ட்:
இதனிடையே, போலீசாரிடமிருந்து சரவணன் தப்பியோட முயன்றாராம்.. ஆனால், சாலையோரம் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில், "கை முறிவு" ஏற்பட்டுவிட்டதாம்.. அதனால், முதலுதவி சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சரவணன் அனுமதிக்கப்பட்டார்... அங்கு சிகிச்சை முடிந்ததும், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் இந்த விநோத சபலிஸ்ட் அடைக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications