சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவிடமிருந்து ஏன்தான் வாங்குனோமோ.. நாங்குநேரியால் காங்கிரஸ் டென்ஷன்.. புலம்ப வைக்கும் கோஷ்டிகள்!

நாங்குநேரி தொகுதி வேட்பாளர் யார் என்பதில் காங்கிரஸ் குழம்பி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரியால் காங்கிரஸ் டென்ஷன்.. புலம்ப வைக்கும் கோஷ்டிகள்!-வீடியோ

    சென்னை: ஏன்தான் திமுகவிடம் இருந்து நாங்குநேரியை வாங்கினோம் என்று தமிழக காங்கிரஸ் புலம்ப தொடங்கிவிட்டதாம்!

    இடைத்தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாடியே, நாங்குநேரிக்காக முதலில் பேச்சை ஆரம்பித்தது உதயநிதி ஸ்டாலின்தான். இந்த தொகுதியை எங்களுக்கு விட்டு தந்துவிடுங்கள் என்று திருநாவுக்கரசிடம் பகிரங்கமாகவே மேடையில் கேட்டிருந்தார்.

    அப்போது ஆரம்பித்த இந்த விவகாரம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் படு சூடானது. கொஞ்சமும் விட்டு தருவது மாதிரியே ஒரு இடத்திலும் கேஎஸ். அழகிரி பேசவே இல்லை. அதனால் ஒரு கட்டத்தில் தனித்து போட்டியிடும் அளவுக்கும் துணிந்ததாக சொல்லப்பட்டது. இதற்கு காரணம், நாங்குநேரி காங்கிரஸின் மண் என்ற என்பதால் மட்டுமே!

    பிரச்சனைகள்

    பிரச்சனைகள்

    வேறு வழியின்றி திமுகவும், தொகுதியை விட்டு தந்துவிட்டது. எப்போது ஸ்டாலின் இந்த தொகுதியை காங்கிரசுக்கு என்று அறிவித்தாரோ அப்போதே அடுத்தடுத்து பிரச்சனைகள் வெடித்து கிளம்பி வருகின்றன. ஒரு பக்கம் எங்களுக்குதான் சீட் தர வேண்டும் என்று உள்ளூர்க்காரர்கள் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள் என்றால், மறுபக்கம் தொகுதிக்கு செலவு யார் செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தொகை

    தொகை

    ஏனெனில், கூட்டணி கட்சி என்ற முறையில் திமுக இதில் எந்த அளவுக்கு இறங்கி செலவு செய்யும் என உறுதியாக தெரியவில்லை. எப்படியும் தங்களின் மானமும் இந்த தொகுதியின் வெற்றியில் உள்ளதால் ஓரளவு தொகையை செலவிடும் என்றே நம்பப்படுகிறது. எனினும், பசை உள்ள பார்ட்டியைதான் வலைவீசி தேடி வேட்பாளர்களாக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

     சொந்த மண்

    சொந்த மண்

    வம்படியாக திமுகவிடம் தொகுதியை வாங்கிக்கொண்டு, அதில் தோற்றும்போனால் பெரிய சிக்கல் என்று காங்கிரஸ் நினைக்கிறது. தொகுதியின் சொந்த மண்ணில் தோற்றால், இது பின்னாளில் கட்சிக்கே என்று நன்றாகவே உணர்ந்துள்ளது.அது மட்டுமில்லை, இதன் பாதிப்பு உள்ளாட்சி தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பதையும் அறியாமல் இல்லை.

    செழிப்பு

    செழிப்பு

    எப்படியோ ரூ.20 கோடி வரை செலவு நிர்ணயிக்கப்பட்டதாம். அதனால்தான் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. இருவருமே செழிப்பானவர்கள். ஊர்வசி அமிர்தராஜ் சென்னையில் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். பெரும் தொகையை செலவிட தயாராகவும் இருக்கிறார். கன்னியாகுமரியை சேர்ந்த ரூபி மனோகரன் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இதனால் இவரும் தண்ணீராக செலவழிப்பார் என்று நம்பப்படுகிறது.

    முணுமுணுப்பு

    முணுமுணுப்பு

    இப்படி ஒரு கணக்கு போடப்படுகிறது என்றால், மற்றொரு பக்கம் வேறு மாதிரியான கணக்கு போடுகிறார்கள். இந்த பகுதி எப்படியும் ஒரு வருஷத்துக்கு மட்டும்தான் நீடிக்கும். ஒரு எம்எல்ஏ பதவிக்காக 20 கோடி வரைக்கும் செலவு செய்யணுமா? என்று பலர் முணுமுணுக்கிறார்களாம்.

    நிம்மதி இல்லை?

    நிம்மதி இல்லை?

    வசந்தகுமார் இந்த தொகுதியில் இருந்தவரை ஒரு பிரச்சனையும் இல்லை. அவரே எல்லாவற்றையும் பார்த்து கொண்டார். இப்போது, திமுக தொகுதியை விட்டுக் கொடுத்த நிலையில், இப்படி ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல், லோக்கல் தொகுதி ஆட்களுக்குதான் சீட் தர வேண்டும் என்று பிரச்சனை நடந்து வருகிறது. அதனால் திமுகவிடம் அடம்பிடித்து சீட் வாங்கியும் காங்கிரசில் நிம்மதி இல்லாத நிலைமைதான் உள்ளதாம்!

    English summary
    Who will be the Nanguneri Constitution Congress Candidate? The Congress is expected to announce the candidate today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X