மறந்து கிடந்த ராஜராஜ சோழனை.. தமிழர்களுக்கு அறிமுகம் செய்தவர்! யார் இந்த ஸ்கூல் டீச்சர் வெங்கையா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நமக்கு பொன்னியின் செல்வன், அதாவது ராஜராஜ சோழன் பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால், அவரை நமக்கு அறிமுகம் செய்த வி.வெங்கையா பற்றி நாம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது யார் என்று இன்று கேட்டால் நம் அனைவருக்கும் ராஜராஜ சோழன் என்று பதில் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ராஜராஜ சோழன் என்றாலே யார் என்றே தெரியாத சூழல் இருந்துள்ளது.

ஒரு காலம் என்றால் ரொம்பவே பழைய காலம் எல்லாம் இல்லை. சுமார் 115 ஆண்டுகளுக்கு முன்னரே ராஜராஜ சோழனைத் தெரியாத சூழலே நிலவி வந்தது. அப்படியிருக்கும் போது ராஜராஜ சோழனை தமிழ்ச் சமூகம் எப்படித் தெரிந்து கொண்டது தெரியுமா? வாங்கப் பார்க்கலாம்.

 பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. உலகெங்கும் இதற்கு பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி உள்ள இந்தப் படம் கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டது ஆகும். சோழப் பேரரசரின் கற்பனை கதைத்தான் என்றாலும் இந்த நாவலில் இருக்கும் தகவல்கள் மிகவும் விரிவானதாகவே இருக்கும்.

 தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில்

"பொன்னியின் செல்வன்" கதை நாயகனான அருள்மொழி வர்மன், அதாவது ராஜராஜ சோழன். ஆனால், சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. அப்போதெல்லாம் மிகப் பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது யார் என்றே தெரியாது. பலரும் சங்க காலத்தில், அதாவது ராஜராஜ சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கரிகால சோழன் தான் பெரிய கோயிலைக் கட்டியதாக நினைத்து இருந்தார்கள்.

 வி வெங்கையா

வி வெங்கையா

அப்படியிருக்கும் போது வி வெங்கையா என்ற பள்ளி ஆசிரியர் தான் ராஜராஜ சோழனை நமக்கு அறிமுகம் செய்து வைத்து உள்ளார். யூஜென் ஹல்ட்ஷ் என்ற வரலாற்று ஆசிரியர் உடன் இவர் செய்த பணி தான் இதற்குக் காரணமாக இருந்தது. அது 1886ஆம் ஆண்டு அப்போது ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஹல்ட்ஸ் என்பவரைச் சென்னை மாகாண அரசு தலைமை கல்வெட்டு வல்லுநராக நியமித்து இருந்தது. அவர் மாமல்லபுரத்தில் உள்ள பஞ்ச ரதங்கள் என்ற பல்லவ மன்னர்களின் கல்வெட்டுகளைப் படிக்க முயன்று கொண்டு இருந்தார்.

 எப்படி

எப்படி

அங்குச் சுற்றுலாப் பயணியாகச் சென்று இருந்த வி.வெங்கையா இதைக் கண்டார். அவர் அப்போது பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். வெளிநாட்டவர் ஒருவர் நம்ம ஊர் கல்வெட்டுகளைப் படிக்க முயல்வதைக் கண்டு வியந்த வெங்கையா அவருக்கு உதவ முன்வந்தார். வெங்கையாவுக்கு இந்த விஷயத்தில் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்த ஹல்ட்ஸ், ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, ஆய்வுப் பணிகளில் தன்னுடன் இணைந்து கொள்ளக் கேட்டுள்ளார்.

 ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன்


இது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு என்பதை உணர்ந்த வெங்கையா, அந்த ஆண்டுடன் டீச்சர் வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு, தொல்லியில் துறையில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதன் பின்னர் கொஞ்ச காலத்திற்குப் பிறகு, அவர் அவர்கள் தஞ்சாவூரில் கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்து கொண்டு இருந்தனர். அப்போது தான் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது கரிகாலன் அல்ல, ராஜ ராஜ சோழன் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்திய மன்னர்கள் பற்றிய சமகால வரலாறுகள் மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளது.

 சரியான நேரம்

சரியான நேரம்

நம்மிடம் இருக்கும் வரலாறு பெரும்பாலும் பிற இலக்கியங்களில் உள்ளக் குறிப்புகள் அல்லது கோவில்கள், செப்புத் தகடுகள், நாணயங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களில் தான் எழுதப்பட்டது. சில நேரங்களில் அப்படி எழுதப்பட்டவை கூட அழிந்துள்ளன. அப்படியிருக்கும் போது தான், தஞ்சை கோயில் கல்வெட்டுகளை இவர்கள் சரியான நேரத்தில் கண்டுபிடித்து உள்ளனர். ஹல்ட்ஸ் ஓய்வு பெற்ற ஜெர்மனி திரும்பிய பின்னரும் கூட, இந்த பணிகளை வெங்கையா தொடரவே செய்தார். அதில் தான் ராஜராஜன் குறித்து நமக்குத் தெரிய வந்தது.

 கல்வெட்டுக்கள்

கல்வெட்டுக்கள்

இந்த கல்வெட்டுகள் பெரும்பாலும் நில மானியங்கள், வரி விலக்கு போன்ற நிர்வாக விஷயங்களைப் பற்றியே பெரும்பாலும் இருக்கும். இந்தியாவில் இருக்கும் கல்வெட்டுகளில் பாதிக்கும் மேலான கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அவை பெரும்பாலும் தமிழ் தான் இருக்கும் என்றாலும் சில சமயங்களில் சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி மொழிகளின் கல்வெட்டுகளும் இருக்கும். இது நாட்டின் வரலாற்றைப் பிரதிபலிக்கிறது.

முக்கியம்

முக்கியம்

வேளூர்பாளையத்தில் உள்ள பல்லவத் தகடுகள், பாண்டியர்களின் வேள்விக்குடி செப்புத் தகடுகள் மற்றும் திருவாலங்காட்டில் சோழர்களின் செப்புத் தகடுகள் போன்ற முக்கிய கண்டுபிடிப்புகள் வெங்கையா காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. இவை தமிழக வரலாற்றில் பெரிய வெளிச்சத்தை வீசியது. வெங்கய்யாவுக்கு தமிழ் அளவுக்குச் சமஸ்கிருதமும் தெரியும் என்பதால் அது பல மர்மங்களை அவிழ்க்க உதவியது. அவர், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, உ.வே.சுவாமிநாத ஐயர் போன்ற தமிழ் இலக்கிய ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+