தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் தெரியுமா? ஸ்டாலின் சாஸ்ய் "இவரா?".. தலைநகரில் கவனம் பெறும் "தம்பதி"
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற ஆர்வம் எகிறி வருகிறது.. அத்துடன், டாப் 3 அதிகாரிகளின் பெயர்களும் வலுவாகவே அடிபடுகிறது.. இதற்கு நடுவில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடக்க போவதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுகிறது.
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பில் உள்ள டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். கடந்த வருடமே பணி ஓய்வு பெற இருந்த நிலையில், ஒரு வருடம் பணி நீட்டிப்பு பெற்றார்.. டிஜிபியாகவும் பணியாற்றினார்.
இப்போது அவர் டிஜிபி பொறுப்பிலிருந்து பணி நிறைவு செய்கிறார்... இதைனையடுத்து புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தநிலையில், தற்போது அவை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன.

ஆலோசனை கூட்டம்: இதன்படி புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடக்கிறது.. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பது முடிவாகும் என்று தெரிவதால், எதிர்பார்ப்புகள் கூடிவருகின்றன. புதிய டிஜிபி யார் என்பது குறித்து கடந்த சில மாதங்களாகவே, யூகங்களும், அனுமானங்களும் சோஷியல் மீடியாவில் வலம் வந்தபடியே இருந்தன.. இதற்காக முக்கிய அதிகாரிகள், அதற்கான அரசியல் காய்நகர்த்தலையும் துவங்கியிருந்தனர். அந்தவகையில் சிலரது பெயர்கள் பலமாகவே அடிபட்டு வந்தது.
டாப் - 10: இதனிடையே, புதிய டிஜிபிக்கான பரிந்துரை லிஸ்ட்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொன்னார்கள்... அந்த லிஸ்ட்டில், இடம்பெற்றிருந்தவர்கள் இவர்கள்தான்:
டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்பு துறை இயக்குநர் ஆபாஷ் குமார், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால், ஊர்காவல் படை டிஜிபி பி.கே.ரவி, மின்வாரிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஜிபி கே.வன்னிய பெருமாள், சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மத்திய உளவுத்துறை தென்மண்டல இயக்குநர் டி.வி.ரவிசந்திரன், இந்தோ- திபெத் எல்லை காவல்படை டிஜிபி ராஜீவ் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்த லிஸ்ட்டில் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. நாளை நடைபெற போகும் ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இறுதி செய்து, தமிழ்நாடு அரசிடம் அந்த லிஸ்ட்டை ஒப்படைக்கும்.. இந்த 3 பேரில் இருந்து, ஒருவரை தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும்.
சீனியர்கள்: அதாவது, தமிழக கேடரில் டிஜிபிக்களாக உள்ள மூத்த அதிகாரிகள், துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் இருக்கும் 3 அதிகாரிகளை, தமிழக அரசு தரப்பில் பரிந்துரைத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு விதிகளின் படி அவர்களில் ஒருவர் தமிழக அரசு டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
இப்போதைக்கு தமிழக காவல் துறையில் 10 டிஜிபிக்கள் இருக்கிறார்கள்.. இதில், சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏகே விஸ்வநாதன் என 3 அதிகாரிகள் பெயர் டாப்பில் உள்ளது.. இந்த ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன..
தம்பதி: அதேபோல, டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான இந்த பரிந்துரை லிஸ்ட்டில், தம்பதிகளான முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் + தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால் ஆகிய இருவருமே இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்து வருகிறது.
3 பேரில் ஒருவர் டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், உடனடியாக அவரது பெயர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.. வருகிற 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் அரசு விடுமுறையாகும்.. 30-ம் தேதி சைலேந்திரபாபுவுக்கு பிரிவு உபச்சார விழா நடக்க போகிறது..
க்ளைமேக்ஸ்: அதனால், 28-ம் தேதியே, தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியின் பெயர் வெளியிடப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.. ஆனால், நம்முடைய தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பது நாளை டெல்லியில் நடக்கும் கூட்டத்திலேயே தெரியவரலாம் என்றும் அனுமானங்கள் கூறுகின்றன.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications