அதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்..? அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..!
சென்னை: மதுசூதணன் மறைவை தொடர்ந்து அதிமுகவில் காலியாக உள்ள அவைத்தலைவர் பதவியை இஸ்லாமியர் ஒருவருக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனை நடந்திருக்கிறது.
இதன்மூலம் மீண்டும் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர்வதோடு திமுக செய்யாததை நாங்கள் செய்திருக்கிறோம் என எதிர்வரும் தேர்தல்களில் இஸ்லாமிய மக்களிடம் பரப்புரை செய்யவும் இ.பி.எஸ். திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் எம்.ஜி.ஆர். காலத்து சீனியரான தமிழ் மகன் உசேன் பெயர் இதில் பேசு பொருளாக உள்ளது.

அதிமுக அவைத்தலைவர்
அதிமுக அவைத்தலைவர் பதவி என்பது கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை வழிநடத்தக் கூடிய அதிகாரம் பெற்றது. இதேபோல் வேட்பாளர் தேர்வின் போது தலைமையுடன் ஒன்றாக அமர்ந்து நேர்காணல் நடத்தும் பெருமையும் அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு இருக்கிறது. இதனால் இந்தப் பதவிக்கு அதிமுக சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

யாரெல்லாம் போட்டி
யாரெல்லாம் அதிமுக அவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரிய பட்டியலே நீள்கிறது. செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா என சீனியர்கள் பெயர் வரிசை கட்டி நிற்கின்றன. இதில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே அதிமுகவில் முன்னுரிமை என்ற வாதத்தை உடைத்தெறியும் வகையில் செயல்பட விரும்புகிறது அதிமுக தலைமை.

சீனியர்கள்
அந்த வகையில் எம்.ஜி.ஆர். காலத்து சீனியரும், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவருக்கும் இசைந்து நடப்பவருமான தமிழ்மகன் உசேனின் பெயர் அதிமுக அவைத்தலைவர் ரேஸில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அன்வர் ராஜாவை பொறுத்தவரை சற்று தடாலடி கருத்துக்களை கூறுபவர் என்பதால் தமிழ் மகன் உசேன் போட்டியில் முந்துகிறார்.

ஆலோசனை
இஸ்லாமியர் ஒருவருக்கு அதிமுகவில் உயர்ந்த பதவியை கொடுப்பதன் மூலம் அதை வைத்து திமுகவுக்கு எதிரான அரசியல் ஆட்டத்தை நடத்தலாம் என கணக்குப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி.இஸ்லாமியர்களையும் அவர்களது வாக்குகளையும் விட்டு அதிமுக விலகிச் செல்வதாக ஏற்கனவே விமர்சனங்கள் உள்ள நிலையில் அவைத் தலைவர் பதவிக் கொடுப்பதன் மூலம் அதனை சரிகட்ட முடியுமா என ஆலோசிக்கிறார் இ.பி.எஸ்.

வாய்ப்பு
தமிழ் மகன் உசேனை பொறுத்தவரை ஏற்கனவே வக்பு வாரியத் தலைவராக இருந்தவர். வக்பு போர்டு கல்லூரி பணி நியமன விவகாரத்தில் அவரது பெயர் சர்ச்சையில் சிக்கியது மட்டும் அவருக்கான மைனஸாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக தலைமை வேறு முடிவெடுத்தால், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் அல்லது செம்மலைக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தேர்வு செய்யும் அதிகாரம்
இதனிடையே இன்னொரு தகவலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவராலும் அதிமுக அவைத்தலைவரை நியமிக்க முடியுமா என்பது தான். இந்த விவகாரத்தில் பெங்களூரு புகழேந்தியும், கோவை கே.சி.பழனிசாமியும் மேற்கொண்டு வரும் சட்டப்போராட்டத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications