தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்…டெல்லியில் ஆலோசனை..இறையன்பு, அமுதா, சைலேந்திரபாபு பங்கேற்பு
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி தேர்வு செய்யும் ஆலோசனைக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் டெல்லி செல்கின்றனர்.
தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து இந்த முக்கியமான பொறுப்பில் அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இன்று டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பது உறுதியாகிவிடும்.
இதற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ், உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு தலைமை பொறுப்பான டிஜிபி பதவிக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைந்தபோது காவல்துறை தலைமை இயக்குநர் பொறுப்பில் முதல்வர் ஸ்டாலின் யாரை நியமனம் செய்ய விரும்புகிறார் என்ற ஆர்வம் அத்தனை பேர் மத்தியிலும் எழுந்த நிலையில் சைலேந்திரபாபு ஐபிஎஸ் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த பரிச்சயம், மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பேச்சாளர் என்ற அறிமுகம் அவரது நியமனத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.
சைலேந்திரபாபு வரும் 30ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில் அடுத்த டிஜிபியாக யாரை நியமிக்க ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். தமிழ்நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், தலைமைச் செயலாளர் இறையன்பு, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு செல்கின்றனர்.
அதில் , பணி மூப்பு, தகுதி, திறமை அடிப்படையில் முதல் 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் தேர்வு செய்து தமிழக அரசிடம் வழங்குவர். அதில் இருந்து ஒருவரை தமிழ்நாட்டின் டிஜிபியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யலாம். அந்த பட்டியலில் ஊர் காவல் படை தலைவராக உள்ள பி.கே.ரவி, சென்னை காவல் ஆணையராக உள்ள ஷங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக உள்ள ஏ.கே.விஸ்வநாதன், டெல்லி காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யாரேனும் ஒருவர் தமிழகத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications