விபச்சாரத்தில் "அந்த" பிரபல நடிகையா? நம்ப முடியலயே.. துபாய் ஓட்டலில் 50 சினிமா நபர் சிக்கி தவிப்பு?
சென்னை: கலைநிகழ்ச்சி என ஒப்பந்த முறையில் பிரபல நடிகைகள் உள்பட 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களை அழைத்து சென்று, துபாயில் நட்சத்திர ஓட்டல்களில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பல கோடி சம்பாதிக்கும் பெண் உள்பட 3 புரோக்கர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சினிமாவின் மீது மக்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய மோகம் உண்டு... குறுகிய காலத்தில் ஒரே நேரத்தில் பேரும்புகழும் கிடைப்பதால் சினிமாவில் நடிக்க பலரும் ஆசைப்படுவதும் உண்டு... இதனால், நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாக சொல்லி இளம்பெண்களின் வாழ்க்கையை சூறையாடும் கும்பல் காலகாலத்துக்கும் இருந்துகொண்டே இருக்கிறது.

சினிமா மோகம்: அதேபோல, சினிமாவில் ஓரிரு படங்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைக்காமல், பாலியல் தொழிலில் சிக்கி கொள்ளும் பரிதாபமும் நேரிடுகிறது.. கடந்த வருடம்கூட மும்பையில், தமிழ் பட நடிகைகள் 2 பேர் உட்பட அப்பாவி பெண்களை போலீசார் மீட்டு அழைத்து வந்திருந்தனர்.
அதேபோல, கலை நிகழ்ச்சி பெயரில் , வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று, பாலியல் தொழிலில் அவர்களை ஈடுபடுத்தப்படும் அவலமும் தொடர்கிறது.. அப்படித்தான் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
புகார்: தமிழக போலீசுக்கு, கடந்த மே 29ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மூலம் புகார் ஒன்று வந்தது. அதில், துபாயில் சட்டவிரோதமாக கலை நிகழ்ச்சி என்று நடிகைகள் மற்றும் டான்ஸ் கலைஞர்களான இளம்பெண்களை அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே சென்னையில் இருந்து அழைத்து சென்ற நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
உடனே இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்... இதற்காகவே ஒரு போலீஸ் டீம் களமிறக்கப்பட்டது.. அப்போதுதான், குறும்பட டைரக்டர்கள் மூலம், கலை நிகழ்ச்சி மற்றும் ஸ்டார் ஓட்டல்களில் டான்ஸ் நிகழ்ச்சிக்கு அக்ரிமென்ட் முறையில், பல நடிகைகள் துபாய்க்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது தெரியவந்தது.
நடிகைகள்: சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் என பலரையும் மும்பை வழியாக துபாய்க்கு அழைத்து சென்று, அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிடுகிறார்களாம்.
கேரளாவை சேர்ந்த 21 வயது டான்ஸ் கலைஞர் மூலம்தான், இந்த அதிர்ச்சி தகவல் வெளியுலகிற்கே தெரியவந்துள்ளது.. இந்த கேரள இளம்பெண்ணை, ஒரு வருடம் ஒப்பந்தப்படி துபாய்க்கு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனால், அந்த ஓட்டலிலிருந்து தப்பித்து, துபாயின் எமர்ஜென்சி நம்பர் "999"க்கு தொடர்பு கொண்டு, போலீசாரின் உதவியை கேட்டுள்ளார்.. பிறகு துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் சென்னைக்கு வந்துள்ளார் இளம்பெண்..
தனக்கு நடந்த துயரம் குறித்து, தனி புகாராகவும் போலீஸில் தந்ததுடன், சென்னை போலீசாரிடம் அனைத்தையும் வாக்குமூலமாகவும் தந்தார். அதில்தான், சென்னையில் குறும்பட இயக்குநர்கள் நடிகைகளையும், டான்ஸ் கலைஞர்களையும் , கலைநிகழ்ச்சி என்ற பெயரில் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குறித்து, இளம்பெண் விலாவரியாக சொன்னார்.
துரைப்பாக்கம்: இதையடுத்து, மடிப்பாக்கத்தை சேர்ந்த குறும்பட இயக்குநர் பிரகாஷ் ராஜ் (24), தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்த ஜெயகுமார் (40), சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆபியா (24) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடம் விசாரணையும் நடத்தினார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "குறும்பட டைரக்டர் பிரகாஷ் ராஜ், துபாயில் கலை நிகழ்ச்சி உள்ளதாக சொல்லி சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்துள்ளார். அதை பார்த்து ஏராளமான துணை நடிகைகள், டான்ஸ் கலைஞர்கள், பிரகாஷை அணுகியிருக்கிறார்கள். பின்னர் இவர்கள் அனைவரையும், துபாயில் நட்சத்திர ஓட்டல்களில் பாலியல் தொழில் செய்யும் கேரளாவை சேர்ந்த ஷகீல் (48) என்பவர் ஆன்லைனிலேயே நேர்காணல் நடத்தியிருக்கிறார்.
துணை நடிகைகள்: பின்னர், 6 மாத ஒப்பந்தப்படி, ஒவ்வொரு வாரமும் 4 இளம் பெண்கள் துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளனர்.. இப்படியே ஒவ்வொரு மாதமும் 2 முறை டிவி சீரியல் நடிகைகள், துணை நடிகைகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தெரியாத பெண்களிடம் தமிழிலும், ஆங்கிலம் தெரியாத பெண்களிடம் ஆங்கிலத்திலும் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். இதற்காக அந்த பெண்களுக்கு முதற்கட்டமாக 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை அட்வான்ஸ் தந்துள்ளனர்.
துபாயில் ஏர்போர்ட்டில் இறங்கும் இந்திய பெண்களை, ஷகீல் அவரது தோழி உள்பட 4 பேர் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற, ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலுக்கும் பிரித்து அனுப்பி வைக்கிறார்கள்.. சம்பந்தப்பட்ட ஸ்டார் ஓட்டலுக்கு பெண்கள் சென்றதுமே, அவர்களிடமிருந்து செல்போன், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி கொண்டு, ஒரு ரூமில் அடைத்து வைத்துவிடுவார்களாம்.
சினிமா சான்ஸ்: இப்படி சினிமாவில் சான்ஸ் கிடைக்காத, நடிகைகள், துணை நடிகைகள், டிவி நடிகைகள் என 50 பேர் அடைத்து வைத்துவிடுவார்களாம். அட்வான்ஸ் தொகையை கை நீட்டி வாங்கி கொண்டதால், 6 மாதம் ஓட்டலுக்கு வரும் விஐபிக்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் மிரட்டுவார்களாம். இதை மீறினால் பாஸ்போர்ட் திரும்ப தர மாட்டார்கள். அவர்கள் சொல்வது போல் நடந்துகொண்டால், 3 மாதத்தில் இந்தியா அனுப்பி வைத்துவிடுவார்களாம்.
இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர் பாலியல் புரோக்கர் ஷகீல் என்பவர்தான். அதனால், அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர்.. ஆனால், அதற்குள் நடிகைகள் தொடர்பான தகவல்கள், வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை ஷீகல் அழித்துவிட்டாராம்.. இதனால், அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் எடுப்பதற்காக, தடயவியல் துறைக்கு அவரது செல்போனை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
பெண் புரோக்கர்: இதனிடையே, துபாயில் உள்ள பெண் புரோக்கர், ஷீகல் உட்பட 4 பேரை கைதாகி உள்ளனர்.. ஷீகரிடம் நடத்திய விசாரணையில், மொத்த விஷயத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டார்..
சினிமா நடிகைகள் பலரை டிவி கலை நிகழ்ச்சி என ஏமாற்றி துபாய் அழைத்து சென்று அங்கு, பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினாராம்.. இந்த ஒரு வருடத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்ட நடிகைகள், டிவி நடிகைகளை துபாய்க்கு அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறியிருக்கிறார்.
இளம்பெண்: அதுமட்டுமல்ல, நடிகை மற்றும் இளம்பெண்களை துபாய்க்கு அனுப்பி வைக்க, புரோக்கராக இங்குள்ள சில நடிகைகளும் உதவி செய்துள்ளார்களாம்.. இவர்களது வங்கி கணக்கிற்கும் கோடிக்கணக்கில் பணம் துபாயிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக துபாயில் இருந்து பாலியல் புரோக்கர்கள் மற்றும் நடிகைகளுக்கு பணம் அனுப்பட்டுள்ளதால், அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தில் களமிறங்கும் என தெரிகிறது.
அத்துடன், துபாயில் சிக்கியுள்ள நடிகைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. இந்த வழக்கை என்ஐஏ நேரடியாக கண்காணித்து வருவதால் மிகுந்த கவனத்துடன் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
யார் அந்த நடிகை: இந்த வழக்கில் பல முன்னணி நடிகைகள் சிக்கியிருப்பதாகவும், விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெளியே கசியாமல் விஷயத்தை கையாண்டு வருவதாகவும் சொல்கிறார்கள். தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய போராட்டம் மூலம் பிரபலமாகி, 100 நாள் நிகழ்ச்சி தொடரிலும் நடித்த நடிகை உள்பட பல நடிகைகள் துபாயில் இப்படித்தான் சிக்கியிருக்கிறார்களாம்.. இவ்வளவும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
நடனம்: நடனம் என்ற பெயரில் இவர்களை அழைத்து சென்று, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய போதும், ஆபாசமாக டிரஸ் அணிந்து ஆட சொல்லி இருக்கிறார்கள்.. ஆனால் இதற்கு பணம் எதுவும் தர மாட்டார்களாம்.. இவர்களால் லாபம் அடைந்தது, ஸ்டார் ஓட்டல் ஓனர்களும் , பாலியல் புரோக்கர்களும் தானாம்
எனவே இந்த விவகாரத்தில் பல புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்பதால், பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications