மேட்டருக்கு வந்த ஜெகத் ரட்சகன்.. "ராஜா"வின் பிளானும் இதுதான்.. 2 மைத்துனர்களால் தகிக்கும் தாம்பரம்
தாம்பரம் துணை மேயர் பதவிக்கு காய் நகர்த்துகிறார்கள் திமுக சீனியர்கள்
சென்னை: இந்த முறை சென்னைக்கு யார் மேயர் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், மேயர் ரேஞ்ஜூக்கு, துணை மேயர் பதவியை கேட்டு, திமுக நிர்வாகிகள் முட்டி மோதி கொண்டிருக்கிறார்கள்.
தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டு, முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை இம்முறைசந்தித்துள்ளது..
மாநகராட்சியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு மொத்தம் 213 வார்டுகள் இருந்தன. ஆனால், தற்போது உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 70 வார்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சியில் திமுக தலைமையிலான கூட்டணியில் 12 வார்டுகள் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 58 இடங்களில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது.. அதிலும் கவுன்சிலர் பதவியைப் பிடித்து மேயர், துணை மேயர் பதவிகளைக் கைப்பற்ற திமுக கடுமையாக போராடி கொண்டிருக்கிறது.. மொத்தம் சுயேச்சைகள் என மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், திமுக, அதிமுக இடையே மட்டுமே கடுமையான போட்டி ஏற்பட்டது.

அதிமுக
அதனால்தான், ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 58 வார்டுகளிலும், அதிமுக 67 வார்டுகளிலும் போட்டியிட்டன. இதில், மொத்தமுள்ள 70 வார்டுகளில் 35 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுக பொறுப்புகளில் இருப்பவர்கள், தங்களுடைய அம்மா, மனைவி, மகள், அக்கா, தங்கையை வேட்பாளர்களாகவும் நிறுத்தியுள்ளனர்... இவர்களுக்கு எந்தவிதமான அரசியல் அனுபவமும், கட்சியை பற்றின புரிதலும் இல்லாதது வேறு விஷயம்.

ஒதுக்கீடு
அதுமட்டுமல்ல, மேயர் பதவி ஆதிதிராவிடர் இன பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 4, 12, 13, 27, 31, 51 ஆகிய 6 வார்டுகள் ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 6 வார்டுகளிலும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல், திமுக, தங்கள் கட்சி வேட்பாளர்களையே நிறுத்திவிட்டது.. குறிப்பாக, பொது வார்டான 32-வது வார்டில் திமுக வேட்பாளராக ஆதிதிராவிட பெண் வசந்தகுமாரியை நிறுத்திவிட்டது. அதேபோல, திமுக எம்பியான ஜெகத்ரட்சகனின் மைத்துனர் ஜி.காமராஜ் 30-வது வார்டில் போட்டியிடுகிறார்.

திமுக
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புவரை திமுக தரப்பில் ஒரு பேச்சு அடிபட்டது.. ஒருவேளை திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றால், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளரான வசந்தகுமாரிக்கே மேயர் பதவிகிடைக்கும் என்று சலசலக்கப்பட்டது.. அதேபோல, தாம்பரம் பகுதியில் இருப்பவருக்கு மேயர் பதவி கொடுத்தால் பல்லாவரம் பகுதியில் இருப்பவர்களுக்கு துணை மேயர் கொடுக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது..

ஜெகத் ரெட்சகன்
இன்னும் ஓபனாக சொல்லப்போனால், ஜெகத்ரட்சகன் மைத்துனன் ஜி.காமராஜுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கள நிலவரம் கூறியது.. ஒருவேளை பல்லாவரம் பகுதியில் இருப்பவருக்கு மேயர் பதவி கொடுத்தால் தாம்பரம் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான் துணை மேயர் கொடுக்கக்கூடும்... அந்த வகையில், எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் டி.காமராஜுக்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டது.

காமராஜ்
இப்போது விஷயம் என்னவென்றால், தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் பதவியை கைப்பற்ற திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மைத்துனர் காமராஜுக்கும், திமுக எம்எல்ஏ ராஜாவின் மைத்துனர் காமராஜுக்கும் இடையே போட்டி அதிகமாகி கொண்டே போகிறதாம்.. கட்சி மேலிடத்தில் ஜெகத்தும், ராஜாவும் தங்களின் செல்வாக்கு மூலம் காய்களை நகர்த்தி வருகின்றனர்... இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications