"குலுங்குது" கோட்டை.. அடுத்த தலைமை செயலாளர் "இவர்தானா".. ஸ்டிரிக்ட் ஆபீசர் ஆச்சே.. கசியும் தகவல்கள்
சென்னை: தலைமை செயலாளர் ஐஏஎஸ் இறையன்புவின் பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது குறித்த விவாதங்கள், மறுபடியும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், இறையன்புவின் இடத்தை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி கொண்டிருக்கிறது.. சிவதாஸ் மீனா, அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன் இடையே போட்டி காணப்படுவதாக தெரிகிறது.

லிஸ்ட் பெரிசு: இந்நிலையில், தலைமைச் செயலாளர் பதவிக்கான பட்டியலில் சீனியராக ஹன்ஸ்ராஜ் வர்மா ஏற்கனவே உள்ளார். இவர் இப்போது தொழில் முதலீட்டு நிறுவனத்தில் (டிக்) கூடுதல் தலைமை செயலாளராகவும் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் சிவ்தாஸ் மீனா உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் இந்த லிஸ்ட்டில், உள்ளனர்.
இவர்களது பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இதில் 3 பேர் பெயர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை தமிழக அரசு தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும் என தெரிகிறது.. அந்தவகையில், அநேகமாக, அடுத்த தலைமை செயலாளராக தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக இருக்கும் சிவதாஸ் மீனா தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
சர்வதேச ஆய்வு: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிவதாஸ் மீனா, ஜெய்ப்பூரில் மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்தவர்.. ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.. 30 வருடங்கள் ஐஏஎஸ் பணியில் அனுபவம் மிக்கவர்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயல்களில் ஒருவரும்கூட.. முதல்வராக எடப்பாடி பொறுப்பேற்றதுமே, சிவதாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், திமுக அரசு அமைந்ததும், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். இதுவரை தன் பணியினை சிறப்பாக செய்து வருவதால், முதல்வரின் நன்மதிப்பையும் பெற்று வருகிறார்.. இதற்கு இன்னொரு காரணம், அரசு ஊழியர்களிடம் கண்டிப்பு காட்டுபவர் சிவதாஸ் குப்தா..
ராஜஸ்தான் மாநிலம்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழக கேடரில் இருக்கும் அதிகாரிகளில் மிகவும் சீனியர் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நெருக்கடியான சூழலில் திறமையாக செயல்படக் கூடியவர் என்ற நற்பெயரும் இவருக்கு உள்ளது.. அதைவிட முக்கியம் கறை படியாத கையை கொண்டு வர விரும்புவார். அதற்கு சிவதாஸ் மீனா ஐஏஎஸ் சரியான ஆளாக இருப்பார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...
இப்படியான யூகங்கள் ஒருபக்கம் வலம்வந்தாலும், திமுக அரசு மிக கவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் கையாள பார்க்கிறது.. காரணம், 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது திமுக அரசு.. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை களையும் விதத்திலும், மக்களின் நன்மதிப்பை மேலும் பெறும் விதத்திலும், ஆட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல அதிகாரிகளின் உதவி அவசியம் என்பதை மேலிடம் நன்கு புரிந்து வைத்துள்ளது.

ஸ்பீடு முதல்வர்: எனவே, அதற்கேற்பவே புதிய தலைமை செயலாளர் தேர்வு இருக்கும் என்றும், முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக நன்கு ஆலோசித்தே முடிவெடுப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்கிறார்கள். அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதற்கும் அரசு இயந்திரம் (government machinery) வேகம் குறையாமல் சீராக இயங்குவதற்கும் யார் பொருத்தமாக இருப்பார்களோ அவரைத்தான், தலைமை செயலாளர் போன்ற உயர் பதவிக்கு தேர்வு செய்வார்..
அதுமட்டுமல்லாமல், ஸ்டாலினின் வேகத்துக்கு, ஈடுகொடுக்க கூடியவர் சிவதாஸ் மீனா என்பதால், அவரது நேற்றுமுதல் வலுவாக அடிபட்டு கொண்டிருக்கிறது..
இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டி உள்ளது.. எடப்பாடி பழனிசாமி அன்று முதல்வராக பதவியேற்றபோதே, சிவதாஸ் மீனாவை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள ஆலோசித்ததாக சொல்லப்பட்டது.. ஆனால், அதற்குள் அவர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார்... எனினும், எடப்பாடியின் டெல்லி லாபியாக, சிவதாஸ் மீனாவை வைத்து காய்களை நகர்த்தவும் எடப்பாடி தரப்பில் ஒரு திட்டம் இருந்ததாம்.. ஆனால், மத்திய அரசு பணியில் சிவதாஸ் மீனா பிஸியாகிவிட்டதால், தமிழ்நாடு அரசுடனான தொடர்புகள் குறைந்துவிட்டதாக தெரிகிறது.
ஸ்பெஷாலிட்டி: இதற்குபிறகுதான், திமுக அரசு பொறுப்பேற்றதும் மறுபடியும் தமிழ்நாட்டிற்கு அழைத்து கொள்ளப்பட்டார்.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், சீனியர் கேட்டகரியில் உள்ள சிவதாஸ் மீனா போன்றோர் இந்த பொறுப்பில் இருந்தால் சரியாக இருக்கும் என்கிறார்களாம்.
அதுமட்டுமல்லாமல், நெருக்கடியான சூழ்நிலையிலும், திறம்பட செயல்படக் கூடியவர் என்பதுடன், ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்றவர் என்ற ஸ்பெஷாலிட்டியையும் சிவதாஸ் மீனா பெற்றவரும்கூட.. எனினும், தலைமை செயலாளர் பதவியில் யாரை அமர்த்துவது என்பதில், முதல்வர் ஸ்டாலின் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!












Click it and Unblock the Notifications