"நிர்வாண" வீடியோகால் செய்த கோயில் குருக்கள்.. ஸ்பாட்டுக்கே போன கணவன்.. சேரில் உட்கார வைத்து "பாடம்"
கோயில் குருக்களை நாற்காலியில் உட்கார வைத்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளார் இளைஞர் ஒருவர்
சென்னை: 3 நாட்களை கடந்தும் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தவறிழைத்த கோயில் குருக்களை இணையவாசிகள் கடுமையாக திட்டி தீர்த்தாலும், சம்பந்தப்பட்ட இளைஞருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
தொழில்நுட்பம் பெருக பெருக, குற்றங்களும் பெருக ஆரம்பித்துவிட்டன.. வளர்ச்சி என்ற நோக்கில் விஞ்ஞானத்தை அணுகினாலும், அதனால் ஏற்படும் வன்முறைகளையும், தவறுகளையும் தடுக்க முடிவதில்லை.
சமீப காலமாகவே, பணம், நகைகளை பறிக்கும் மோசடி கும்பல்கள் ஆன்லைனில் வட்டமடித்து வருகிறார்கள்.. செல்போன்களை, யாராலுமே தவிர்க்க முடியாத பட்சத்தில் இதை தான் தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தி நூதன கொள்ளைகளில் இறங்கி உள்ளனர்.

டிஜிபி ஆர்டர்
சமீபத்தில்கூட, நம்முடைய டிஜிபி சைலேந்திரபாபு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.. "கடன் தருகிறோம்" என்று மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் விளம்பரம் செய்கின்றனர்.. அவர்கள் தெரிவிக்கும் ஆப்பை டவுன்லோடு செய்யும்போதே, செல்போனில் உள்ள நம்பர், உங்களின் போட்டோக்கள் உள்ளிட்ட விபரங்களை பெற்று விடுகின்றனர்... பிறகு, கடன் வாங்கியவரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி பணம் பறிக்கிறார்கள்.. யாரிடமும் உங்களின் போட்டோக்களை பகிர வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

வலிய வலிய
பெண்கள்தான் இப்படி பணத்துக்காக ஆண்களுக்கு குறி வைக்கிறார்கள் என்றால், சில சபலிஸ்ட்களும் வலிய போய் சிக்கி கொள்கிறார்கள்.. அப்படித்தான் ஒரு சபலிஸ்ட் சிக்கி உள்ளார்.. ஆனால், இவர் ஒரு கோயில் குருக்கள் என்பதுதான் ஆகச்சிறந்த ஹைலைட்டாகும்.. இது எந்த ஊர்? குருக்கள் பெயர் என்னவென்று தெரியவில்லை.. முகம் தெரியாத இளம்பெண் ஒருவருக்கு தவறான நோக்கத்துடன் வீடியோ கால் செய்துள்ளார்.. அப்போது, தனக்கு வீடியோ கால் செய்வது, தன்னுடைய நண்பர்கள், உறவினர்களாக கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த அந்த இளம்பெண், அந்த குருக்களின் போனை எடுத்துள்ளார்.

சபலிஸ்ட்
அப்போது, அந்த பெண்ணை பார்த்ததும், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து கட்டியதுடன், மர்ம இடத்தை காட்டி சில்மிஷமும் செய்துள்ளார்.. இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வீடியோ காலை கட் செய்துவிட்டார்.. என்ன செய்வது என்றே தெரியாமல் அதிர்ந்து போனார் அந்த பெண்.. பிறகு கொஞ்ச நேரத்திலேயே தன்னுடைய நிர்வாண போட்டோவை அந்த பெண்ணின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைத்தார் அந்த கோயில் குருக்கள்... இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய கணவரிடம் தெரிவித்துள்ளார்.

மர்ம உறுப்பு
இதையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர், அந்த குருக்கள் யார்? எங்கிருந்து வீடியோகால் வந்தது? என்று ஆராய்ந்தார். இதற்காக தன்னுடைய நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு, அந்த கோயில் குருக்களின் போட்டோவை வைத்து அவர் எங்கே இருக்கிறார்? எந்த ஊரில் இருக்கிறார்? என்று தேடினார்.. இறுதியில் குருக்களை கண்டுபிடித்துவிட்டார்.. நேரடியாக அவர் வீட்டுக்குள்ளேயே நுழைந்த கணவர், அந்த கோயில் குருக்களை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, லெப்ட் & ரைட் வாங்கிவிட்டார். எதுக்காக வீடியோ கால் செய்தீங்க? எதுக்காக நிர்வாண போட்டோவை அனுப்புனீங்க? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கவும், அந்த குருக்கள் மிரண்டு போய்விட்டார்.

வீடியோ
வசமாக இளைஞரிடம் சிக்கி கொண்டுவிட்டதையும், தன்னை கேள்விகள் கேட்பதை செல்போனில் வீடியோவாக எடுப்பதையும் பார்த்து மலங்க மலங்க விழித்தார்.. இறுதியில் அவர் செய்த தவற்றை அவர் வாயாலேயே வரவழைத்துவிட்டார் இளைஞர்.. இந்த இளைஞர் நினைத்திருந்தால், குருக்களை வீடுபுகுந்து அடித்து தாக்கியிருக்க முடியும்.. போலீஸ்வரை விவகாரத்தை கொண்டு வந்திருக்க முடியும்.. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.. "ஆமா, தப்புதான்.. தெரியாமல் நிர்வாண வீடியோ கால் செய்துட்டேன்" என்று மன்னிப்பு கேட்கும்வரை குருக்களை அந்த இளைஞர் விடவேயில்லை..

பேயறைஞ்சது போல
பேயறைந்த மாதிரி நாற்காலியில் உட்கார்ந்து, ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் அந்த குருக்கள்.. குரலே அவருக்கு வெளியே வரவில்லை.. மென்று விழுங்கி பேசினார்.. தவறு செய்ததால் அவரால் துணிச்சலுடன் பதில் சொல்ல முடியவில்லை.. எந்த செல்போன் வீடியோ மூலம் தன்னுடைய சேட்டையை காட்டினாரோ, அதே செல்போன் வீடியோ மூலம் அசிங்கப்பட்டுவிட்டார் குருக்கள்.. இந்த வீடியோதான், 3வது நாளையும் கடந்து இன்னமும் சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.. வயசுக்கோளாறு காரணமாக, சில இளைஞர்கள் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால், குருக்கள்கூடவா?












Click it and Unblock the Notifications