இவரா, அவரா.. 2022ம் ஆண்டில் உங்களை கவர்ந்த அரசியல் தலைவர் யார்? சர்வே ஸ்டார்ட்! உங்கள் கருத்து என்ன?
சென்னை: "அரசியல் என்பது, நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே சொல்லும் திறமை கொண்டது. ஏன் நடக்கவில்லை என்று விளக்கும் திறமையும் கொண்டது" என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
அரசியல்தான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என்பதால், மக்கள் நாமே, அரசியலை தீர்மானித்து விடுவது புத்திசாலித்தனம்.

2022ம் வருடம் முடிந்து 2023ம் வருடம் பிறப்பதற்கு இன்னும் மூன்று வாரங்கள் தான் இருக்கின்றன. நாட்டிலேயே மிகவும் அரசியல் தெளிவு மிக்க மாநிலம் என்று போற்றப்படுவது தமிழகம். அப்படியானால், இந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்ட அரசியல்வாதிகள் யார் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு கண்டிப்பாக இருக்கதானே செய்யும்.
அதை ஏன் உங்கள் ஆழ்மனதில் வைத்துக் கொண்டு இருக்கனும்.. சாவகாசமாக உங்கள் நண்பர்கள் அறிந்து கொள்ள ஒன் இந்தியா தளத்தில் பகிர்வு செய்யலாமே. உங்களுக்காக சில முக்கிய தலைவர்களின் முன்னுரையை இதில் குறிப்பிடுகிறோம். இன்னும் எத்தனையோ தலைவர்கள் உங்கள் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கக்கூடும். அவர்களைப் பற்றியும் நீங்கள் இங்கே கருத்திடுங்கள். அனைவரும் அறியட்டுமே.
மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பிற்படுத்தப்பட்டோர், நரிக்குறவர்கள், தாழ்த்தப்பட்டோர் என அனைவருக்குமான நலங்களை வாரி வழங்கும் அரசாக இருக்க வேண்டும் என்ற திராவிட மாடலை கையில் ஏந்தி ஆயிரம் விமர்சனக் கணைகளுக்கு மத்தியில் விளம்பரமே இல்லாமல் பல திட்டங்களை முன்னெடுத்து பல்வேறு புள்ளி விவரங்கள் அடிப்படையிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக வழி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் முக ஸ்டாலினா?
ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாதது, டிடிவி தினகரன் தனி கட்சி தொடங்கியது, ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் ஒத்துழையாமை இத்தனைக்கு மத்தியிலும் பிரதான எதிர்க்கட்சியாக 66 சீட்களுடன், அதிமுகவை வெற்றி பெற செய்து அவ்வப்போது அரசுக்கு எதிராக காட்டமான விமர்சனங்களையும் வைக்க தவறாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியா?
கதை முடிந்தது அவ்வளவுதான்.. இனிமேல் காங்கிரஸ் இல்லாத தமிழகம் மலர்ந்து விட்டது என்று பிற கட்சியினர் எக்களித்து சிரித்த போதிலும், போட்டியிட்ட தொகுதிகளில் பெரும்பாலும் வெற்றி பெற்று அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன், தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக 18 சீட்களுடன் வீற்றிருக்கும் காங்கிரசின் தலைவராக உள்ள கேஎஸ் அழகிரியா?
வாரிசு கட்சி, இனிமேல் எழுச்சி பெறாது என்று பிறகட்சியினரால் விமர்சனத்திற்கு உள்ளானக்கப்பட்ட போதிலும் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் முதல் குரலாக ஒலிக்கும் பாமகவின், புதுசாரதி, அன்புமணியா?
யாருமே அதிகமாக அறியாத பானை சின்னத்தில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில் வெற்றி வாகை சூடியதோடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து சமரசம் செய்யாமல் களமாடி வரும் திருமாவளவனா?
தாமரை மலரவே மலராது என்று பிற கட்சிகளால் கிண்டலுக்கு உள்ளான போதிலும் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற சூட்டோடு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியா என்று அதிமுகவினரே சந்தேகம் தெரிவிக்கும் அளவில் தினமும் செய்திகளில் அடிபடும்வகையில் நடந்து கொள்ளும் அண்ணாமலையா?
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களா.. அல்லது இதுவரை ஒரு சட்டசபை உறுப்பினரை கூட பெறாவிட்டாலும் அரசியலில் தொடர்ந்து தீவிரமாக களமாடி வரும் நாம் தமிழர் கட்சியின் சீமானா? அப்பப்போ சமூக கருத்து சொல்லும் கமல்ஹாசனா, விஜயகாந்தின் உடல்நல பிரச்சினைகளுக்கு இடையேயும் போராடும் பிரேமலதாவா, யார் செயல்பாடு உங்களை இந்த ஆண்டு பெரிதும் கவர்ந்தது?
வாருங்கள் வாசகர்களே.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..
யார் கண்டது, தங்கள் செயல்பாடுகளை திருத்திக் கொள்வதற்கும், ஏன் மொத்தமாக மாற்றிக் கொள்வதற்கும் கூட உங்கள் கருத்து பதிவு அவர்களுக்கு உதவலாம்!
-
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்!












Click it and Unblock the Notifications